ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!
கொரோனா வைரஸ்,
உலகையே ஆட்டிப்படைத்துக்
கொண்டிருக்கிறது. கடந்த மூன்று
மாதங்களாக உலகம் முழுவதும்
பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி
வரும் இந்த வைரஸ் எங்கிருந்து,
எதிலிருந்து பரவியது என்பது
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளும்
ஆராய்ச்சி அளவிலேயே
இருக்கின்றன.
இன்றைய நிலையில்,
211 நாடுகளில் கொரோனா
வைரஸ் தாக்கம் உள்ளதாக
சொல்கிறது உலக சுகாதார
நிறுவனம். 2020 ஏப்ரல் 7ம் தேதி
நிலவரப்படி, உலகம் முழுவதும்
கொரோனா வைரஸ் தொற்றால்
12 லட்சத்து 14466 பேர்
பாதிக்கப்பட்டு உள்ளனர்.
67 ஆயிரத்து 767 பேர் பலியாகி
உள்ளனர். இத்தாலி, சீனா,
அமெரிக்கா ஆகிய நாடுகள்
பெரும் இழப்பைச் சந்தித்து
வருகின்றன.
கொரோனா தாக்குதலில் இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் ஏப். 7ம் தேதி வரை 4281 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால்...