
சேலம்: அமைச்சருக்கு எதிராக அணிதிரளும் கவுன்சிலர்கள்!
சேலம் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடந்த மாதம், ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயரை புகார்களால் புரட்டி எடுத்த சம்பவத்தின் பின்னணியில் மாவட்ட அமைச்சருக்கு எதிரான அதிருப்திதான் காரணம் என்ற பரபரப்பு தகவல்கள் கிளம்பி உள்ளன.
சேலம் மாநகராட்சி 43வது வார்டுகவுன்சிலர் குணா என்கிற குணசேகரன்.வழக்கறிஞரான இவரை, 'சார்' என்றஅடைமொழியுடன் கட்சியினர் குறிப்பிடுவர்.தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராகஉள்ள வழக்கறிஞர் ராஜேந்திரனைஎதிர்த்து அரசியல் செய்யக்கூடியவர்.இருமுறை மண்டலக்குழுத்தலைவராக இருந்தவர்.இப்போதும், திமுக தலைவர்மு.க.ஸ்டாலினின் 'குட்புக்'கில்இருப்பவர்.
குணசேகரன்
இவர், வழக்கமாக மாமன்றகூட்டத்தில் வருவதும் தெரியாது;செல்வதும் தெரியாது.சைலண்ட் மோடிலேயேஇருக்கக்கூடிய குணசேகரன்,கடந்த பிப். 25ம் தேதி நடந்தமாமன்ற கூட்டத்தில் திடீரென்றுபொங்கி எழுந்துவிட்டார்.
மேயர் முதல் காண்டிராக்டர்கள்வரை ஒரு பிட...