Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தகவல்

கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

கோவிட் தடுப்பூசி இன்னும் போடலையா? ஏப்ரல் 30ல் மீண்டும் வாய்ப்பு!

சேலம், தகவல், முக்கிய செய்திகள்
கோவிட் நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக, சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப். 30) மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. மொத்தம் 1392 மையங்களில் இந்த முகாம் நடக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு முகாம்களை மீண்டும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.   இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 28வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஏப். 27) நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. அவர் பேசியது:   கோவிட் தடுப்புப் பணிக
விபத்தில் பெற்றோரை இழந்த அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை!

விபத்தில் பெற்றோரை இழந்த அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை!

கல்வி, தகவல்
விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.   பொருளாதார வசதியின்றி ஒரு குழந்தை படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், முழுமையான பள்ளிக்கல்வியை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில், தமிழக அரசு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உச்சபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நீண்ட காலமாக செயல்படுத்தி வருகிறது.   இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:   கேள்வி: 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்க என்னென்ன தகுதிகள்?   பதில்: வருவாய் ஈட்டி வந்த தந்தை அல்லது தாய் ஆகியோரில் ஒருவரோ அல்லது இருவருமோ விபத்தில் உயிரிழந்து இருந்தாலோ அல்லது அவர்களால் இனி
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு, கடந்த செப். 12ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இத்தேர்வை, இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் பேர் எழுதினர். இதன் தற்காலிக விடைகள் (ஆன்சர் கீ), அக். 15ம் தேதி வெளியிடப்பட்டது. இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.   வழக்கமாக நீட் தேர்வு நடத்தப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு, நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள், நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. &nb
இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

இளநிலை துணை மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட இளநிலை துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட நேரடி மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி அத்துறையைச் சார்ந்த ஏராளமான தொழில்சார் துணை மருத்துவப் படிப்புகளும் இருக்கின்றன. சான்றாக, பிஎஸ்சி செவிலியர், ரேடியோதெரபிஸ்ட், இமேஜிங் டெக்னீஷியன் உள்ளிட்ட படிப்புகளைச் சொல்லலாம். எந்த விதமான நுழைவுத்தேர்வுகளுமின்றி, முற்றிலும் பிளஸ்2 மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே இதுபோன்ற துணை மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில், இளநிலை பிரிவில் துணை மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் நடப்பு 2021 - 202
பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

பிரிந்தால் அக்கணமே செத்திடணும்! என்ன சொன்னாள் தலைவி?

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், தகவல், முக்கிய செய்திகள்
எத்தொகை கொடுத்தாலும் ஈடாகாது நற்குறுந்தொகைக்கு. குறுந்தொகையானாலும், நெடுந்தொகையாக சிலாகித்துப் பேசிக்கொண்டே இருக்கலாம். 'இலக்கியம் பேசுவோம்' பகுதியில் குறுந்தொகையில் இருந்து இன்னொரு பாடலோடு வந்திருக்கிறேன். உலகம் முழுவதும் எத்தனை முகங்கள்... எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரு சொல் கேட்ட மாத்திரத்திலேயே நமக்குள் ஒரு கணம், பேருவகையை தந்து விட்டுப் போகும். அதுதான், காதல்.   அதனால்தான் மகாகவி பாரதி, 'ஆதலால் காதல் செய்வீர் உலகத்தீரே' என அறைகூவல் விடுத்தான். காதலினால் கலவி உண்டாம்; காதலினால் கவலைகள் போம்' என்றான். உள்ளத்தால் கூடிய காதலின் உச்சக்கட்ட அக்னாலெட்ஜ்மென்ட்தான், உடல் தீண்டல்.   உள்ளத்தால் இணைந்த பிறகு, உடல்தீண்டல் நிகழ்கிறது. அங்கே, ஈருடல் ஓருயிராகிறது. தலைவனும், தலைவியும் கட்டி அணைத்துக் கொண்டால் அங்கே காற்றுகூட இடையறுத்துச் செல்லக்கூடாதாம். அந்தளவு
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 23ல் மாணவர் சேர்க்கை தொடக்கம்!

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், வரும் 23ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொடங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் சேர ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில், நடப்புக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை வரும் 23ம் தேதி முதல் தொடங்க கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.   செப். 3ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து அந்தந்தக் கல்லூரி முதல்வர்கள் ஆன்லைன் அல்லது நேரடி கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.   பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ், இதர சான்றிதழ்களை சரிபார்த்த பின்னரே சேர்க
கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

கொரோனா தொற்றால் இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவி!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  இஎஸ்ஐசி திட்டத்தில் சந்தாதாரராக உள்ள ஒரு தொழிலாளி, கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்திருந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் முழுக்க நிவாரண உதவித்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர்கள் நலன்களுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் இபிஎப்ஓ மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் எனப்படும் இஎஸ்ஐசி (Employee's State Insurance Corporation). இரண்டுமே தொழிலாளர் நலன்களுக்கானதுதான் என்றாலும், ஒவ்வொன்றும் அதன் அளவில் தனிச்சிறப்பு வாய்ந்ததுதான். பணியில் இருக்கும் தொழிலாளர் வேலை இழந்த பிறகோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ அவருக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவது இபிஎப்ஓ (Employees' Provident Fund Organisation). அதே தொழிலாளி, பணியில் இருக்கும்போதே அவருக்கு சமூகப்பாதுகாப்பை ஏற்படுத்
தொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி! இளைஞர்களுக்கு அழைப்பு!!

தொழில் தொடங்க 5 கோடி வரை கடனுதவி! இளைஞர்களுக்கு அழைப்பு!!

தகவல், முக்கிய செய்திகள்
'நீட்ஸ்' திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்' (நீட்ஸ்) என்ற திட்டம், அந்தந்த மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை தொழில்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.   இத்திட்டத்தில் கடனுதவி பெற, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுமில்லை. பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழில் பயிற்சி தேர்ச்சி பெற்ற 21 வயது முதல் 35 வரை உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு மட்டும் அதி
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 23 நாள்தான் அவகாசம்!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் 23 நாள்கள் மட்டுமே அவகாசம் உள்ளது.   இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். வருகிற 2020ம் ஆண்டு மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் பதிவு செய்யும் நடைமுறைகள் டிசம்பர் 2, 2019ம் தேதி தொடங்கியது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவேற்றம் செய்ய கடைசி நாள், டிசம்பர் 31ம் தேதி ஆகும். நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. இதற்கென தொடங்கப்பட்டுள்ள தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளன. மாதிரி விண்ணப்பமும் வழங்கப்பட்டுள்ளது.   இத்தேர்வுக்கு விண்ண
விளையாட்டு வீரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் தபால் துறையில் வேலை!

விளையாட்டு வீரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் தபால் துறையில் வேலை!

தகவல், முக்கிய செய்திகள்
பிளஸ்2 முடித்த, விளையாட்டுத்துறையில் சிறந்த நிலையில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துறையில் காலியாக உள்ள Multi tasking staff, Postman, Postal assistant / Sorting assistant பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 231 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பு கடந்த 25.11.2019ம் தேதியன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க, 31.12.2019ம் தேதி கடைசி நாள்.   முற்றிலும் தகுதி (meritorious) அடிப்படையில் மட்டுமே இப்பணியிடங்கள் நிரப்பப்படும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் தமிழ்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.   காலியிடம் மற்றும் ஊதிய விவரம்:   போஸ்டல் அசிஸ்டன்ட்: 89 சம்பளம்: ரூ.25500 - ரூ.81100 போஸ்ட்மேன்: 65 சம்பளம்: ரூ.21700 -