Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

தன்னம்பிக்கை

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

கூலியாக இருந்து தொழில்முனைவோர் ஆன மலர்மணி!; ”இங்கே வேஸ்ட் என்று எதுவுமே இல்லை… மனுஷன தவிர!”

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''இந்த உலகத்துல நாம பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் காகிதம், தகரம், உடுத்தின பிறகு வீசப்படும் துணிமணிகள்னு எல்லாமே மறுசுழற்சி மூலமாக திரும்பவும் ஏதோ ஒரு ரூபத்துல பயன்பாட்டுக்கு வந்துடுது. அதனால இங்கே வேஸ்ட்னு எதுவுமே இல்ல. செத்ததுக்கப்புறம் எரித்து சாம்பலாகிடற மனுஷங்கள வேணும்னா வேஸ்ட்னு சொல்லலாம்,'' என போகிற போக்கில் வாழ்க்கையின் ஆகப்பெரும் தத்துவத்தை சொல்கிறார் மலர்மணி (37).   கொடிய வறுமையும், அனுபவங்கள் கற்றுக்கொடுத்த பாடமும்தான் அவரை இந்தளவுக்கு பக்குவமாக பேச வைத்திருக்கிறது. வாழ்வியல் சூழலுக்கு ஏற்பதான் ஒருவரின் சிந்தனையும் அமைகிறது. அதற்கு மலர்மணியும் விதிவிலக்கு அன்று.   அவர் எதற்காக பழைய காகிதம், பழைய இரும்பை உதாரணமாகக் கூறினார் என்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை.   சேலம் மாவட்ட...
‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

‘உழைக்கும் பெண்களுக்கு அமுதாவும் முன்னத்தி ஏர்தான்!’

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
-மகளிர் தின ஸ்பெஷல்- ''ஒருவருக்குச் சாத்தியமாவது எல்லோருக்குமே சாத்தியமாகும்'' என்பதை மகாத்மா காந்தி, வழிநெடுகிலும் நம்பி வந்திருக்கிறார். காந்தியின் நம்பிக்கை, யதார்த்த வாழ்விலும் பலருக்கு சாத்தியமாகி இருக்கிறது என்பதை என் கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.   இதில் வேடிக்கை என்னவென்றால், நான் சந்தித்த வெற்றிகரமான குடும்பத் தலைவிகள் பலருக்கும் காந்தியைப் பற்றிய பிரக்ஞை எல்லாம் கிடையாது. உழைக்கத் தயங்காத எவர் ஒருவரையும் இந்த பூமி நிராதரவாக விட்டுவிடுவதே இல்லை. சிலர் ஏணியை, கூரை மேல் எறிகிறார்கள். சிலர், வானத்தை நோக்கி வீசுகிறார்கள். ஆனால், 'உள்ளத்தனையது உயர்வு' என்பதுதான் நிஜம்.   சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கட்டெறும்பு காடு பகுதியைச் சேர்ந்த அமுதாவும் (34), அவருடைய கணவர் கோவிந்தராஜூம் கடின உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இரண்டு மகள்...
இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

இயற்கை விவசாயியாக மாறிய இன்ஜினீயர்!

சேலம், தன்னம்பிக்கை, முக்கிய செய்திகள், விவசாயம்
வெளிநாட்டு வேலை கனவில் மிதக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில், பிரபாகரன் தனித்து தெரிகிறார். அடிப்படையில் சுயத்தை விரும்பக்கூடிய இவர், இன்றொரு வெற்றிகரமான இயற்கை விவசாயி. 'ஜீரோ பட்ஜெட்' எனப்படும் செலவில்லா வேளாண்மை மூலம் கணிசமாக சம்பாதிக்க முடியும் என்பதை நிரூபித்தும் வருகிறார். சேலம் அம்மாபேட்டை மெத்தை தெருவில் வசிக்கிறார் பிரபாகரன், வயது 38. எம்.இ., கணினி பொறியியல் படிப்பை முடித்த கையோடு, அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காக்னிஸன்ட் (சிடிஎஸ்) மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். பழகுநர் -குழுத்தலைவர் - திட்ட மேலாளர் வரை பதவி உயர்வுபெற்றார். நிறுவனத்தின் சார்பில், அமெரிக்காவுக்கும் செல்கிறார்...அங்கு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினார். அங்கு பணியாற்றிய காலத்தில் மாதம் ரூ.4.50 லட்சம் ஊதியம் பெற்று வந்த பிரபாகரன், திடீரென்று பணியில் இருந்து விலகினார். அதன்பின் அவர் தொட...
தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

தோல்விகளும் சுகமானவைதான்..! – தில்லைக்கரசி நடராஜன் எழுதும் தன்னம்பிக்கை தொடர்

சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்
-தில்லை தர்பார்- பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களுக்கு எதிரான போர்க்கொடியா? இல்லையில்லை. பெண்கள் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லா விஷயங்களிலும் சுய முன்னேற்றம் பெற்று குடும்பத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்துவதுதான் பெண்கள் முன்னேற்றம். எனதருமை தோழிகளே... தோற்றுப்போங்கள். ஆச்சரியமாக உள்ளதா? நீங்கள் ஒவ்வொரு முறையும் தோற்கும் போதெல்லாம் மனது வலிக்கும்; ஆனாலும், தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவ பாடங்கள், அடுத்தடுத்த புதிய முயற்சிகளில் ஈடுபட போதுமான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும்.   ஒருவேளை, நீங்கள் தோற்காமலே போயிருந்தால் உங்கள் வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.   தோல்விகளும்கூட சுகமானவைதான். தோற்றுப்போய் அதிலிருந்து மீண்டு வெளிவரும்போது உங்களில் ஒரு புதிய மாற்ற...
பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர்
திட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன். இவர், சேலம் சாரதா கல்லூரிச்சாலை எல்ஆர்என் காலனியில் உள்ள டிஎம்எஸ் கண் மருத்துவமனையின் இயக்குநர். இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள், சேலம் சிட்டிசன் ஃபோரம், இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), சேலத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் 'இன்டேக்' உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறார். லட்சுமி சித்தார்த்தனின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே பாரம்பரியம் மிக்கது. இலங்கையின் கொழும்பு நகரம்தான் இவருடைய பூர்வீகம். ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகையான 'வீரகேசரி' நாளேட்டின் நிறுவனரான நடேசன் அய்யாவின் பேத்திதான் இவர். இவருடைய கணவர் சித்தார்த்தன். சேலம் அறிந்த பிரபல கண் மருத்துவர். காங்கிரஸ் கட்சிய...
இன்றைய பெண்கள்  நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

இன்றைய பெண்கள் நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

தன்னம்பிக்கை, மகளிர், முக்கிய செய்திகள்
("புதிய அகராதி", ஏப்ரல்-2017 இதழில்) இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் கனடா நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு, நான் பணிபுரிந்து வந்த சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மூலம் எனக்குக் கிடைத்தது. (வகுப்பறையில் வாசிக்கவும் வாழ்க்கையில் சுவாசிக்கவும் கற்றுக்கொடுத்த என் குருகுலத்திற்கு நன்றிகள்). கனடாவில் டொராண்டோ ஹம்பர் பல்கலைக் கழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்கான மூன்று வாரப்பயிற்சி எங்களுக்கு வழங்கப்பட்டது. முதல் நாள் அனுபவமே மொத்த பயிற்சியின் சாராம்சத்தை சொல்லிக்கொடுத்தது. அன்று காலை இடைவேளையின்போது நானும் என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த இரண்டு பெண் ஆசிரியர்களும் கழிப்பறைக்குச் சென்றிருந்தோம்.   அங்கே மிக அழகான செல்லுலாய்டு பொம்மை கணக்காய் ஓர் இளம்பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். "இவ்வளவு அழகான பெண் கழிப்பறையைச் சுத்தம் செய்து க...
உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்

உப்பில்லாமல் சாப்பிட முடியாது! நட்பில்லாமல் வாழ முடியாது!! – தில்லைக்கரசி நடராஜன்

சிறப்பு கட்டுரைகள், தன்னம்பிக்கை, மகளிர்
- தில்லை தர்பார் -   தன்னம்பிக்கை என்பது கடையில் வாங்கும் பொருளல்ல. ஆனாலும், அதைப்பெற என்ன செய்வது என்று யோசித்து பார்த்தபோது உடனே ஞாபகம் வந்தது ஓர் அருமையான நண்பரின் பெயர்.   எட்டு வருடங்களுக்கு முன்னால் திடீரென்று என் கணவருக்கு ஒரு விபத்து நேர்ந்தது. உதவிக்கு ஓடி வந்தது நண்பர் கூட்டம். உறவுகள் வேண்டாமென்று சொல்லவில்லை. உறவுகளைத் தாண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நாம் துன்பப்படும்போது, 'நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் சொல்லும் நண்பர்களின் வார்த்தைகள் பெரிய டானிக்.   பல வருடங்களுக்கு முன்னால், பொறியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நான்கு மாணவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள். அதில் மூன்று பேருக்கு அவர்கள் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது வேலை கிடைத்து விட்டது. அந்த மூன்று பேரில் ஒருவன் என்னைப் பார்க்க வந...