கைகொடுத்த பருவ மழை! சேலத்தில் நெல் நாற்று நடவு மும்முரம்!
தென்மேற்கு, வடகிழக்குப் பருவமழை போதிய அளவில் பெய்ததால், சேலம் மாவட்டத்தில் பரவலாக நெல் நாற்று நடவும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பூகோள ரீதியாகவே, தமிழகம் மழை மறைவு பிரதேசமாக உள்ளதால், பருவ மழைக்காலங்களில் கூட சராசரியைவிட குறைவாகவே மழைப் பொழிவு இருக்கிறது. புயல், வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் மழை கிடைத்தால்தான் உண்டு என்கிற நிலைதான் கடந்த சில ஆண்டுகளாக நிலவுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழைக்காலமும், அதன்பிறகான வடகிழக்குப் பருவமழைக்காலமும் விவசாயிகளின் நம்பிக்கையை பொய்யாக்காமல் ஓரளவுக்கு கைகொடுத்துள்ளது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இயல்புக்கு அதிகமாகவே மழைப்பொழிவு இருந்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியதுடன், விவசாயக் கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, தமிழர் த