தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!
ஆடி மாதப் பிறப்பை, கொங்கு மண்டல மக்கள் வீடுகள்தோறும் தேங்காய் சுடும் பண்டிகை மூலம் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினர்.
ஆடி மற்றும் மார்கழி மாதங்களில்
திருமணம், புதுமனை புகுதல்,
புதிய வணிகம் உள்ளிட்ட
புதிய தொடக்கங்களை
சாதி இந்துக்கள் மேற்கொள்வதில்லை.
புதுமணத் தம்பதிகளுக்கு ஆகாத
மாதமாகவும் ஆடி மாதம் உள்ளது.
இப்படி ஆடியைப் (ஆடி கார் அல்ல)
பற்றி வெவ்வேறு நம்பிக்கைகள்,
கற்பிதங்கள் விரவிக் கிடந்தாலும்,
ஆடி மாதத்தில்தான் அம்மன் கோயில்களில்
விழாக்கள் களைகட்டுகின்றன.
வணிக நிறுவனங்கள் ஆடி தள்ளுபடி
என விசேஷ சலுகைகளும் வாரி
வழங்குகின்றன.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க,
ஆடி மாதப் பிறப்பை 'தலையாடி'
என்ற பெயரில் கொங்கு மண்டல மக்கள்
தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர்.
ஆடி மாதம் முதல் தேதியை குறிக்கும் வகையில்
'தலை ஆடி' என்கிறார்களே தவிர,
தஞ்சாவூர் தலையாட்ட