Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

மற்றவை

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீதான, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று (நவ. 22) 116ஆவது சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரேம்குமார். பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். துடிப்பான இளைஞரான இவர், மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் இடையே அறுபட்டு இருந்த தொடர்பை மீண்டும் புத்துயிரூட்டினார். மாணவர்கள் அன்றாடம் நூலகத்தைப் பயன்படுத்துவதை நடைமுறைப் படுத்தியதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தி வந்தார். மாணவர்கள் சிலருக்கு தேர்வுக்கட்டணம் கூட செலுத்தி இருக்கிறார். பல்கலையில் நடக்கும் விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வந்ததை துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட...
யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

யாருக்கு உங்கள் வாக்கு? நில்… கவனி… செல்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள்
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்றாலே அது இந்தியாவின் பொதுத்தேர்தல்கள்தான். 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கின்றன. முதல்கட்டத் தேர்தல் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி நடக்கிறது. இந்திய சமூக வாழ்வியலில், திருமண உறவு புனிதமாகப் போற்றப்படுகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் திருமண பந்தத்தைக்கூட நீதிமன்றங்கள் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து முடிகிறது. அதற்கான சட்டப்பரிகாரம் நம்மிடத்தில் உள்ளது. ஆனால் 140 கோடி மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய மக்களவை உறுப்பினர்களை நாம் பெரும்பான்மை அடிப்படையில் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன்பின், 5 ஆண்டுகளுக்கு அவர்களை திரும்ப அழைக்கவே முடியாது. இதற்கு யாதொரு சட்டப்பரிகாரமும் இல்லை. வாக்களித்து தேர்ந்தெடுக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ள தேசத்தில் அவர்களை நீக்குவதற்கான அ...
இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!

இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் தென்றலோடும் தெம்மாங்கு பாடல்களோடும் மண்மணம் கமழ வெளியான படம்தான், 'புது நெல்லு புது நாத்து'. 1991ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. சுகன்யா, ராகுல், நெப்போலியன், பொன்வண்ணன், ராம் அர்ஜூன், ருத்ரா உள்ளிட்ட முதன்மைப் பாத்திரத்தில் நடித்தவர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு புதிய நாற்றுகள்தான். பாரதிராஜவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாதான் இந்தப் படத்திற்கும் இசை. கங்கை அமரன், முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து இளையராஜாவும் இந்தப் படத்திற்காக சில பாடல்களை எழுதி இருக்கிறார். படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. அதிலும், கங்கைஅமரன் எழுதிய, 'சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே...' என்ற பாடல், அந்தக் காலக்கட்டத்தில் திருவிழாக்கள், கல்யாண வீடுகள், விருந்து விழாக்கள் என ஒலிக்காத இடமே இல்லை. பேருந்து பயணத்தின் 'பிளே லிஸ்...
மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

மக்களே போல்வர் கயவர்…! ஊடகங்களும் அத்தகையவர்களே!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மக்களவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாள்களில் வர உள்ள நிலையில், செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், தேர்தல் கள ஆய்வு நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனம், பெடரல் இணைய ஊடகம் மற்றும் ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. மக்களவைத் தேர்தல்-2024ல் தமிழகத்தில், திமுக 38.35 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், அதிமுக 17.26 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவிக்கிறது, புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு. நாம் தமிழர் கட்சி 7.26 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடிக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், தொண்டர்கள் மற்றும் கட்டமைப்பு ரீதியாக வலிமையாக உள்ள அதிமுகவைக் கா...
சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சேலம், தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
கோவை அருகே, சர்வோதய சங்கத்தில் போலி கைத்தறி நெசவாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது சிபிஐ போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. விரைவில், இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் மீது எப்ஐஆர் பாய்கிறது. கோவை அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி, பீளமேடு, கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், நீலாம்பூர், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், இடையர்பாளையம், ராம் நகர் மற்றும் ஊத்துக்குளி, ஸ்ரீவில்லிப்புத்தூர், சுப்ளாபுரம், செங்கோட்டை, தேனி ஜக்கம்பட்டி உள்பட 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர், தினக்கூலி பணியாளர்கள் என மொத்தம் 500 பேர் வேலை செய்து வருகின்றனர். தலைமையிடம் மற்றும் கிளைகளில் 1000 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளதா...
திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

திண்ணை: அப்படி என்னய்யா செஞ்சிட்டான் என் கட்சிக்காரன்…?

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
மார்கழி பொறந்துடுச்சு. சீசனுக்கு இதமா இருக்கட்டுமேனு சுடச்சுட ஒரு சங்கதிய கொண்டு வந்திருக்கேன்னு சொன்னாரு நம்ம பேனாக்காரர். ''சொல்லுங்களேன்...கேட்போம்'' - இது நக்கல் நல்லசாமி.   ''அறிவுக்கோயில் தலைவரு போன பிப்ரவரி மாசம் சேலத்துல அனைத்துத் துறை முக்கியஸ்தர்களுடன் ஆய்வுக்கூட்டம் போட்டாரே ஞாபகம் இருக்கா...?,'' ''ஓ... நல்லா ஞாபகம் இருக்கு. கள ஆய்வில் தலைவருனு சொல்லிட்டு, கடவுள் அன்பு, யுசி டீம் எல்லாம் ஆய்வு நடத்துனதே... தலைவரு பேரளவுக்கு சும்மா உட்கார்ந்துட்டுப் போனாரே... அந்தக் கூட்டத்தைதானே சொல்றீங்க... நல்லா ஞாபகம் இருக்கு...,''   ''நக்கலாரே... உமக்கு குசும்பு ஜாஸ்தியா''   ''அன்னிக்கு சாயங்காலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வளைவு முன்னாடி நின்னு அறிவுக்கோயில் தலைவரு, அவரோட அப்பா நினைவாக செல்பி எடுத்துக்கிட்டாரு. புரோக்கர் ஊடகங்கள் எல...
திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

சேலம், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,'' என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர். காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி. ''பெரியார் பல்கலையில் முருகக்கடவுள் பேர் கொண்ட அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி சில புத்தகங்களை தொகுத்து வெளியிட்டு இருந்திருக்கிறார். அவரும்கூட கருப்புச்சட்டை சிந்தனாவாதிதான். இந்த புத்தகம் வெளியிட்டு, அதையெல்லாம் விடியல் தலைவர்கிட்ட காட்டி அந்த பேராசிரியர் வாழ்த்தெல்லாம்கூட வாங்கிய படங்கள் பொதுவெளியில் வந்துச்சு,'' ''அது தெரிஞ்ச சேதிதானே. மேலே சொல்லுங்க'' அவசரம் காட்டினார் நக்கல் நல்லசாமி. ''பல்கலைக்கழக சாசன விதிகளின்படி, முன்அனுமதி பெற்றுதான் புத்தகம் வெளியிடணுமாம். அந்த பேராசிரியர் பர்...
இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துதான் இருக்கும். உலகில் உள்ள நாடுகளில் சுமார் 70 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது, தனிநபர் வருமானத்தை வைத்துதான் கணக்கிடப்படுகிறது. தனிநபர் வருமானம் 15 ஆயிரம் டாலர்கள் உள்ள நாடுகளை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கிறோம். மீதமுள்ள நாடுகளை வளரும் நாடுகள், வளர்ச்சி பெறாத நாடுகள் என்று இரு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறோம். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே உலகில் பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவீட்டை வைத்துதான் தன்னிறைவு பெற்ற நாடு, வளர்ந்த நாடு, வளர்கின்றன நாடுகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. நடப்பு 2023ம் ஆண்டில், அமெரிக்காவின் ஜிடிபி 26 டிரில்லியன் டாலர். சீனா 19 டிரில்லியன் டாலர். ஜெர்ம...
குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

குத்தகை வாக்காளர்கள்! திராவிட மாடலின் ‘நேர்மையான’ திருட்டு!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் களம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று (பிப். 25, 2023) மாலையுடன் பரப்புரை ஓய்கிறது. பிப். 27ம் தேதி, வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், திமுக, அதிமுக இடையேதான் வழக்கம்போல் நேரடி போட்டி நிலவுகிறது.   மாற்று அரசியலை முன்னெடுக்கும் பாமக தலைவர் ராமதாஸ், நாம் தமிழர் சீமான் போன்றோர், இடைத்தேர்தலே அவசியமற்றது எனத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.   ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் களத்தில் முண்டா தட்டுவது என்னவோ திமுகதான். கடந்த 21 மாத திமுக ஆட்சிக்கு உரைகல்லாக இந்த இடைத்தேர்தலை ஆளும்தரப்பு கருதுகிறது. அதனால் ம...
தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

தேங்காய் சுட்டு தலையாடிக்கு வரவேற்பு! இது கொங்கு மண்டல ஸ்பெஷல்!

கலாச்சாரம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆடி மாதப் பிறப்பை, கொங்கு மண்டல மக்கள் வீடுகள்தோறும் தேங்காய் சுடும் பண்டிகை மூலம் உற்சாகமாக வரவேற்றுக் கொண்டாடினர்.   ஆடி மற்றும் மார்கழி மாதங்களில் திருமணம், புதுமனை புகுதல், புதிய வணிகம் உள்ளிட்ட புதிய தொடக்கங்களை சாதி இந்துக்கள் மேற்கொள்வதில்லை. புதுமணத் தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகவும் ஆடி மாதம் உள்ளது.   இப்படி ஆடியைப் (ஆடி கார் அல்ல) பற்றி வெவ்வேறு நம்பிக்கைகள், கற்பிதங்கள் விரவிக் கிடந்தாலும், ஆடி மாதத்தில்தான் அம்மன் கோயில்களில் விழாக்கள் களைகட்டுகின்றன. வணிக நிறுவனங்கள் ஆடி தள்ளுபடி என விசேஷ சலுகைகளும் வாரி வழங்குகின்றன.   இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ஆடி மாதப் பிறப்பை 'தலையாடி' என்ற பெயரில் கொங்கு மண்டல மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வருகின்றனர். ஆடி மாதம் முதல் தேதியை குறிக்கும் வகையில் 'தலை ஆடி' என்கிறார்களே தவிர, தஞ்சாவூர் தலையாட்டி ...