கருப்பு வெள்ளை: பஞ்சாயத்து டிவி எனும் சமத்துவ போராளி!
-பனை ஓலை-
நாங்களும் ஒரு சாலிடேர்
(கருப்பு-வெள்ளை) டி.வி.
வைத்திருந்தோம்.
1992க்குப் பிறகான
காலக்கட்டம் அது.
சேலத்தில் தாய்வழி பாட்டியுடன்
வசித்து வந்த எனது மூத்த அண்ணன்,
அந்தப் பழைய சாலிடேர்
டி.வி.,யை சொந்த ஊரில்
பெற்றோருடன் வசித்து
வரும் எங்களிடம்
கொடுத்துவிட்டு,
அவர் புதிதாக ஓனிடா
கலர் டி.வி. வாங்கினார்.
கொம்பும், வாலும், நீண்ட காதுகளுடன்
மொட்டத்தலை 'டெவில் மேன்'
வரும் விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு,
அந்த டி.வி.யை அண்ணன்
வாங்கினார். அப்போதே
அதன் விலை ரூ.10 ஆயிரத்துக்கு
மேல் என 'நினைக்கிறேன்'.
'போர்ட்டபிள்' அளவுக்கும்
சற்று பெரிய திரை கொண்டது.
நாங்கள் டி.வி. வாங்குவதற்கு
முன்பு வரை, ஊர் மாரியம்மன்
கோயிலில் இருந்த பஞ்சாயத்து
டி.வி.தான் ஒட்டுமொத்த
கிராமத்துக்கும் ஒரே சின்னத்திரை.
சிறிய அறைக்குள் ஒரு கிராமமே,
ஒருவர் மூச்சுக் காற்றை
ஒரு