Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

குழந்தைகள் நலம்

‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

அலோபதி, குழந்தைகள் நலம், சிறப்பு கட்டுரைகள், சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
''அடடடடா....உங்க மகன், ஒரு நிமிஷம்கூட கிளாஸ்ல உட்கார மாட்டேன்கிறான், மேடம். அவனுக்கு வகுப்பறை விதிகளைக் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க...'' ''நாங்களும் எவ்வளவோ கோச்சிங் கொடுத்துட்டோம். அவனால அடிப்படை கணக்குப்பாடம் கூட சரியாக செய்ய முடியறதில்ல...'' இதுபோல இன்னும் நிறைய. இப்படி எல்லாம் உங்கள் பிள்ளைகள் மீது புகார்கள் வந்திருந்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு, 'அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder)' பிரச்னை இருக்கலாம், என்கிறது மருத்துவ உலகம். இது நோய் அல்ல; குறைபாடு. சுருக்கமாக ஆங்கிலத்தில், 'ADHD'. தமிழில், 'கவனக்குறைவு மற்றும் மிகுசெயல்பாடு கோளாறு'. குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் உளவியல் கோளாறுகள், கற்றலில் ஏற்படும் சிக்கல்களைக் களைவது குறித்து, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப்கேர் மருத்து...