இந்த உசுரே உனக்காகத்தான்… படைச்சானே சாமிதான்…! காதலுடன் தமிழர் வாழ்வியல் பேசும் சிட்டான் குருவி!!
இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் தென்றலோடும் தெம்மாங்கு பாடல்களோடும் மண்மணம் கமழ வெளியான படம்தான், 'புது நெல்லு புது நாத்து'. 1991ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்தப் படம் வெளியானது.
சுகன்யா, ராகுல், நெப்போலியன், பொன்வண்ணன், ராம் அர்ஜூன், ருத்ரா உள்ளிட்ட முதன்மைப் பாத்திரத்தில் நடித்தவர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு புதிய நாற்றுகள்தான்.
பாரதிராஜவின் ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாதான் இந்தப் படத்திற்கும் இசை. கங்கை அமரன், முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து இளையராஜாவும் இந்தப் படத்திற்காக சில பாடல்களை எழுதி இருக்கிறார்.
படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. அதிலும், கங்கைஅமரன் எழுதிய, 'சிட்டான் சிட்டான் குருவி உனக்குத்தானே...' என்ற பாடல், அந்தக் காலக்கட்டத்தில் திருவிழாக்கள், கல்யாண வீடுகள், விருந்து விழாக்கள் என ஒலிக்காத இடமே இல்லை. பேருந்து பயணத்தின் 'பிளே லிஸ்...