ஏஸ் பவுண்டேஷன் புலிப்பாய்ச்சல்! கலகலக்கும் தானம் அறக்கட்டளை!!
சேலத்தில் கடந்த பிப்ரவரி 9, 2019ம் தேதியில் உதயமானது, 'ஏஸ் பவுண்டேஷன்' (ACE Foundation). இது, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பேரமைப்பு எனலாம். இந்த அமைப்பு தொடங்கப்பட்ட பதினைந்து நாள்களில், அடுத்தக்கட்ட நகர்வையும் புலிப்பாய்ச்சலில் முன்னெடுத்துள்ளது.
ராமநாதபுரம் மண்டலத்தில்,
இதுவரை 'தான் பவுண்டேஷன்'
(DHAN Foundation) கட்டுப்பாட்டில்
இயங்கி வந்த சிகரம், சங்கமம்,
நெய்தல் (ராமநாதபுரம்), புதுகை (புதுக்கோட்டை)
மற்றும் முத்துநகர் (தூத்துக்குடி)
ஆகிய ஐந்து வட்டாரக் களஞ்சியம்
மகளிர் சுயஉதவிக்குழுக்கள்,
புதன்கிழமையன்று (பிப்ரவரி 20, 2019)
ஏஸ் பவுண்டேஷனில்
இணைந்து உள்ளன.
இவை வெறுமனே ஐந்து வட்டாரங்கள் என்று குறைத்துச் சொல்லிவிட இயலாது. ஐந்து வட்டாரங்களின் வாயிலாக 20 ஆயிரம் பெண்களை உள்ளடக்கிய, இன்னும் சொல்லப்போனால் அத்தனை பேரின் குடும்பங்களை உள்ளடக்கிய 1500 குழுக்களைக் கொண்டத