
சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், திடீரென்று நீக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில், சேலம் மாநகர்மாவட்டச் செயலாளராகஇருந்தவர் ஜி.வெங்கடாசலம்.8 ஆண்டுக்கும் மேலாக இந்தப்பதவியில் இருந்து வந்தார்.எடப்பாடியின் தீவிர விசுவாசியாகஅறியப்பட்ட இவர்,கடந்த ஜன. 28ம் தேதி,திடீரென்று மா.செ. பதவியில்இருந்து கட்டம் கட்டப்பட்டார்.அத்துடன், கொள்கை பரப்புதுணைச் செயலாளர் என்ற'டம்மி' பதவியில் நியமிக்கப்பட்டார்.
ஜி.வெங்கடாசலம்
சூட்டோடு சூடாக,அனைத்துலக எம்ஜிஆர் மன்றதுணைச்செயலாளர் எம்.கே.செல்வராஜ்,சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர்ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியஇருவரையும் சேலம் மாநகர்மாவட்ட பொறுப்பாளர்களாகநியமித்திருக்கிறார்எடப்பாடி பழனிசாமி.
மா.செ. பதவியில் இருந்துவெங்கடாசலம் நீக்கப்பட்டதன்பின்னணி குறித்து இலைக்கட்சியின்மூத்த ந...