
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு; இனி 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது!
மாதச் சம்பளதாரர்கள், மத்திய தர வர்க்கத்தினரை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசின் 2025-2026ஆம்ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கையை பிப். 1ஆம் தேதி(சனிக்கிழமை) நிதித்துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமன்நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு:
புதிய வருமான வரி முறையில்,வருமான வரி விலக்கிற்கானஉச்ச வரம்பு 7 லட்சம் ரூபாயில்இருந்து 12 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி,ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரைவருமானம் பெறுவோர், வருமான வரிசெலுத்துவதில் இருந்து விலக்குஅளிக்கப்படுவதாக அமைச்சர்நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த 2019ல் 5 லட்சமாகவும்,2023ல் 7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டவரு...