Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எங்களைப்பற்றி

 

Read in English

‘புதிய அகராதி டாட் காம்’ என்ற இந்த இணைய ஊடகமானது, ‘மண் பயனுற வேண்டும்‘ என்ற உயரிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

முன்னதாக, ‘புதிய அகராதி’ என்ற பெயரில் திங்கள் இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் மாம்பழ நகரமான சேலம் மாநகரை தலைமை இடமாகக்கொண்டு, பேரிதழுக்கான கட்டமைப்புகளுடன், வெளிவந்து கொண்டிருந்தது. 2017 ஜூன் திங்கள் முதல் புதிய அகராதி இணைய இத-ழுக்கான பணிகள் தொடங்கின. 2017 ஆகஸ்ட் முதல் முழுவீச்சில் புதிய அகராதி இணைய இதழ் நடைமுறைக்கு வந்தது.

பார்வையாளர்கள் / வாசகர்களுக்கு பயனுள்ள தகவல்களை, உரிய ஆய்வுகளுடன் வழங்குவதில் மிகுந்த அக்கறை செலுத்துகிறது. வாசகர்கள் ஒருபோதும் தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடனும், ‘புதிய அகராதி டாட் காம்’ செய்திகளை வழங்கி வருகிறது.

‘புதிய அகராதி டாட் காம்’ இணைய ஊடகமானது அரசியல், வர்த்தகம், கல்வி, மருத்துவம், சினிமா, தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு, மகளிர் ஆகிய தலைப்புகளில் முதன்மைப் பக்கங்களில் முக்கியத்துவம் அளித்து செய்திகளை வழங்கி வருகிறது.

‘மற்றவை’ என்ற தலைப்பின் கீழ், விவசாயம், இலக்கியம், கலாச்சாரம், தகவல், புத்தகம், தொழில்நுட்பம், சிறுவர் பூங்கா, தன்னம்பிக்கை, வெற்றி பிறந்த கதை, விஞ்ஞானம் என்பன உள்ளிட்ட 16 பிரிவுகளில் கட்டுரைகளை வழங்கி வருகிறோம்.

நிகழ்காலத்தில் பல்சுவை அங்கங்களைக் கொண்ட எந்த ஓர் இணைய ஊடகமும், விவசாயம், குழந்தைகள், இலக்கியம், புத்தகம், விஞ்ஞானம் ஆகியவற்றுக்கு தனித்த முக்கியத்துவம் கொடுக்காத நிலையிலும் புதிய அகராதி டாட் காம் இணைய ஊடகம் தொடர்ந்து அவை பற்றிய புதிய தகவல்களை சுவாரஸ்யமாக தமிழில் வழங்கி வருகிறது. செய்திகளை ஆழமாகவும், அடர்த்தியாகவும் வழங்குகிறோம்.

அறிவார்ந்த மற்றும் அறம் செறிந்த தமிழ்ச்சமூகத்தை உருவாக்குவது என்ற உயரிய இலக்குடன் தொடர்ந்து பொது தளத்தில் இயங்கி வருகிறது.

தமிழகத்தின் முன்னணி செய்தியாளர்கள் குழுவால், ‘புதிய அகராதி டாட் காம்’ இணைய ஊடகம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

 

Contact:

Mobile: +91 98409 61947