
கரும்பு கொள்முதல் தொகை 23 கோடி ரூபாய் நிலுவை; விவசாயிகள் கவலை
கரும்பு அரைவைப் பணிகள் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கொள்முதல் பணம் 23 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
நாமக்கல் மாவட்டம் மோகனூரில்,சேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலை நிர்வாகம் நாமக்கல்,மோகனூர், ராசிபுரம், சேந்தமங்கலம்,திருச்சி மாவட்டத்தில் தொட்டியம்,முசிறி, துறையூர், சேலம் மாவட்டத்தில்ஆத்தூர், கெங்கவல்லி வரையிலானபதிவு பெற்ற விவசாயிகளிடம் இருந்துசர்க்கரை உற்பத்திக்காக கரும்புகொள்முதல் செய்து வருகிறது.
ஆலையின் எல்லைக்குஉட்பட்ட பகுதிகளில்கடந்த ஆண்டு 2445 ஏக்கர்பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது.அதன் அடிப்படையில்,2024-2025ம் ஆண்டிற்கு,1.45 லட்சம் டன் கரும்புஅரைவைக்குக் கொண்டு வரசேலம் கூட்டுறவு சர்க்கரைஆலை இலக்கு நிர்ணயித்தது.
ஆனால், பருவம் தப்பிய மழைகா...