Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

விழுப்புரம்

கள்ளக்குறிச்சி துயரம்: வெட்கப்பட வேண்டாமா முதல்வரே?

கள்ளக்குறிச்சி துயரம்: வெட்கப்பட வேண்டாமா முதல்வரே?

தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஜூன் 18ம் தேதி திடீரென்று கொத்துக் கொத்தாக பலர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிலர் கண் பார்வை மங்கி விட்டதாக கதறினர்; சிலருக்கு ரத்த வாந்தி நின்றபாடில்லை. அப்போதுதான் ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை மருத்துவமனை நிர்வாகம் உணர்ந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே சொல்லி வைத்தாற்போல் கள்ளக்குறிச்சி நகரில் உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் பலரும் பட்டியலினத்தவர்கள்; கூலித்தொழிலாளிகள். மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்தே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட எஸ்பியும் மருத்துவமனைக்கு விரைந்து, என்ன ஏது என்று விசாரிக்கத் தொடங்கினர். அதற்குள், சிகிச்சைக்கு வந்தவர்களில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். ஜூன் 19ம் தேதி
‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி

‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
ஜெயலலிதாவை வாய்தா ராணி என்றும், பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத்தை ஓசி பயணம் என்றும் பொதுவெளியில் வாய்த்துடுக்கு காட்டிய அமைச்சர் பொன்முடிக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை சொந்தக் கட்சியினரே ரசிக்கின்றனர். தமிழகத்தில் தந்தை பெரியார் மீது ஈர்ப்பு கொண்டவர்கள், பேரறிஞர் அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பிறகு அக்கட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அப்படி பெரியாரிய பட்டறையில் இருந்து திமுகவுக்குள் காலடி வைத்தவர்தான் பேராசிரியர் பொன்முடி. பொதுமேடை, அரசியல் மேடை என எந்த மேடயாக இருந்தாலும் திராவிட சித்தாந்தங்களைப் பேசாமல் இருக்கவே மாட்டார். அந்தளவுக்கு திராவிட சிந்தனைகளில் ஊறிப்போனவர். திராவிட இயக்கத்தின் மீது பொன்முடி கொண்ட சித்தாந்த பிடிப்பைச் சுட்டிக்காட்ட, அவர் எழுதிய, 'The Dravidian Movement and the Black Movement' என்ற ஒரு புத்தகமே போதுமா
சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடையய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் டிச. 21ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. இருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திமுகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான க.பொன்முடி, தற்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ளார். இவர், கடந்த 2006 - 2011 வரையிலான திமுக அமைச்சரவையில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு
தேமுதிக பிரமுகரை போட்டுத்தள்ளிய நயன்தாரா ரசிகர்கள்! முதல் கொலைக்கு 500 ரூபாய் கூலி; சிறார் குற்றவாளியின் திடுக் பின்னணி!!

தேமுதிக பிரமுகரை போட்டுத்தள்ளிய நயன்தாரா ரசிகர்கள்! முதல் கொலைக்கு 500 ரூபாய் கூலி; சிறார் குற்றவாளியின் திடுக் பின்னணி!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள், விழுப்புரம்
  சேலம் அருகே, நடந்து முடிந்த தேமுதிக பிரமுகர் படுகொலையின் பின்னணியில் , சமூகத்தை உறைய வைக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). விவசாயி. சொந்தமாக டாடா ஏஸ் சரக்கு வாகனமும் ஓட்டி வந்தார். தேமுதிக கட்சியில் சில ஆண்டுகள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருடைய மனைவி ஆலயமணி (32). இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 17, 2018ம் தேதியன்று இரவு 10 மணியளவில் தன் மனைவி ஆலயமணி, மகன்கள் இருவரையும் திருநள்ளாறு கோயிலுக்குச் செல்வதற்காக வாடகை காரில் ஏற்றி, வழியனுப்பி வைத்தார் கலியமூர்த்தி. அடுத்த சில மணி நேரங்களில் தனக்கு நேரப்போகும் விபரீதம் குறித்து அப்போது அவர் சற்றும் அறிந்திருக்கவில்லை.   'எப்போதும்போல வாசலில் படுத்துத்தூங்காமல
ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

ஆத்தூரில் மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்த தனியார் பள்ளிகளுக்கு காவல்துறை சம்மன்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
ஆத்தூரில், சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர தட்டிகளை வைத்திருந்த கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் உள்பட 11 நிறுவனங்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி காவல்துறை சம்மன் அளித்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் பல தனியார் பள்ளிகள், கல்லூரிகள் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மரங்களில் ஆணிகளை அடித்து விளம்பர தட்டிகளை வைத்துள்ளன.   இதனால் மரங்களின் ஆயுள் குறைவதுடன், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் அக்னி செல்வம், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் ராஜலிங்கம் ஆகியோர் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் கேசவன், அதற்குரிய சிஎஸ்ஆர் ரசீது கொடுத்தார். மேலும், 'இந்த புகாரின
ஆசிரியர்கள் ‘ஈகோ’வால் பாதிக்கப்படும் கிராமப்புற ஏழை மாணவர்கள்!; அரசு பாராமுகம்!!

ஆசிரியர்கள் ‘ஈகோ’வால் பாதிக்கப்படும் கிராமப்புற ஏழை மாணவர்கள்!; அரசு பாராமுகம்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
கிராமப்புற பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்ற விரும்பாததால், 1200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் ஏழை மாணவர்களின் கல்வி நலனும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. ஆசிரியர் சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' யுத்தத்தால், உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது. கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சுணக்கம் காட்டுவது ஒருபுறம், ஆசிரியர்களின் விருப்பமின்மை மற்றொரு புறம் என மாணவர்களின் கல்வி நலன் அடியோடு முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.     எதனால் இந்த சிக்கல்? என்பது குறித்து தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க (டிஎன்பிபிஜிடிஏ) மாநிலத் தலைவர் ப
கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

அலோபதி, சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள், விழுப்புரம்
(நலமறிய ஆவல்) பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது என்கிறார்கள் மருத்துவர்கள். சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள திரு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து, சுமார் 4 கிலோ கட்டியை, லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள். மூத்த மருத்துவர் திருவருட்செல்வன், மகப்பேறு மருத்துவர் சரவணக்குமார், மயக்கவியல் மருத்துவர் சாய்குமார் குழுவினர் இந்த சிகிச்சையை திறம்பட செய்துள்ளனர். கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது? காரணங்கள் என்ன? புற்றுநோயாக மாறுமா? உள்ளிட்ட கேள்விகளை மகப்பேறு மருத்துவர் சரவணக்குமாரிடம் முன்வைத்தோம். இனி, அவர்... காரணங்கள்: ஈஸ்
ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

ஜோதிகாவின் ‘தேவரடியாள்’ தடை செய்யப்பட்ட சொல்லா?

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
பாலா இயக்கத்தில் வெளியாக உள்ள 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசும் ஒரு சொல், ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வசனத்தை 'மியூட்' செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 'பரதேசி', 'அவன் இவன்', 'தாரை தப்பட்டை' என்று தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இயக்குநர் பாலா அடுத்து ஜோதிகாவை முதன்மை பாத்திரமாக வைத்து, 'நாச்சியார்' என்ற படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமாரும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா - பாலாவின் வழக்கமான கூட்டணி இதிலும் தொடர்கிறது. நாச்சியார் படத்தில் ஜோதிகா, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை, நடிகர் சூர்யா நேற்று முன்தினம் (நவம்பர் 15, 2017) வெளியிட்டார். ரசிகர்களிடம் பெரிய அளவில் இந்த டீசர் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், டீசரின் இறுதியில் ஜோதிகா பேசும் ஒரு வசனம்தான் இப்போது பெரும் விமர
ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

ஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்!

அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
கந்துவட்டிக்காரர்களை ஒடுக்க 'ஆபரேஷன் குபேரா' (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்தி
மக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் ஒரு கேடா?: இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாய்ச்சல்

மக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் ஒரு கேடா?: இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாய்ச்சல்

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
தமிழகமே டெங்கு காய்ச்சலால் முடங்கிப்போகும் அச்சத்தில் இருக்க, அரசு புகழ்பாடும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் தேவைதானா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெட்டிஸன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த நான்கு மாதஙங்களுக்கு மேலாகவே தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாள்களில் டெங்கு பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பொது சுகாதாரப்பணிகள் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ, கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 250 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என்று ஒரு தகவலைச் சொன்னார். ஆனால், டெங்கு மரணங்களை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்து இருந்தார்.