
உய்வில்லை தமிழ் கொன்ற மகற்கு! ஊடகங்களில் வதைபடும் தாய்மொழி!!
மொழி, இனம், பண்பாடு ஆகிய மூன்றும் மனித குலத்தின் பரிணாம வளர்ச்சிக் கூறுகள் ஆகும். மொழி செழுமை அடையும்போது அங்கு இனமும், பண்பாடும், கலாச்சாரமும் மேலும் செழுமை அடைகிறது. எங்கே, ஒரு மொழி அழிந்து போகிறதோ அங்கே ஓர் இனம் அழிவுக்கு உள்ளாகிறது.
மொழி, கலாச்சார ரீதியாகமனிதனை ஓர்மைப்படுத்துகிறது.பழமையான மொழிகளுள்ஒன்றான சீனம், உலகம் முழுவதும்110 கோடிக்கும் மேற்பட்டமக்களால் பேசப்படுகிறது.ஆங்கில மொழியை 150 கோடிக்கும்மேற்பட்டோர் பேசுகின்றனர்.தொன்மையான தமிழ் மொழியை,உலகளவில் 10 கோடிபேர் பேசுகிறார்கள்.ஆக, இப்போதைக்குதமிழ் மொழி அழிந்து விடுமோஎன்ற கவலை தேவையற்றது.என்றாலும், அழியக்கூடியமொழிகளுள் தமிழ் 8ஆவதுஇடத்தில் இருப்பதாக யுனெஸ்கோசொல்கிறது கூர்ந்து நோக்கவேண்டியதாகிறது.
பிற செவ்வியல் மொழிகளோடுஒப்பு நோக்கும்போது, தமிழைப் போலசெறிவான இலக்கண, இலக்கிய வளம்கொண்ட வேறு மொழிகள்உலகில் இல்லை. நம்முடையதமிழ் ச...