Thursday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: high court

வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

வீரப்பன் வேட்டை பற்றி ஜெயலலிதா சொன்னது என்ன?; மனம் திறக்கும் கே.விஜய்குமார்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநில அரசுகளுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிம்ம சொப்பனமாக இருந்து வந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004ம் ஆண்டு அக்.18ம் தேதி காவல்துறை அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் வேட்டை முடிந்து கடந்த 2017, 18ம் தேதியுடன் 13 ஆண்டுகள் கடந்து விட்டது. அவரை, 'பட்டுக்கூடு ஆபரேஷன்' (Operation Cocoon) மூலம் வேட்டையாடிய அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார், 'வீரப்பன் - சேசிங் தி ப்ரிகாண்ட்' (Veerappan - Chasing the Brigand) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில் வீரப்பன் ஏன் வேட்டையாடப்பட்டார், கர்நாடகா சூப்பர் ஸ்டார் ராஜ் குமார், அமைச்சர் நாகப்பா ஆகியோரை வீரப்பன் கடத்தியது ஏன் என்பது குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார்.   காவல்துறையில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட கே.விஜயகுமார், நடுவண் பாதுகா...
கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். தமிழகத்தின் குக்கிராமங்களில் ஒன்றாக கீழடியை நாம் கடந்து போய்விட முடியாது. அங்கேதான், பழந்தமிழரின் அரிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து கீழடி கிராமத்தில் மைய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 110 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியது. இரண்டு கட்ட ஆய்வு நடந்த நிலையில், திடீரென்று தொல்லியல் துறையினர் பாதியிலேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப, வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சியினரிடம் இருந்து அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒருவழியாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஒரு கட்ட அகழாய்வு என்பது ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 10 மாதங்களாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறே மாதத்தில் திடீரென்று ஆய்வுப்பணிகள் முடிந்ததாகக்கூறி...
அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்

அரசியல், முக்கிய செய்திகள்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவ் நேற்று விடைபெற்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை முறைப்படி வழியனுப்பி வைத்தனர். பதவி ஏற்பு: அதையடுத்து, தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், ராஜ் பவனில் இன்று (அக்டோபர் 6) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பன்வாரிலால் புரோஹித்தின் மனைவியும் கலந்து கொண்டார். பதவியேற்பு முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் அதிருப்தி: முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைத் தொடர்ந்து மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்தான் ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட வேண்ட...
ஜெயலலிதா மருத்துவ அறிக்கை வெளியானதன் பின்னணி என்ன?: பரபரப்பு தகவல்கள்

ஜெயலலிதா மருத்துவ அறிக்கை வெளியானதன் பின்னணி என்ன?: பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது இருந்த உடல்நிலை குறித்த அறிக்கை இன்று (செப். 28) திடீரென்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானதன் பின்னணியில், சசிகலா - டிடிவி தினகரன் தரப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மக்களே மறந்திருந்த ஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை நினைவுகள், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அதிரடி பேட்டிகளால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. 'அம்மா இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை' என்று அவர் சொன்னது, கடந்த பத்து நாள்களாக மீண்டும் ஜெயலலிதா மரணத்தின் மீது மக்களின் கவனம் திசை திரும்ப காரணமாக அமைந்தது. அதேநேரம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தாங்கள் உள்பட எல்லா அமைச்சர்களும் நேரில் பார்த்தோம் என்று கூறினர். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், மைனாரிட்டி அரசாங்கம், ஆட்சிக்கலைப்பு ...
அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''ஜெயலலிதா, சிகிச்சையில் இருந்தபோது இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை. பொய் சொன்னதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,'' என்று ரைமிங் ஆக வசனம் பேசி அதிமுகவில் திடீரென்று குழப்ப வெடிகளை கொளுத்திப் போட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் சீனிவாசனின் இத்தகைய பேச்சை அப்போது கட்சிக்குள் யாருமே ரசிக்கவில்லை. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசனிடமே தனது அதிருப்தியை நேரிடையாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக இருந்தார். அதன் பிறகு, உட்கட்சி பூசலால் ஏற்பட்ட சலசலப்புகளால் பிரிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது துணை முதல்வராக எடப்பாடி பழனிசாமி அணியில் அங்கம் வகிக்கிறார். தீர்க்கமான விசாரணை என்று வரும்போது, திண்டுக்கல் சீனிவாசனின் இ...
மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சண்டையில கிழியாத சட்டை எங்கிட்டு இருக்கு?' என்ற 'கைப்புள்ள' வடிவேலு காமெடி போல, 'சர்ச்சையில் சிக்காமல் விஜய் படம் எப்போது ரிலீஸ் ஆகியிருக்கு?' என்று சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் நடித்த படங்கள் ரிலீசுக்கு முன்னரோ அல்லது வெளியான பின்னரோ ஏதோ ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கி வருகிறது. 'தலைவா' படம் ரிலீசுக்கு முன்பே பிரச்னைகளை சந்தித்தது. அந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழ், 'பார்ன் டு லீட்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவினர், அந்த வார்த்தைகளுக்கு அதிருப்தி தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. கத்தி, துப்பாக்கி போன்ற படங்களும் நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்த பின்னரே திரைக்கு வந்தன. இந்நிலையில், சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள மெர்சல் படமும் தற்போது நீதிமன்ற வழக்கில் சிக்கி இருக்கிறது. மெர...
வாயை மூடுங்கள்!: அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்

வாயை மூடுங்கள்!: அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாக அளித்த வாக்குறுதியை அமைச்சர்களால் செயல்படுத்த முடியாததால், அவர்கள் இதுபற்றி ஊடகங்களிடம் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை கூறியுள்ளார். தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, அது தொடர்பான வழக்குகளை விசாரித்தபோதெல்லாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாரன், அத்தேர்வுக்கு ஆதரவு வழங்கினார். இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி மற்றும் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா கடந்த 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தமிழகமெங்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுத்தது. பல இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளும்கூட ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நீட் தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற...
திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு:  “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

திருமுருகன் காந்தி மீதான ‘குண்டாஸ்’ ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு: “தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக”

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு, பல்வேறு அமைப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ''தமிழகத்தை தில்லிக்கு விற்கும் தற்குறிகளின் முகத்திரை கிழிக்க வருக'' என்று அவரை வரவேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக, குறிப்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுபவர்களை காவல்துறையினர் கைது செய்வதும், அவர்கள் மீது திட்டமிட்டு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. தமிழ், தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறது மே 17 இயக்கம். இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 'தமிழ், தமிழர், தமிழர் உரிமைகள் என்ற மு-ழக்கங்களை ஒழித்துக் கட்டினால்தான் தமிழகத்தில் இந்து, இந்துத்துவம் என்ற பாசிச கொள்கைகளை வளர்க்க முடியும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் நம...
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: கட்சித்தாவல் தடை சட்டப்படி சரியானதா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: கட்சித்தாவல் தடை சட்டப்படி சரியானதா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 அதிமுக எம்எல்ஏக்கள், இன்று (செப். 18) அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கை, கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி சரிதானா? என்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல்களைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளடக்கிய 12 எம்எல்ஏக்கள் ஓரணியாகவும், மற்ற எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னி¦ர்செல்வம் அணியினர் எதிர்த்து வாக்களித்தனர். பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் தலையீட்டால் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, ஓரணியாக இணைந்தன. இந்த இணைப்பில் உடன...
ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர்கள் பணிக்கு வராமல், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாது எனில், ரிசார்ட்டில் தங்கியுள்ள குதிரைபேர எம்எல்ஏக்களுக்கு மட்டும் சம்பளம் கொடுக்கலாமா? என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக உள்கட்சி பூசல்களால் தமிழக மக்கள் நலன் பாதிக்கப்படுவது குறித்தும், ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, நல்லதொரு மாற்றம் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். 'டுவிட்டர் அரசியல்வாதி' என்று ஆளும் தரப்பும், பாஜகவும் கமல்ஹாசனை கிண்டல் அடித்தாலும், 'டுவிட்டரும் போராட்ட களம்தான்' என்று சளைக்காமல் பதிலடி கொடுத்தார். சமகால அரசியல் நகர்வுகள், சமூக பிரச்னைகள் குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது, அ...