Wednesday, May 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: high court

சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து – ஹைகோர்ட்

சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் ரத்து – ஹைகோர்ட்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சேலத்தை அடுத்த பள்ளிக்கூடத்தானூரை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகள் வளர்மதி. சேலம் பெரியார் பல்கலையில் எம்.ஏ., இதழியல் படித்து வந்தார். இயற்கை பாதுகாப்புக்குழு என்ற அமைப்பின் சேலம் மாவட்ட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த அமைப்பின் சார்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன், கதிராமங்கலம் ஓஎன்ஜிசி ஆகிய திட்டங்களை கடுமையாக எதிர்த்து வந்ததுடன், துண்டு பிரசுரங்கள் வாயிலாக மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வந்தார். கடந்த ஜூலை 12ம் தேதி, சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அருகே இத்திட்டங்களுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறையினர், அரசுக்கு எதிராக மாணவர்களைத் தூண்டி விடுவதாகவும், ஆட்சேபகரமான துண்டு பிரசுரங்களை வெளியி
உள்ளாட்சி தேர்தலை நவ. 17க்குள் நடத்த ஹைகோர்ட் உத்தரவு

உள்ளாட்சி தேர்தலை நவ. 17க்குள் நடத்த ஹைகோர்ட் உத்தரவு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, வரும் நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன்படி கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடித்தது. இந்நிலையில், உள்ளாட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அடுத்த தேர்தலை நடத்துவதற்கான அறிவிக்கையும் வெளியிடப்பட்ட நிலையில், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன்பின், உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இட ஒதுக்கீடு பணிகள் முழுமையாக
6ம் தேதி முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம்!

6ம் தேதி முதல் அசல் லைசென்ஸ் கட்டாயம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாகன ஓட்டிகள், வரும் 6ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, வாகன ஓட்டிகள் செப். 1ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பியது. டிஜிட்டல் உலகத்தில், அசல் உரிமத்தை கையில் வைத்திருக்காமல், 'டிஜி லாக்கர்' முறையில் பதிவு செய்து கொண்டால் போதுமானது என்றெல்லாம் கருத்துகள் எழுந்தன. இதையெல்லாம் ஏற்க மறுத்த தமிழக அரசு, தனது உத்தரவில் உறுதியாக இருந்தது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த வாரம் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விச
அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை!

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாகன ஓட்டிகள், வாகனங்களில் செல்லும்போது அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அது தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, வாகன ஓட்டுநர்கள் உரிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், சீருடை அணிந்த காவல்துறையினர் வாகன தணிக்கை செய்யும்போது, அசல் உரிமத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் (பிரிவு 130) என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி (இன்று) முதல் அனைத்து வகை வாகன ஓட்டிகளும், வாகன பயணத்தின்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அவ்வாறு அசல் உரிமம் இல்லாவிட்டால், மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இவை இரண்டு சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே
கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

கலெக்டரின் நிர்வாக சீர்கேடுனா இதுதான்..

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கண்ணு போச்சு; மாரடைப்பு வந்துச்சு; தீர்வுதான் கிடைக்கல! அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு கண்ணில் பார்வை பறிபோயும், மாரடைப்பில் பாதி உயிரை இழந்தும் தவித்து வருகிறார் ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர் ஒருவர். வெறும் 1500 பென்ஷனுக்காக ஆண்டுக்கணக்கில் முதியவரை அலைக்கழிக்கும் அவலம் சேலத்தில் நடந்து வருகிறது. ஊழல் செல்லரித்துப்போன அரசு அதிகாரிகளால், நொந்து நூலான சாதாரண சத்துணவு ஊழியரின் கதை இது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாகச் சீர்கேடுக்கு இச்சம்பவம் ஒரு சான்று. சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (61). பனமரத்துப்பட்டி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். சக ஊழியர் இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற விசேஷங்களில் சத்துணவு ஊழியர்கள் கூட்டாக சேர்ந்து நிதி திரட்டி, பரிசுப் பொருட்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தம்மந
அப்படி சொன்னாரா உதயசந்திரன் ஐஏஎஸ்?

அப்படி சொன்னாரா உதயசந்திரன் ஐஏஎஸ்?

கல்வி, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்-சின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை அத்துறை வட்டாரத்தையும் தாண்டி, பல்வேறு மட்டங்களிலும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. எதிர்க்கட்சிகள், கல்வியாளர்களிடம் இருந்து தொடர்ந்து வரும் கண்டனங்களே அதற்கு சான்று. இதையெல்லாம் தமிழக அரசு அவதானித்துக் கொண்டுதான் இருக்கும். உதயச்சந்திரன் ஐஏஎஸ், பள்ளிக்கல்வித்துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் அத்துறையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளையும், அவருக்கு 'செக்' வைக்கப்பட்டதற்கான சில காரணங்களையும் நாம் முன்பே குறிப்பிட்டு இருந்தோம். இப்போது மேலும் சில பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொரு கல்வி ஆண்டின் துவக்கத்திலும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அதற்கு முன்பே, எந்தெந்த பள்ளிக்கு யார் யார் செல்ல வேண்டும் என்பதை ஆசிரியர்கள், தங்களுக்க
சட்டம் அறிவோம்: உயில்…! ‘அவசியமும் நடைமுறைகளும்’ – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: உயில்…! ‘அவசியமும் நடைமுறைகளும்’ – சுரேஷ், வழக்கறிஞர்

தமிழ்நாடு, மற்றவை, முக்கிய செய்திகள்
நாம் பயணிக்கும் இந்த வாழ்க்கையில் விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு நாளும் சட்டமும் அதன் பயன்களும் நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் சிலவற்றையாவது நாம் அறிந்து வைத்திருப்பது இன்று காலத்தின் கட்டாயம். இந்த பதிவில் உயில் மற்றும் அதை சார்ந்த சில தகவல்களைப் பார்க்கலாம்.   மரணப்படுக்கையில் இருக்கும் போது எஸ்.வி.ரங்காராவோ அல்லது நாகையாவோ உடனே, “வக்கீல கூப்புடுங்க உயில் எழுதணும்,” என்று இருமிக்கொண்டே சொல்லும் பழைய கருப்பு வெள்ளை சினிமா காலத்திலிருந்தே உயில் என்றால் ஒருவருடைய மரண சாசனம் என்று நாம் இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் தவறான அணுகுமுறை. உயில் என்பது ஒருவருடைய வாழ்வின் சாசனம் (Life Testimony). ஒருவரின் வாழ்வில் நடந்த அதிமுக்கியமான நிகழ்வுகளும் அவரின் வாழ்க்கைக்குப்பிறகு அவர் சொல்ல அல்லது சொத்து சம்பந்தமாக செய்ய