Tuesday, June 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம்

விதி மீறல்: ஒரே இரவில் ஆம்னி பேருந்துகளிடம் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூல்!

விதி மீறல்: ஒரே இரவில் ஆம்னி பேருந்துகளிடம் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூல்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட சொகுசு பேருந்துகளிடம் இருந்து, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஒரே இரவில் ரூ.2.33 லட்சம் அபராதம் வசூலித்தனர்.   சொந்த ஊர்களுக்கு படையெடுப்பு தீபாவளி பண்டிகையையொட்டி, வெளியூர்களில் பணியாற்றி வரும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.   இதற்காக அரசுத்தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் லட்சகணக்கானோர் பயணிக்கும் நிலையில், பேருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.   கட்டணக் கொள்ளை   இதுபோன்ற விழாக்காலங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு, மூன்று மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். &nb...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் கூட்டாளிக்கு மருத்துவ பரிசோதனை! #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜ் கூட்டாளிக்கு மருத்துவ பரிசோதனை! #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 15வது குற்றவாளியான கிரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை (நவம்பர் 3, 2018) மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.   ஆணவக்கொலை   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பிச்சென்ற அவர், 24.6.2015ம் தேதி மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தண்டவாளத்தில் சடலம் கவிழ்ந்து கிடந்தது. தலை வேறு, உடல் வேறாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.   அவர் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த, தன்னுடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்த சுவாதியை காதலித்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்...
”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமியை (14), வீடு அருகே வசிக்கும் தினேஷ்குமார் (25), கடந்த 22.10.2018ம் தேதி இரவு கழுத்து அறுத்து படுகொலை செய்தார். தலை வேறு, உடல் வேறாக வீசியெறிந்த சம்பவம் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.   கொடுவாளால் வெட்டி கொலை முதல் தகவல் அறிக்கையில் கொலையாளி தினேஷ்குமார், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், அதை தன் தந்தையிடம் சொல்லி விடுவதாகக்கூறிவிட்டு சிறுமி ஓடியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொடுவாளால் வெட்டி கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   கொலையாளியின் மனைவி சாரதாவோ, கதிர் அறுக்கும் வாகன ஓட்டுநரான தன் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அக். 20ம் தேதி முதல், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார் என்றும்,...
ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள  அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே பதினான்கு வயது சிறுமியை, ஆட்டை அறுப்பதுபோல் துடிக்க துடிக்க தலையை தனியாக வெட்டி வீசிய கொலைச்சம்பவம்தான், இன்றைக்கு சேலம் மாவட்ட மக்களை நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.   சிறுமி ராஜலட்சுமி   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி, சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள், ராஜலட்சுமி (14). தளவாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், கார்த்திக் என்கிற தினேஷ்குமார் (25) வசித்து வருகிறார். இவருடைய மனைவி, சாரதா. முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தினேஷ்குமாரும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாரதாவும் 2013ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டரை வயதில் செல்வதரணிஷ் என்ற ஆண் குழந்த...
சேலத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்கள் இடமாறுதல்; ஆட்சியர் ரோகிணி அதிரடி!

சேலத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்கள் இடமாறுதல்; ஆட்சியர் ரோகிணி அதிரடி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்களை அதிரடியாக இடமாறுதல் செய்து ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக நலன் கருதி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 1, 2018ம் தேதி முதல் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இடமாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியர்கள் பின்வருமாறு...   (புதிய பணியிடங்கள் பெயர்களுக்கு நேராகவும், பழைய பணியிடங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன). 1. அ.பெ.பெரியசாமி - சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர் (காடையாம்பட்டி வட்டாட்சியர்)   2. ஜி.குமரன் - ஓமலூர் (சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர்)   3. கே.சித்ரா - சேலம் தெற்கு தனி வட்டாட்சியர் (ஓமலூர்)   4. பி.அன்புக்கரசி - பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் (தனி வட்டாட்சியர், நி.எ அலகு-1) 5. ஜி....
சமையல் காஸ் சிலிண்டர் விலை 63 ரூபாய் உயர்ந்தது! ரூ.979 ஆக நிர்ணயம்!!

சமையல் காஸ் சிலிண்டர் விலை 63 ரூபாய் உயர்ந்தது! ரூ.979 ஆக நிர்ணயம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டர் விலை நடப்பு நவம்பர் மாதத்திற்கு ரூ.979 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்தைக் காட்டிலும் 62.50 ரூபாய் அதிகமாகும். ரூ.979 ஆக நிர்ணயம்   காஸ் சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை, உற்பத்தி மற்றும் உள்ளூரில் காஸ் சிலிண்டர்களுக்கான தேவை, ஆலைகளின் உற்பத்தித்திறன் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.   அதன்படி நடப்பு 2018, நவம்பர் மாதத்திற்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ரூ.979 ஆக நிர்ணயித்துள்ளது. இது, முந்தைய அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ. 62.50 அதிகமாகும...
இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

இளம்பெண்கள் பலி! 55 கோடி ரூபாய் மோசடி! சேலம் தொழில் அதிபர் மீது குவியும் புகார்கள்…. திணறும் போலீசார்…!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, திருப்பூர், நாமக்கல், முக்கிய செய்திகள்
  முதலீட்டுத் தொகை திரும்பக் கிடைக்காத விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற பெண்களில் இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தது ஒருபுறம் இருக்க, சேலம் வின்ஸ்டார் சிவகுமார் மீது புகார் அளிக்க நாள்தோறும் குவியும் முதலீட்டாளர்களால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்.   தற்கொலை முயற்சி சேலம் அம்மாபேட்டை நந்தனார் தெருவை சேர்ந்தவர் அழகேசன். கூலித்தொழிலாளி. இவருக்கு ஐந்து மகள்கள். இரண்டு மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. மற்ற மூன்று மகள்களான மேனகா (33), ரேவதி (28), கலைமகள் (26) ஆகியோர் கடந்த 28.8.2018ம் தேதி திடீரென்று குருணை மருந்தை நீரில் கலக்கிக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.   அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேனகா, கலைமகள் ஆகியோர் உடல்நலம் மோசமானதால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு ...
சேலம் – சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்!

சேலம் – சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  பருவமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக சேலம் - சென்னை விமான சேவை நேரம் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது.   விமான போக்குவரத்து சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை துவக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால், குறுகிய காலத்திலேயே விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.   இந்நிலையில், சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.   மீண்டும் விமான சேவை   இதையடுத்து, உடான் திட்டத்தின் கீழ், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து நடப்பு ஆண்டில் மீண்டும் விமான சேவை துவக்கப்பட்டது.   அதன்படி, ட்ரூஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு விமானம் மட்டும் இப்போதைக்கு இயக்கப்பட்டு வருகிறது. ...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு தரப்பு சாட்சிக்கு பகிரங்க மிரட்டல்! யுவராஜ் தரப்பு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம்!! #Day8 #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு தரப்பு சாட்சிக்கு பகிரங்க மிரட்டல்! யுவராஜ் தரப்பு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம்!! #Day8 #Gokulraj

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் கொலை வழக்கில், குறுக்கு விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சியை யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் மிரட்டும் தொனியில் பேசியதற்கு, நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார்.   தண்டவாளத்தில் சடலமாக... சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23), கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தலை வேறு, உடல் வேறாக சடலம் கோகுல்ராஜின் சடலம் கிடந்தது.   திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார். தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருக்கமான நட்பில் இருந்த கோகுல்ராஜ், அவரைச் சந்திக்க 23.6.2015ம் தேதி நாமக்கல் சென்றிருந்தார்.   ஆணவக்கொலை: அவர்கள் இருவரும், திர...
ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே, இரவு நேரத்தில் வீடு புகுந்து பள்ளி மாணவியை துடிக்க துடிக்க தலை துண்டித்துக் கொலை செய்த கொடூரன், அந்நியன் விக்ரம் போல மாற்றி மாற்றி பேசுவதால் வாக்குமூலம் பெறுவதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.   ஆத்தூர் அருகே...   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தரபுரம் தெற்குக் காட்டைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் மகன் தினேஷ்குமார் (25). இரண்டாவது மகன், சசிகுமார். மூத்த மகன் தினேஷ்குமார், நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவயும், இரண்டரை வயதில் செல்வதரணித் என்ற ஓர் ஆண் குழந்தை உள்ளனர்.   இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சாமிவேலு - சின்னப்பொண்ணு (45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந...