Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்

ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க…

அலோபதி, சேலம், மருத்துவம்
மருத்துவமனைகளில் அதிகளவில் நடக்கும் அறுவை சிகிச்சைகளில் ஒன்று, குடலிறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சை. பெண்களைவிட அதிகளவில் ஆண்களே ஹெர்னியா பிரச்சினைக்கு ஆளாகின்றனர். இந்த பாதிப்பு ஏன் ஏற்படுகிறது? தீர்வுகள் குறித்து விளக்குகிறார், சேலம் டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை மருத்துவர் வையாளி ராமு.   குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?: பலரும் கருதுவதுபோல் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியா, ஒரு நோய் அல்ல. அது, உடல் பகுதியில் ஏற்படும் ஒரு பழுது. அவ்வளவுதான். வயிற்றுப்பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக்கொண்டு இறங்கி விடும். இதைத்தான், 'ஹெர்னியா', அதாவது 'குடல் இறக்கம்' என்கிறோம்.   அறிகுறிகள்?   வயிறு வ
ஊழல் தாண்டவமாடும்  உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

ஊழல் தாண்டவமாடும் உணவு பாதுகாப்புத்துறை – ஆதாரத்துடன் அம்பலம்

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வசூல் வேட்டையில் திளைக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால், மக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எந்த அளவுக்கு ஒரு சட்டம் கடுமையாக நிறுவப்படுகிறதோ அதே அளவுக்கு அதில் ஊழலும் மலிந்து கிடப்பது ஆகப்பெரிய முரண். அப்படி லஞ்சம், ஊழலில் அதிகாரிகள் திளைக்கும் துறையாக உணவுப் பாதுகாப்புத்துறை மாறிவிட்டது. ஆதாரத்துடன் இங்கே அம்பலப்படுத்துகிறோம். அதற்குமுன், இந்த சட்டத்தைப் பற்றிய சில முன்தகவல்கள்... நுகர்வோருக்கு தரமான உணவுப்பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதுதான்,உணவுப்பாதுகாப்புத் துறையின் மைய நோக்கம். குடிநீர் முதல் உப்பு வரை உட்கொள்ளத்தக்க எந்த ஒரு பொருளும் இதனுள் அடங்கும். இதற்காகவே உணவுப்பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம்-2006 இயற்றப்பட்டு, நாடு முழுவதும் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. சாலையோர தள்ளுவண்டிக் கடைக்
பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

சிறப்பு கட்டுரைகள், சேலம், தன்னம்பிக்கை, மகளிர்
திட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன். இவர், சேலம் சாரதா கல்லூரிச்சாலை எல்ஆர்என் காலனியில் உள்ள டிஎம்எஸ் கண் மருத்துவமனையின் இயக்குநர். இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள், சேலம் சிட்டிசன் ஃபோரம், இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), சேலத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் 'இன்டேக்' உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்தும் செயல்பட்டு வருகிறார். லட்சுமி சித்தார்த்தனின் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே பாரம்பரியம் மிக்கது. இலங்கையின் கொழும்பு நகரம்தான் இவருடைய பூர்வீகம். ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பத்திரிகையான 'வீரகேசரி' நாளேட்டின் நிறுவனரான நடேசன் அய்யாவின் பேத்திதான் இவர். இவருடைய கணவர் சித்தார்த்தன். சேலம் அறிந்த பிரபல கண் மருத்துவர். காங்கிரஸ் கட்சிய
‘சின்னவீடு’க்கு செருப்படி…! மழைக்காக நூதன சடங்கு ‘சேலம் மக்களின் சுவாரஸ்ய கலாச்சாரம்’

‘சின்னவீடு’க்கு செருப்படி…! மழைக்காக நூதன சடங்கு ‘சேலம் மக்களின் சுவாரஸ்ய கலாச்சாரம்’

கலாச்சாரம், சேலம்
தமிழகத்தில் ஓராண்டின் சராசரி மழை அளவு 958 மி.மீ., ஆனால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மழைப்பொழிவு குறைந்து, கடும் வறட்சி நிலவுகிறது. இதேபோன்ற வறட்சி, கடைசியாக 1876ல் நிலவியதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மழை வேண்டி பரவலாக யாகம் நடத்தி வரும் வேளையில், சேலம் பட்டைக்கோயில் அருகே கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், 'கொடும்பாவி' சடங்கு என்ற நூதனமான சடங்கை கடைப்பிடித்து வருகின்றனர். "வருண பகவான்தான் நமக்கெல்லாம் மழையைக் கொடுக்கிறார். அவரை, 'கொடும்பாவி' என்ற பெண் மயக்கி தன் வசப்படுத்தி வைத்துக் கொள்கிறாள். வருண பகவான் தன் மனைவிக்குத் தெரியாமல், அடிக்கடி கொடும்பாவி வீட்டுக்குச் சென்று விடுகிறார். அங்கிருக்கும் காலங்களில் மழை வருவதில்லை. வறட்சி ஏற்படுகிறது. அதனால் நாங்கள் கொடும்பாவியை உருவப்பொம்மையாக செய்து, அதை செருப்பால் அடித்து அசிங்க
சிறுதானிய  தின்பண்டங்கள் :”நாவில் எச்சில் ஊறவைக்கும் தினை நெய் லட்டு, மாப்பிள்ளை சம்பா அதிரசம்”;  அசத்தும் சேலம் இளைஞர்

சிறுதானிய  தின்பண்டங்கள் :”நாவில் எச்சில் ஊறவைக்கும் தினை நெய் லட்டு, மாப்பிள்ளை சம்பா அதிரசம்”; அசத்தும் சேலம் இளைஞர்

சேலம், வர்த்தகம்
வணிகமயமான இன்றைய உலகில் தொழில் தர்மம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையில், பாரம்பரிய சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் 100 சதவீத வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கிறார், பிரபாகரன். சேலம் உடையாப்பட்டி செல்வநகரை சேர்ந்த பிரபாகரன், அடிப்படையில் எம்.இ., கணினி பொறியியல் பட்டதாரி. கடந்த சில ஆண்டுகளாக பாரம்பரிய விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இயற்கை விவசாயத்தின் நீட்சியாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனிவரகு, கம்பு, மூங்கில் அரிசி உள்ளிட்ட சிறுதானியங்களை விற்பனை செய்வதோடு, அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட தின்பண்டங்களாகவும் தயாரித்து விற்பனை செய்கிறார். அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும். மட்டுமின்றி, குழந்தைகள், பெரியவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களையும் சிறுதானியங்களில் தயாரிக்கலாம். தினை, சாமை, வர
வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

வெண்குஷ்டம் உள்ளவரும் மனிதரே…! “ஒதுக்குதல் வேண்டாம்” – மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்

அலோபதி, சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, தோல். ஒருவருக்கு இயல்பான தோலின் நிறம் என்பது மரபியல் சார்ந்தே அமைகின்றன. அதேநேரம் தோல் நோய்கள் ஏற்பட்டால், அவை மனதையும் உளவியல் ரீதியாக தாக்குகின்றன. குறிப்பாக, தோல் நோய்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். தோலில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, வெண்குஷ்டம் (Vitiligo). உலகளவில் 1 சதவீதம் பேருக்கு வெண்குஷ்டம் பிரச்னை உள்ளதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. வெண்குஷ்டம் ஏன் ஏற்படுகிறது, கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக சொல்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப் கேர் மருத்துவமனை' தோல் சிகிச்சை மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ். இனி அவர்... ஒருவருடைய தோலில் வெண்குஷ்டம் உருவாவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணுக்கள் குறைபாடு அல்லது தோலுக்கு நிறம் தரக்கூடிய 'மெலனின்'