Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

திரிபுரா: பத்திரிகையாளர் படுகொலை; தொடரும் துயரம்

திரிபுரா: பத்திரிகையாளர் படுகொலை; தொடரும் துயரம்

இந்தியா, முக்கிய செய்திகள்
திரிபுரா மாநிலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் ஒருவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். திரிபுரா மாநிலம் மேற்கு மாவட்டம் கோவாய் பகுதியில் இன்று (செப். 20) இரு பிரிவினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. பின்னர், கலவரமாக வெடித்தது. இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஒரு பத்திரிகையாளரை, மர்ம கும்பல் படுகொலை செய்துள்ளது. எனினும், கொலையுண்ட பத்திரிகையாளர் யார் என்ற முழு தகவலும் வெளியாகவில்லை. கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. தொடரும் துயரம்: கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த லங்கேஷ் பத்ரிகே என்ற பத்திரிகையின் முதன்மை செய்தி ஆசிரியரான கவுரி லங்கேஷ், கடந்த 5ம் தேதி அவருடைய வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில நாள்களுக்குள், பீஹார் மாந...
குண்டர் சட்டம்: ஜனநாயக குரல்வளையை நசுக்கும் ஆயுதம்!

குண்டர் சட்டம்: ஜனநாயக குரல்வளையை நசுக்கும் ஆயுதம்!

இந்தியா, குற்றம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சமூக விரோதிகள், ரவுடிகளை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட குண்டர் தடுப்புக்காவல் சட்டம் (GOONDAS ACT), அரசுக்கு எதிராக போராடுவோர் மீது பாயும் போக்கு அதிகரித்துள்ளதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.   இந்தியா, ஆங்கிலேயர்களின் காலனிய ஆதிக்கத்தில் இருந்தபோது, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் இந்தியர்களை ஒடுக்குவதற்காக தடுப்புக் காவல் சட்டத்தைப் பயன்படுத்தினர். நாடு விடுதலை அடைந்த பிறகும், பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை கட்டுக்குள் கொண்டுவர, ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த தடுப்புக் காவல் சட்டத்தை இந்திய அரசும் அப்படியே பின்பற்றி வந்தது.     இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டு வந்த 'மிசா' (MISA) சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 110806 பேர் எந்தவித காரணமுமின்றி கைது ...
கிரிக்கெட்: முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

கிரிக்கெட்: முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒரு நாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (செப். 17) நடந்தது. காலை முதலே சென்னையில் பரவலாக மழை இருந்ததால், ஆட்டத்தின் இடையிலும் மழை குறுக்கிடலாம் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். உடல்நலம் சரியில்லாததால் கடைசி நேரத்தில் ஷிகர் தவாண் விலகியதை அடுத்து, அந்த இடத்தில் ரஹானே சேர்க்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், ரஹானேவும் களமிறங்கினர். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் முதல் மூன்று விக்கெட்டுகள் விரைவிலேயே வீழ்ந்தன. பெரிதும்...
”பணமதிப்பு நீக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை” – ரங்கராஜன்

”பணமதிப்பு நீக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை” – ரங்கராஜன்

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், வர்த்தகம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கருப்பு பண நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் கூறினார். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு முதல் இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அதிரடியாக குண்டை தூக்கிப் போட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இது அபாயகரமான நடவடிக்கை என்று அப்போதே எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் பலரும் எச்சரித்தனர். அகலமான மார்பை விரித்துப் பேசும் நரேந்திர மோடி இதையெல்லாம் கேட்பாரா?. நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாத கும்பலுக்கு கள்ளத்தனமாக பணம் போய்ச்சேர்வதைத் தடுக்கவும் உயர்மதிப்பு கொண்ட ரூபாய் தாள்களை செல்லாததாக்குகிறோம் என்றார். சில நாள்கள் கழித்து, கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கவும், டிஜிட்டல் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும்தான் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்ட...
மனித மூலதனக் குறியீடு: இந்தியாவின் நிலை மோசம்!

மனித மூலதனக் குறியீடு: இந்தியாவின் நிலை மோசம்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வல்லரசு கனவை முன்னெடுத்துச் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி கர்ஜனை செய்தாலும், மனித மூலதனக் குறியீட்டில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கி இருப்பது உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் மனித வளத்தைப் பயன்படுத்தும் விதம், மனிதர்களின் உற்பத்திறன் குறித்து உலகப் பொருளாதார மன்றம் (WORLD ECONOMIC FORUM) என்ற அமைப்பு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. அந்த அமைப்பு, உலகம் முழுவதும் 130 நாடுகளில் உள்ள மனித மூலதன பயன்பாட்டை ஆய்வு செய்து நேற்று (செப். 13) அறிக்கை (GLOBAL HUMAN CAPITAL  REPORT-2017) வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், இந்தியாவுக்கு 103-வது இடமே கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதென்ன மனித மூலதனம்?: உலகப் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வ தாக்கத்தையும், மதிப்புக் கூட்டும் வல்லமையையும் மக்களுக்கு அளிக்கும் அறிவும், திறமையுமே மனித மூலதனம் என்று அந்த அமைப்...
நீட் தேர்வு:  பலன் அடைந்தவர்கள் யார்?

நீட் தேர்வு: பலன் அடைந்தவர்கள் யார்?

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வினால் பலன் அடைந்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. நீட் தேர்வு காரணமாக கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதுடன், முற்பட்ட வகுப்பினர் பெருமளவிலான எம்பிபிஎஸ் இடங்களை கபளீகரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. நீட் எனப்படும் மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு தமிழகம் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், ஜெயலலிதாவுக்குப் பிறகு வலுவான அரசியல் தலைவர்கள் இல்லாத நிலையில், இந்தாண்டு தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைந்துவிட்டது. அந்த தேர்வு முடிவின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையும் நடத்தி முடித்திருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்குப் பிறகு நீட் தேர்வுக்கு எதிரான உக்கிரம் மாநிலம் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் போராட்டம் பரவலாக வலுத்து வருகிறது. எம்பிபிஎஸ் மாணவ...
டி-20: இலங்கையை கதற விட்டது இந்தியா

டி-20: இலங்கையை கதற விட்டது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டியில், கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரே ஒரு டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி நேற்று (செப். 6) கொழும்பு பிரேமாதாசா மைதானத்தில் நடந்தது. பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி, மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி தரப்பில் ரஹானே, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல், அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டு இருந்தனர். இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிக்வெல்லா, கேப்டன் உபுல் தரங்கா ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தரங்கா 5 ரன்களிலும், டிக்வெல்லா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் முனவீரா மட்டும் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப...
இந்தியா: கேள்விக்குறியாகும் பத்திரிகையாளர் பாதுகாப்பு!

இந்தியா: கேள்விக்குறியாகும் பத்திரிகையாளர் பாதுகாப்பு!

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கர்நாடகாவில் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், இந்தியாவில் ஊடகங்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கர்நாடகாவில், கடந்த ஆண்டு எழுத்தாளர் கல்புருகி கொல்லப்பட்டார். நேற்று (செப். 5) லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ். இருவருமே இடதுசாரி சித்தாந்தங்களை பேசக்கூடியவர்கள்; எழுதக்கூடியவர்கள். தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளர்கள். கவுரி லங்கேஷின் படுகொலைக்கு காரணமென காவி கும்பல்களின் மீதான சந்தேகம் இயல்பாகவே வலுத்துள்ளது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் (International Federation for Journalists) சில தகவல்களை வெளியிட்டுள்ளது. 140 நாடுகளில் 6 லட்சம் பத்திரிகையாளர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு, இந்த சம்மேளனம் இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் 122...
சாதனை: டோனி ‘100’ – கோஹ்லி ‘1000’

சாதனை: டோனி ‘100’ – கோஹ்லி ‘1000’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
டோனி: இலங்கை கிரிக்கெட் அணியுடனான ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் அந்த நாட்டு வீரர் தனஞ்ஜெயாவை டோனி, 'ஸ்டம்பிங்' செய்து அவுட் ஆக்கினார். இதன்மூலம், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் டோனி 100 வீரர்களை 'ஸ்டம்பிங்' முறையில் அவுட் செய்து உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் இலங்கையின் முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககரா (99 முறை) உள்ளார். கோஹ்லி: இலங்கை உடனான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் கோஹ்லி இரண்டு முறை சதம் விளாசி உள்ளார். நடப்பு ஆண்டில், 18 ஒரு நாள் போட்டிகளில் கோஹ்லி  1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்....
கிரிக்கெட்: இலங்கை மீண்டும் ‘வாஷ் – அவுட்’

கிரிக்கெட்: இலங்கை மீண்டும் ‘வாஷ் – அவுட்’

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் இலங்கை அணி 5 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக தோற்று வாஷ் - அவுட் ஆனது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, ஒரு டி-20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி, 3&0 கணக்கில் வென்று இருந்தது. நான்காவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று (செப். 3) நடந்தது. இந்தப் போட்டியிலாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் இலங்கை அணி வீரர்கள், கடந்த இரு நாட்களாக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். டாஸ் ஜெயித்த இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஹர்திக் பா...