Thursday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

இந்தியா

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்!

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?: சர்ச்சை கிளப்பும் சிவாஜிலிங்கம்!

இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டது உறுதி என்றால் அவருடைய உடலை ஏன் மரபணு சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றும், மரண சான்றிதழ் வழங்காதது ஏன் என்றும் கேட்டுள்ளதன் மூலம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார், இலங்கை வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். எம்.கே.சிவாஜிலிங்கம். கடந்த 2009ம் ஆண்டு நடந்த ஈழ இறுதிப் போரின்போது, மே 17ம் தேதி, சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலில் வி டுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சிங்கள பேரினவாத அரசு, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொத்துக் குண்டுகள் வீசி படுகொலை செய்தது. முள்ளிவாய்க்கால் கடல் பகுதியில் இருந்து அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை ராணுவம் தரப்பில் சொல்லப்பட்டது. எனினும் அவருடைய இறப்பு குறித்து இன்றும் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்ல...
”நம்புங்கள் பிரதமரே!  முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

”நம்புங்கள் பிரதமரே! முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு  (Demonetisation) நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பலர் கேலி, கிண்டலாக மீம்ஸ்கள் மூலம் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர். இரவு நேரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வயதிலும் அப்படி என்னதான் பற்றுதலோ தெரியவில்லை. இப்படிச் சொல்வது கொஞ்சம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஸ்டைல் போலத் தோன்றினாலும் யாரும் அனர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவர் நாட்டை உலுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் இரவில்தான் அறிவிக்கிறார். பணமதிப்பிழப்பு முதல் ஜிஎஸ்டி வரை எல்லாமே இரவில்தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்படுவது குறித்து எனக்குக்கூட தெரியாது என அப்பாவியாகச் சொன்னார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. ரிசர்வர் வங்கி ஆளுநருக்கே கூட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் தெரி...
நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா;  தொடரை வென்று சாதனை

நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா; தொடரை வென்று சாதனை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
திருவனந்தபுரத்தில் இன்று (நவம்பர் 7, 2017) நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, 2-1 கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. டெல்லியில் நடந்த முதல் இருபது ஓவர் போட்டியில் இந்தியாவும், ராஜ்கோட்டில் நடந்த இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்தும் வென்று 1-1 கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய் ந்ததாக இருந்தது. மேலும், 29 ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் மைதானத்தில் ஐசிசி போட்டி நடப்பதால் எதிர்பார்த்ததைவிட ரசிகர...
வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் யார் யார்?

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வெளிநாடுகளில் பல்லாயிரம் கோடிக்கணக்கில் சொத்துகளை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்கள் 'பாரடைஸ் ஆவண கசிவு' மூலம் வெளியாகியுள்ளது. இது, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்குவது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து மட்டும் 343.04 பில்லியன் டாலர் மதிப்பிலான கருப்புப் பணம் அயல் நாடுகளில் பதுக்கப்பட்டு உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது. இதன்மூலம் கருப்புப் பணம் பதுக்கலில் உலகளவில் இந்தியாவுக்கு 5வது கிடைத்துள்ளது. அதேநேரம், 2011ம் ஆண்டில் மட்டும் 84.93 பில்லியன் டாலர் கருப்புப் பணம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு 3...
மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

மோடி சொல்வது வேடிக்கையாக இருக்கிறது!

அரசியல், இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மதவாத அரசியலால் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் ஆண்டுக்கு ஆண்டு பின்னோக்கிச் சென்றுகொண்டுள்ள நிலையில், ஊடகவியலாளர்களின் கடமை பற்றி பிரதமர் நரேந்திர மோடி வகுப்பெடுப்பது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் இருக்கிறது. தினத்தந்தி நாளிதழின் பவள விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவம்பர் 6, 2017) சென்னை வந்திருந்தார். விழாவில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களின் கடமை குறித்தும் பேசத்தவறவில்லை. ஊடகங்கள் குறித்து அவர் பேசியதில் முக்கியமான இரண்டு செய்திகள் கவனத்துக்குரியவை. ஒன்று, இந்தியாவில் ஊடகங்கள் அரசை சுற்றியே சுழல்கின்றன. இரண்டாவது, 125 கோடி மக்களை சுற்றியே இருக்க வேண்டும். அவர்களின் எண்ணங்களை பத்திரிகைகள் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் அந்த இரண்டு செய்திகள். அவர் எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இந்தியாவில் தனி முதலாளிகளின் கையில் ஊடக...
அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு, நிலைகுலைந்த அதிமுக அரசாங்கம் போன்ற சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை இன்று (நவம்பர் 6, 2017) கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்குள் எந்த வகையிலாவது நுழைந்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 சதவீத பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்ட பாஜகவுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு கடுமையான சவால்களை கொடுத்து வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது பெருங்கனவு; இப்போதைக்கு ஒன்றிரண்டு பேரையாவது எம்எல்ஏ ஆக்குவோம் என்பதுதான் அ க்கட்சியின் திட்டம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியில் இருந்தே இன்னும் எவ்வளவு நாள்தான் கூவிக்கொண்டிருக்க முடியும்?. பாஜகவின் திட்டங்களை செயல்படுத்துவதற...
பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

பாஜக 100 சதவீதம் மதவாத கட்சியேதான்!: திருமாவளவன்

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திராவிட கட்சிகளிடம் சாதிய உணர்வு இருந்தாலும், ஜனநாயகத் தன்மை கொண்டது; ஆனால் பாஜக அப்படி அல்ல. அது முழுக்க முழுக்க மதவாதம் பேசக்கூடிய கட்சி என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று (நவம்பர் 5, 2017) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். திராவிடக் கட்சிகள், பாஜக, தலித் அரசியல், ரஜினி, கமல் அரசியல், மதவாதம், சாதியம் என பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவருடைய பேட்டியில் இருந்து... பாஜக தலித் கட்சிகளை வளைக்கும் திட்டத்துடன்தான் செயல்பட்டு வருகிறது. ராம்விலாஸ் பாஸ்வான் முதல் மாயாவதி வரை அதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும். தமிழ்நாட்டிலும் அதற்கு முயற்சித்தார்கள். அதை குறிப்பிடும் வகையில்தான் என்னை வளைக்க முடியாமல் தோற்றுப்போன வருத்தத்தில் என் மீது பாஜக தலைவர் தமிழிசை விமர்சனங்களை முன்வைக்க...
இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ராஜ்கோட்டில் இன்று (நவம்பர் 4, 2017) நடந்த இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, நியூஸிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியின் கோலின் முன்ரோ சதம் அடித்து சாதனை படைத்தார். இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது. அதனால் இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியாவும், வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்தும் களமிறங்கின. அதிரடி தொடக்கம்: இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதன்முதலாக வாய்ப்பு பெற்றார். நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தீ, டாம் லேதம் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கிளைன் ...
”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!:  இந்து மகா சபா மிரட்டல்

”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!: இந்து மகா சபா மிரட்டல்

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் கமல்ஹாஸனையும், அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாஸன் சில நாள்களுக்கு முன், 'தமிழ்நாட்டில் இந்து தீவிரவாதம் ஊடுருவிட்டது. இந்து தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான்' வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் கமல்ஹாஸன் மீது மதத்திற்கு எதிராக அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதற்கிடையே அகில பாரத இந்து மகாசபாவின் தேசிய துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா, மீரட் நகரில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: கமல்ஹாஸனும் அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப...
விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரமரணம் அடைந்து இன்றுடன் (நவம்பர் 2, 2017) பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், உலகத்தமிழர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். தமிழ்ச்செல்வன் யார்? விடுதலைப்புலிகள் இயக்க செயல்பாடுகள் மீது பற்றுகொண்டு, தன்னுடைய 17வது வயதில் இயக்கத்துடன் இணைத்துக் கொண்ட சு.ப.தமிழ்ச்செல்வன், இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். எனினும், இயக்கத்தில் இணைந்த பிறகு, யாழ்ப்பாணமே அவருடய களமானது. இலங்கை அரச பயங்கரவாதத்தின் சதியால் வான்வெளி ராணுவக் குண்டு வீச்சில் 2.11.2007ம் தேதி காலை 6 மணியளவில் தமிழ்ச்செல்வன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். அவர் மரணிக்கும் வரை கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்காக நெஞ்சுரத்துடன் உழைத்த முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராகவே விளங்கினார், தமிழ்ச்செல்வன். துவக்கத்தில் ப...