Thursday, November 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?;  சமூகவலைத்தளங்களில் வைரல்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி,...
பங்குச்சந்தை: 3 நாள்களில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

பங்குச்சந்தை: 3 நாள்களில் 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், வர்த்தகம்
தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குச்சந்தைகள் இன்றும் (பிப்ரவரி 6, 2018) சரிவுடன் தொடங்கின. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 9.61 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பங்குச்சந்தையில் நீண்டகால முதலீட்டிற்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் கடும் சரிவுடன் பங்குச்சந்தைகள் முடிவு பெற்றன. இதன் தாக்கம் மறுநாளும் தொடர்ந்தது. 2ம் தேதியன்றும் பெரும் சரிவுடனேயே பங்குச்சந்தைகள் தொடங்கின. இந்நிலையில், உலகளவில் பங்குச்சந்தைகள் இன்றைக்கு எதிர்பாராத சரிவை சந்தித்தன. அமெரிக்கா டாலருக்கான தேவை அதிகரிப்பு, அந்நாட்டு பங்குச்சந்தையிலும் எதிரொலித்தன. 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க பங்குச்சந்தையான டவ்ஜோன்ஸ் பெரும் சரிவுடன் இன்று தொடங்கியது. தைவான், ஜப்பான் நாடுகளிலும் பங்குச்சந்தைகள்...
ஆடிட்டர் குருமூர்த்தி இப்படி பேசலாமா?

ஆடிட்டர் குருமூர்த்தி இப்படி பேசலாமா?

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி, பொருளாதார அறிவு இல்லாதவர்கள்தான் பக்கோடா விற்பனை செய்வதை விமர்சிப்பார்கள் என்ற கருத்துக்கு, சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ, மரணம் அடைந்த பிறகு அதன் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. இவர் பாஜகவின் ஊதுகுழலாக அறியப்பட்டவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி. கடந்த ஜனவரி இறுதியில் வானொலியில் 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''நாட்டில் பக்கோடா விற்பவர்கள்கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். அதுவும் வேலைவாய்ப்புதானே?'' என்றார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கடந்த மக்களவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தவறான பொருளாதார கொள்கைகள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ...
துணைவேந்தர் கணபதி மட்டும்தான் குற்றவாளியா?

துணைவேந்தர் கணபதி மட்டும்தான் குற்றவாளியா?

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ள விவகாரத்தில் அவரும் ஓர் அம்புதானே தவிர, தகுதியில்லாத நியமனங்களின் பின்னால் உள்ள நியமனக்குழு, ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் பரவலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளன. பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவது என்பது துணை வேந்தர் மற்றும் பதிவாளர் ஆகிய இருவரின் செயல்முறைகளுக்கு மட்டுமே உட்பட்டது அல்ல. ஓர் உதவி பேராசிரியரை நியமிக்க வேண்டுமெனில் அதில் பல்வேறு படிநிலைகள் உள்ளன. உதாரணமாக, உதவி பேராசிரியர் நியமனத்தை எடுத்துக்கொள்ளலாம். எந்தெந்த துறையில் காலிப்பணியிடங்கள் உள்ளன?, அதற்கான கல்வித்தகுதிகள் என்னென்ன? என்பது போன்ற விவரங்கள் பத்திரிகைகள், பல்கலைக்கழக இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படும். இதற்காக விண்ண...
‘லஞ்ச’ துணைவேந்தர் கணபதிக்கு  நள்ளிரவில் ஊர் சுற்றிக்காட்டிய போலீசார்!

‘லஞ்ச’ துணைவேந்தர் கணபதிக்கு நள்ளிரவில் ஊர் சுற்றிக்காட்டிய போலீசார்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜை, நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கு முன்பாக நள்ளிரவு நேரத்தில், அவரை ஜீப்பில் அழைத்துச்சென்று போலீசார் ஊர் சுற்றிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி (67). இப்பல்கலையில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். இவர், கடந்த 2016ம் ஆண்டிலேயே இந்தப்பணியில் சேர்ந்துள்ளார். சில விதிகளை மீறி, சுரேஷை உதவிப்பேராசிரியராக நியமிக்க வேண்டுமெனில் ரூ.30 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி கேட்டுள்ளார். அதை தருவதாக ஒப்புக்கொண்ட சுரேஷ், கொஞ்சம் தொகையை முன்பணமாகக் கொடுத்துள்ளார். மீதப்பணத்தை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக அவகாசம் கேட்டுள்ளார். அந்த நம்பிக்கையின்பேரில் அவர் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால...
பாரதியார் பல்கலை துணைவேந்தர்  கைதானது எப்படி?;  ”வசூலிப்பதே  முழுநேர தொழில்”;  திடுக்கிடும் தகவல்கள்

பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைதானது எப்படி?; ”வசூலிப்பதே முழுநேர தொழில்”; திடுக்கிடும் தகவல்கள்

குற்றம், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பொறுப்புக்கு வந்த நாள் முதல், நடந்த அனைத்து பணி நியமனங்களிலுமே யுஜிசி விதிமீறல்களும், பண பேரமும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தட்சணாமூர்த்தி தலைமையிலான போலீசார், இன்று (பிப்ரவரி 3, 2018) காலையில் கையும், களவுமாக சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். இந்தப் பல்கலையின் துணைவேந்தராக கணபதி, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். மன்னார்குடி கும்பலின் ஆசியுடன் அவர் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, ஜெயலலிதாவுக்கு ரொம்பவே இணக்கமாக இருந்தார். மன்னார்குடி கும்பல் ஆசி: அதனால்தான், சசிகலா கும்பல் கைக்காட்ட...
பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கைது; ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்

பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கைது; ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டார்

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, 30 லட்சம் ரூபாயை லஞ்சம் வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பொறி வைத்துப்பிடித்து, கைது செய்தனர். கோயம்பத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர், கணபதி. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இப்பதவியில் அவர் நியமிக்கப்பட்டார். அவர் இந்த பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பல்கலைக்கழகத்தில் தற்காலிக பணியாளர்கள் நியமனம் போன்றவற்றில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் இயங்கும் அதன் உறுப்புக்கல்லூரியில் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு சுரேஷ் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். அந்த பணியில் சேர வேண்டுமானால், தனக்கு ரூ.35 லட்சம் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கணபதி பேரம் பேசியுள்ளார...
ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – சினிமா விமர்சனம்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்று (பிப்ரவரி 2, 2018) வெளியாகி இருக்கிறது, 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்'. திரையரங்குகள் முன்பு, பெரிய அளவில் கட்-அவுட் வைக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது அவருடைய ரசிகர்கள் பட்டாளம். நடிகர்கள்: விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி, டேனியல், விஜி சந்திரசேகர், ராஜ்குமார், ரமேஷ் திலக் மற்றும் பலர். இசை: ஜஸ்டின் பிரபாகரன்; ஒளிப்பதிவு: ஸ்ரீசரவணன்; படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்; இயக்கம்: ஆறுமுககுமார். கதை என்ன?: ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் அருகே உள்ளது எமசிங்கபுரம். அங்கே, எமகுலம் என்ற பழங்குடியினர் மட்டுமே வசிக்கின்றனர். அவர்களுக்கு எமதர்மன்தான் குலதெய்வம். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் எமனிடம் வாக்கு கேட்டுவிட்டு அதன்படி நடப்பதுதான் எமசிங்கபுரத்தின் வழக்கம். அந்த ஊரின...
கியூபா போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

கியூபா போராளி ஃபிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
கியூபா புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகனான ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். கியூபா தலைநகரான ஹவானாவில் தற்கொலை செய்துகொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 68. இறந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 1, 2018) அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவி மிர்தா டயஸ்&பாலார்ட். அவருக்குப் பிறந்த ஒரே மகன்தான், இப்போது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் டியஸ்-பாலார்ட். இவர், 'ஃபிடலிட்டோ' என்றும் அந்நாட்டு மக்கள் அழைத்து வந்தனர். ஃபிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ்-பாலார்ட், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அணுக்கரு இயற்பியலாளர் ஆவார். கியூபாவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'கிரான்மா', ''கடந்த பல மாதங்கங்...
பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் மு...