Wednesday, October 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, உயர்நீதிமன்றம் மார்ச் 6, 2019ம் தேதி உத்தரவிட்டுள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று திடீரென்று காணாமல் போனார். மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை வேறு முண்டம் வேறாக கொல்லப்பட்டுக் கிடந்தார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. படித்து வந்தபோது, தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருக்கமாகப் பழகி வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய கும்பல், அவரை சாதிய வன்மத்துடன் ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது பல்வேற...
சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

சங்ககிரியை வளைக்கும் கந்துவட்டி மாஃபியாக்கள்! வலையில் சிக்கியவர்கள் சொத்துகளை மீட்க முடியாமல் தவிப்பு!!

ஈரோடு, குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த விவசாயிகளும், சிறு தொழில் அதிபர்களும் சண்முகம் மற்றும் மணி என்ற இருபெரும் கந்துவட்டி மாஃபியாக்களால் சொத்து, சுகங்களை இழந்து நடுத்தெருவில் தத்தளிக்கும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். கடந்த 7.2.2019ம் தேதியன்று சென்னையில் தங்களை, விவசாயிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சங்ககிரி சண்முகம் பிரதர்ஸ் தங்களுடைய, நிலத்தையும் இதர சொத்துகளையும் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் மிரட்டுவதாக ஊடகங்களிடம் குமுறினர். ஆளுங்கட்சியினர்க்கு எதிரான குற்றச்சாட்டு என்பதால் அதை அப்படியே எல்லா ஊடகங்களும் பிரதிபலித்தன.   ஆனால், சண்முகம் சகோதரர்களின் பேட்டியைப் பார்த்த சங்ககிரிகாரர்களோ தலையில் அடித்து நொந்து கொண்டனர். உள்ள நிலவரம் வேறு; செய்தியாக சொல்லப்படுவதோ வேறு என்பதால் அந்த ஊர் மக்கள் ஊடகங்கள் மீதும் நம்பிக்கையற்றுப் ப...
தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’

தடம் – விமர்சனம்! ‘ஓருரு இரட்டையர்களின் சடுகுடு ஆட்டம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'தடையறத்தாக்க', 'மீகாமன்' வரிசையில் இயக்குநர் மகிழ் திருமேனியிடம் இருந்து வந்திருக்கும் மற்றுமொரு சிறந்த படைப்பு, 'தடம்'. அண்மைக்காலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறார், அருண்விஜய். அந்த பட்டியலில் அவரின் ஆகச்சிறந்த படங்களுள் 'தடம்' படத்திற்கு முக்கிய இடம் உண்டு. நடிகர்கள்: அருண்விஜய் தன்யா ஹோப் ஸ்மிருதி வித்யா பிரதீப் யோகிபாபு பெப்சி விஜயன் மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு: கோபிநாத்; இசை: அருண் ராஜ்; எடிட்டிங்: ஸ்ரீகாந்த் இயக்கம்: மகிழ் திருமேனி   கதையின் 'ஒன்லைன்': ஓருரு இரட்டையர்கள் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காவல்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். அந்தக் கொலை வழக்கில் இருந்து சட்ட ரீதியாக விடுதலை செய்யப்படுகின்றனர். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து அவர்கள் எப்படி தப்பினார்கள் என...
பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் கடினம்! மாணவர்கள் அதிர்ச்சி!!

பிளஸ்-2 பொதுத்தேர்வு: தமிழ் வினாத்தாள் கடினம்! மாணவர்கள் அதிர்ச்சி!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வில் முதல் நாள் நடந்த தமிழ் மொழிப்பாடத்தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கவலையுடன் தெரிவித்து உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு இன்று (மார்ச் 1, 2019) பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வை 7082 பள்ளிகளைச் சேர்ந்த 861107 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தனித்தேர்வர்களோடு சேர்த்து மொத்தம் 887992 பேர் இந்த தேர்வை எழுதுவதாக அரசுத்தேர்வுகள்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.   சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 105476 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 40068 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.   பிளஸ்-2 பொதுத்தேர்வு இதுவரை 6 பாடங்களுக்கும் சேர்த்து 1200 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் 200 மதிப்பெண்...
அவமதிப்பு வழக்கு: பெரியார் பல்கலை பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

அவமதிப்பு வழக்கு: பெரியார் பல்கலை பதிவாளர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதவி பேராசிரியர் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்காமல், நீதிமன்ற உத்தரவை அவமதித்த பெரியார் பல்கலை பதிவாளரை மார்ச் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன். பெரியார் பல்கலையில் பொருளியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழக மானியக்குழு, பகுதி நேரமாக பி.ஹெச்டி., முனைவர் பட்டத்தை எந்த வகையிலான விடுப்பும் எடுக்காமல் நிறைவு செய்யும்பட்சத்தில், அதற்குரிய காலத்தையும் கற்பித்தல் அனுபவமாகக் கணக்கிட்டு, பதவி உயர்வின்போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உதவி பேராசிரியர் வைத்தியநாதனுக்கு பதவி உயர்வின்போது மேற்சொன்ன விதியை ஏற்காமல், அவருக்கு பதவி உயர்வும் வழங்கவும் பல்கலை நிர்வாகம் மறுத்துவிட்டது.   இதையடுத்து வைத்தியந...
கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

கால்களை கழுவியது கரிசனமா? காவி நாயகனின் நாடகமா?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
-சிறப்புக்கட்டுரை-   கடந்த ஞாயிறன்று (பிப். 24) பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலி காட்சியை பதிவிட்டு இருந்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஐந்து துப்புரவு தொழிலாளர்களின் கால்களை அவரே தண்ணீர் ஊற்றி கழுவிவிட்டு, வெள்ளைத்துணியால் துடைத்தும் விடுகிறார். அந்த காணொலியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் இவை. நரேந்திரமோடி, 'என் வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சியைத் தருவது இந்த தருணம்தாம். தூய்மை இந்தியா இயக்கம் வெற்றி பெறுவது இவர்களால்தான். துப்புரவு தொழிலாளர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,' என்று உணர்ச்சிகரமாக கருத்துகளை பதிவு செய்திருந்தார். மூன்றே நாளில், அந்த காணொலிக் காட்சியை 5.38 லட்சம் பேர் பார்த்துத் தள்ளிவிட்டனர். 24 ஆயிரம் பேர் அவருடைய பதிவை மறு ட்வீட் செய்துள்ளனர்.   தன்னை ஓர் ஏழைத்தாயின் மகன் என்றபோது அவருக்குக் கிடைத்த பாராட்டைவிட,...
கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!

கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து போக்குக் காட்டி வந்த கோகுல்ராஜின் தோழி சுவாதி, கைது ஆணை நடவடிக்கைக்கு பயந்து திடீரென்று நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி, நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில்தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார். அதனால் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்தன.   இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறையினர், கோகுல்ராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவரா...
திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

திண்ணை: ஆக… இந்த முறையும் தளபதி சொதப்புறார்னு சொல்லுங்க!

அரசியல், தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
''ஒண்ணு, முட்டா பீஸூ... இன்னொன்னு அடிமுட்டா பீஸூ.... ஆனாலும் சில நேரத்துல ரெண்டு பேருமே கெட்டிக்காரய்ங்கப்பா...'' என்று பேசிக்கொண்டே திண்ணையில் வந்து அமர்ந்தார் பேனாக்காரர்.   ''அட அந்த ரெண்டு பேரும் யாருனு சொன்னாத்தானே எங்களுக்கெல்லாம் விளங்கும்'' என்றார் நக்கல் நல்லசாமி.   அதற்குள் தர்பூசணி பழத்துண்டுகளுடன் வந்து அரட்டையில் ஐக்கியமானார் நம்ம ஞானவெட்டியார். ''போன சட்டமன்ற தேர்தலப்பவே முரசு கட்சிய திமுக கூட்டணிக்குள்ள கொண்டு வர்றதுல சூரியக்கட்சி படாதபாடு பட்டுச்சு. அவங்க கேட்ட தொகுதிகள், தேர்தல் செலவுனு பேரம் படியாததாலதான் சூரியக்கட்சில இருந்து வெளியேறி, மநகூவுல சங்கமிச்சாரு கேப்டன். இந்தமுறையும் முரசு கட்சிய கூட்டணிக்குள்ள இழுக்கறதுல வழக்கம்போல தளபதியார் சொதப்பிட்டாரேனு சூரியக்கட்சிக்காரய்ங்களே புலம்புறாங்கப்பா.   மாம்பழம்தான் கனியாம போ...
ஏஸ் பவுண்டேஷன் புலிப்பாய்ச்சல்! கலகலக்கும் தானம் அறக்கட்டளை!!

ஏஸ் பவுண்டேஷன் புலிப்பாய்ச்சல்! கலகலக்கும் தானம் அறக்கட்டளை!!

சேலம், தமிழ்நாடு, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம்
சேலத்தில் கடந்த பிப்ரவரி 9, 2019ம் தேதியில் உதயமானது, 'ஏஸ் பவுண்டேஷன்' (ACE Foundation). இது, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பேரமைப்பு எனலாம். இந்த அமைப்பு தொடங்கப்பட்ட பதினைந்து நாள்களில், அடுத்தக்கட்ட நகர்வையும் புலிப்பாய்ச்சலில் முன்னெடுத்துள்ளது. ராமநாதபுரம் மண்டலத்தில், இதுவரை 'தான் பவுண்டேஷன்' (DHAN Foundation) கட்டுப்பாட்டில் இயங்கி வந்த சிகரம், சங்கமம், நெய்தல் (ராமநாதபுரம்), புதுகை (புதுக்கோட்டை) மற்றும் முத்துநகர் (தூத்துக்குடி) ஆகிய ஐந்து வட்டாரக் களஞ்சியம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், புதன்கிழமையன்று (பிப்ரவரி 20, 2019) ஏஸ் பவுண்டேஷனில் இணைந்து உள்ளன.   இவை வெறுமனே ஐந்து வட்டாரங்கள் என்று குறைத்துச் சொல்லிவிட இயலாது. ஐந்து வட்டாரங்களின் வாயிலாக 20 ஆயிரம் பெண்களை உள்ளடக்கிய, இன்னும் சொல்லப்போனால் அத்தனை பேரின் குடும்பங்களை உள்ளடக்கிய 1500 குழுக்களைக் கொண்டத...
சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

சுவாதியை கைது செய்யுங்கள்! நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!!

குற்றம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த அவருடைய தோழி சுவாதிக்கு கைது ஆணை பிறப்பித்து நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் இன்று (பிப்ரவரி 20, 2019) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கொலை செய்யப்பட்டார். 24.6.2015ம் தேதி மாலை, அவருடைய சடலம் நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது.   நாமக்கல்லை அடுத்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவர் கோகுல்ராஜ் உடன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்து வந்தார். அப்போதுமுதல் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியுடன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் நெருங்கிப் பழகியதை பிடிக்காத...