Monday, February 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…

இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, மே மாதம் 5ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்காக, வரும் மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவக்
கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்.,
மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி,
ஹோமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப்
படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்
வெற்றி பெறுவது கட்டாயம்.

இந்திய ராணுவக் கல்லூரிகளில்
பி.எஸ்சி., நர்சிங் படிக்கவும், நீட் தேர்வு
கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தேசிய தேர்வு முகமை எனப்படும்
என்.டி.ஏ., ஆண்டுக்கு ஒருமுறை
நீட் தேர்வை நடத்துகிறது.
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட
13 மொழிகளில் இத்தேர்வு நடக்கிறது.

நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு
பிப். 9ம் தேதி தொடங்கியது.
மார்ச் 9ம் தேதி வரை ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
neet.nic.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்க வேண்டும்.

 

தேர்வுக் கட்டணம் எவ்வளவு?:

 

பொது பிரிவு: 1700 ரூபாய்
இதர பிற்படுத்தப்பட்டோர்: 1600 ரூபாய்
பட்டியலின பிரிவு: 1000 ரூபாய்

தேர்வுக்கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரி மற்றும்
சேவைக் கட்டணமும் சேர்த்துச்
செலுத்த வேண்டும்.
ஒரு மாணவர், ஒருமுறை மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டும்.

நீட் தேர்வு – 2024 வரும்
மே மாதம் 5ம் தேதி நடக்கிறது.
பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கி
5.20 மணி வரை என மொத்தம் 3.20 மணி நேரம்
தேர்வு நடத்தப்படும். ஜூன் 14ம் தேதி,
தேர்வு முடிவுகள் வெளியாகும்.

இத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 645 பொது மருத்துவக் கல்லூரிகள், 318 பல் மருத்துவக் கல்லூரிகள், 914 ஆயுஷ் கல்லூரிகள் மற்றும் 47 கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

மேலதிக விவரங்களை, https://nta.ac.in என்ற இணையதளம் மற்றும் neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் அல்லது 011 – 40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

 

– பேனாக்காரன்

%d bloggers like this: