Thursday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

களவாடிய பொழுதுகள் – சினிமா விமர்சனம்

களவாடிய பொழுதுகள் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அய்ங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் தயாரிப்பில் பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின்னர் ஒருவழியாக இன்று (டிசம்பர் 29, 2017) வெளியாகி இருக்கிறது 'களவாடிய பொழுதுகள்'. நடிப்பு: பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், பூமிகா, இன்பநிலா, கஞ்சா கருப்பு, சத்யன், சிறுமி ஜோஷிகா மற்றும் பலர்; இசை: பரத்வாஜ்; இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு: தங்கர் பச்சான். கதைக்கரு: உயிருக்கு உயிராக காதலிக்கும் காதலர்கள் சூழ்நிலை காரணமாக பிரிய நேரிடுகிறது. காதலன் வேறு பெண்ணையும், காதலி வேறு ஆணையும் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர். எதிர்பாராத விதமாக முன்னாள் காதலர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களே களவாடிய பொழுதுகள் படத்தின் மையக்கதை. களவாடிய பொழுதுகள் படத்தின் மொத்த ஷூட்டிங்கும் கடந்த 2010ம் ஆண்டிலேயே முடிந்து விட்டது. எனினும், பல தடைகளைத் தாண்டி ஏழு ஆண்...
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.84 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 29, 2017) அறிவித்துள்ளார். பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்புத் துண்டு-1, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அந்த பரிசுத்தொகுப்பில் அடங்கும். இதன்மூலம் அரசுக்கு ரூ.210 கோடி கூடுதல் செலவாகும் என்றும், அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் விழாவுக்கு முன்னதாக பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்....
3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் ‘ஸ்னேக்’ டேவிட்!;  ”விரலை இழந்த பின்னும்  தணியாத ஆர்வம்”

3000 பாம்புகளை காப்பாற்றிய ஓசூர் ‘ஸ்னேக்’ டேவிட்!; ”விரலை இழந்த பின்னும் தணியாத ஆர்வம்”

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
சி-ற-ப்-பு-க்-க-ட்-டு-ரை ''பாம்புகள் பற்றிய தவறான அபிப்ராயங்களால்தான் அவற்றை மனிதர்கள் கொல்லத் துடிக்கின்றனர். அதைப் புரிந்து கொண்டால் வீட்டுக்கு வீடு நாய் வளர்ப்பதுபோல் பாம்புகளை வளர்க்க ஆரம்பித்து விடுவோம்,'' என்கிறார் டேவிட் மாறன். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் டேவிட் மாறன். அசோக் லேலன்ட் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மனைவி அழகேஸ்வரி. ஹைம் ஸ்கை, வெண்ணிலா என இரண்டு பெண் குழந்தைகள். டேவிட் மாறன் என்று சொன்னால்கூட பலர் ஒரு கணம் யோசிக்கக் கூடும். ஆனால், 'ஸ்னேக்' டேவிட் என்ற அடைமொழியுடன் கேட்டால், சின்னக் குழந்தைகூட அவருடைய வீட்டுக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடும். இந்தக் காலத்தில் சக மனிதர் ஒருவர் சாலையில் அடிபட்டுக் கிடந்தால்கூட 'உச்' கொட்டிவிட்டு கடந்து சென்று விடுவோர்தான் அதிகம். ஆனால், பாம்புகளுக்கு ஏதேனும் சிக்கல் என்றால் முதல் ஆளாக பறந்து சென்று மீட்பதில் தனிக்க...
போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

போலீஸ் வேலையில் சேர ஆசையா?; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு!!

தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 6140 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று (டிசம்பர் 28, 2017) வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 27ம் தேதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக்காவலர் நிலையிலான 5538 (ஆண் 3877, பெண் 1661) பணியிடங்களும், சிறைத்துறையில் 365 (ஆண் 319, பெண் 46) பணியிடங்களும் காலியாக உள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 237 தீயணைப்போர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு, உடல்தகுதித்தேர்வு உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இன்று வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு சலுகைகள் இப்பணியிடங்களுக்கும் பொருந்தும். இப்பணியிடங்கள் அனைத்திற்கும் திருநங்கைகளும்...
வாட்ஸ்ஆப் சேவை டிசம்பர் 31உடன் முடிவுக்கு வருகிறது!; எந்தெந்த போன்களில் தெரியுமா?

வாட்ஸ்ஆப் சேவை டிசம்பர் 31உடன் முடிவுக்கு வருகிறது!; எந்தெந்த போன்களில் தெரியுமா?

இந்தியா, உலகம், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற ஊடகமாக வாட்ஸ்ஆப் செயலியின் சேவை உருப்பெற்று உள்ளது. நாள்தோறும் இதன் சேவையை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். மாதந்தோறும் சராசரியாக வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.3 பில்லியனாக அதிகரித்துள்ளது. நாள்தோறும் 55 பில்லியன் செய்திகள், இதன்மூலமாக பகிரப்படுகிறது. ஒரு பில்லியன் படங்களும் தினமும் பகிரப்பட்டு வருகின்றன. வாட்ஸ்ஆப் செயலி பயன்பாட்டுக்கு வந்த புதிதில் சந்தையில் விற்கப்பட்ட 75 சதவீத மொபைல் போன்களின் இயங்குதளங்கள் பிளாக்பெர்ரி, நோக்கியா நிறுவனத்தினுடையதாக இருந்தது. இயங்குதளங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்போதுள்ள மொபைல் போன்களில் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளங்களே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அதற்கேற்றாற்போல் வாட்ஸ்ஆப் செயலியின் இயங்குதளமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ள...
டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!

டிடிவி தினகரனை ஆதரித்தது ஏன்?; சுப்ரமணியன்சாமி ‘ராமாயண’ விளக்கம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சொந்தக் கட்சியான பாஜகவைவிட்டு டிடிவி தினகரனை ஆதரித்து ஏன் என்ற கேள்விக்கு, சுக்ரீவனை ராமர் எதற்காக உதவிக்கு அழைத்துக்கொண்டாரோ அதற்காகத்தான் என நூதனமாக பதில் அளித்துள்ளார். நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவை எதிர்த்து சுயேச்சையாக களம் இறங்கிய டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இந்த தேர்தலின்போது பாஜகவின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்சுவாமி, பாஜகவைக்கூட முன்னிலைப்படுத்தாமல் சுயேட்சை வேட்பாளரான டிடிவி தினகரனை ஆதரித்து ட்விட்டரில் கருத்துகள் வெளியிட்டு வந்தார். தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசுக்கு பிரமதர் நரேந்திரமோடியின் பரிபூரண ஆசிர்வாதம் இருந்து வரும் நிலை...
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? காவல்துறையில் குழப்பம் நீடிப்பு!

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டது யார்? காவல்துறையில் குழப்பம் நீடிப்பு!

சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
ராஜஸ்தான் கொள்ளையர்களைப் பிடிக்கச்சென்ற தனிப்படை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனை, உடன் சென்ற மற்றொரு ஆய்வாளர் முனிசேகர்தான் சுட்டுக்கொன்றார் என்று தகவல்கள் பரவிய நிலையில், அதை சென்னை மாகர காவல்துறை அவசர அவசரமாக மறுத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளத்தைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கொளத்தூர் பகுதியில் ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாதுராம் மற்றும் கூட்டாளிகளைத் தேடி ஆய்வாளர் பெரியபாண்டியன், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மற்றும் 5 தலைமைக் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். கடந்த 13ம் தேதி, நாதுராம் கும்பலை தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்...
”ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்”; சர்ச்சை கிளப்பிய ஆடிட்டர் குருமூர்த்தியின் ட்வீட்!!

”ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்”; சர்ச்சை கிளப்பிய ஆடிட்டர் குருமூர்த்தியின் ட்வீட்!!

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது ஆறு மாதம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஆண்மையற்றவர்கள் என்று ட்வீட் செய்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். ஆளுங்கட்சி வேட்பாளரான மதுசூதனன் தோல்வி அடைந்தார். இந்நிலையில், அதிமுக கட்சிப் பொறுப்பில் இருந்து வரும் தினகரன் ஆதரவாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சரஸ்வதி, கலைராஜன் உள்ளிட்டோர் நேற்று திடீரென்று நீக்கப்பட்டனர். இது தொடர்பாக துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், பாஜக பிரமுகருமான ஆடிட்டர் குருமூர்த்தி, ''இந்த பலவீனமான நபர்கள், ஆறு மாதம் கழித்துதான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஆண்மையற்ற தலைவர்கள்....
அரசியலுக்கு வர தயங்குவது ஏன்?; ரஜினி விளக்கம்!

அரசியலுக்கு வர தயங்குவது ஏன்?; ரஜினி விளக்கம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பதாக இன்று (டிசம்பர் 26, 2017) கூறினார். ரசிகர்களுடனான புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், கடந்த மே மாதம் ரசிகர்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, “நம்மை யார் விமர்சித்தாலும் அதைக்கண்டு அஞ்சாதீர்கள். எதிர்ப்புகள் இருக்கத் தான் செய்யும். தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுக்கிடக்கிறது. என்னை வாழ வைத்த தமிழ் மக்களுக்கு நான் திரும்பி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறா? போருக்கு தயாராக இருங்கள்” என்றார். தேர்தலைத் தான் அவர் போர் என்ற குறியீடு மூலம் உணர்த்தியதாகவும், நிச்சயமாக அவர் அரசியலில் நுழைவது உறுதியாகவிட்டது என்றும் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ...
ஆர்.கே.நகர்: நோட்டாவிடம் மண்டியிட்ட பாஜக; மீம் கிரியேட்டர்கள் ‘கிழி கிழி’

ஆர்.கே.நகர்: நோட்டாவிடம் மண்டியிட்ட பாஜக; மீம் கிரியேட்டர்கள் ‘கிழி கிழி’

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைக் காட்டிலும் மிகக்குறைவான வாக்குகள் பெற்று மண்ணைக் கவ்விய பாஜகவை, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்கள் கிண்டலடித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பதிவான வாக்குகள் நேற்று (டிசம்பர் 24, 2017) எண்ணப்பட்டன. சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89013 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனைத் தவிர திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். தமிழக தேர்தல் களம் எப்போதுமே திமுக, அதிமுக என இருதுருவ அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பொருத்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக...