Tuesday, November 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.84 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 29, 2017) அறிவித்துள்ளார்.

பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்புத் துண்டு-1, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அந்த பரிசுத்தொகுப்பில் அடங்கும்.

இதன்மூலம் அரசுக்கு ரூ.210 கோடி கூடுதல் செலவாகும் என்றும், அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் விழாவுக்கு முன்னதாக பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.