Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

விசிகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா!

விசிகவில் இருந்து நிரந்தரமாக வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா!

அரசியல், தமிழ்நாடு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நிரந்தரமான விலகுவதாக அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். லாட்டரி சாம்ராஜ்யத்தின்சாம்ராட்டாக விளங்கி வரும்மார்ட்டினின் மருமகன்தான்இந்த ஆதவ் அர்ஜூனா.'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' என்றநிறுவனத்தைத் தொடங்கி,கட்சி மாநாடுகளை ஒருங்கிணைக்கும்பணிகளையும், தேர்தல் நேரத்தில்அரசியல் கட்சிகளுக்குபிரஷாந்த் கிஷோர் போலவியூக வகுப்பாளராகவும்செயல்பட்டு வந்தார். கடந்த 2021 சட்டப்பேரவைத்தேர்தலின்போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு வியூகவகுப்பாளராக பணியாற்றினார்.இதன்மூலமாக விசிக தலைவர்திருமாவளவனுக்கு நெருக்கமான அவர்,நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம்விசிகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த 20 நாளில்,அவரை துணைப் பொதுச்செயலாளராக்கினார்திருமாவளவன். அப்போதே,கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையேஆதவ் மீது எரிச்சல் ஏற்பட்டது. கட்சியில்...
2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

இந்தியா, முக்கிய செய்திகள்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் தேடு பொறியில் உலக நாடுகள் அதிகம் தேடிய நிகழ்வுகள், பிரபலங்கள், விவகாரங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எந்தெந்த சொற்களை அதிகமாக பயனர்கள் தேடினர் என்ற விவரங்களையும் ஆவணப்படுத்துகிறது கூகுள். நாம் இப்போது,நடப்பு 2024ஆம் ஆண்டின்இறுதிப் பகுதியில் இருக்கிறோம்.இந்த ஆண்டில் இந்தியர்கள்ஐபிஎல் கிரிக்கெட் முதல்ரத்தன் டாடா வரைகூகுள் தேடு பொறியில்அதிகமாக தேடித்தேடிபடித்திருக்கிறார்கள் என்பதுதெரிய வந்துள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரைகிரிக்கெட், அரசியல், பிரபலங்களைப் பற்றிதெரிந்து கொள்வதுதான் கூகுளில்ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. கூகுள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஐபிஎல் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை 2024ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் பேரால் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் அடங்கும். இது, கிரிக்கெட் மற்றும்...
தொழிற்சங்க தேர்தல்: புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்ட கம்யூனிஸ்ட்; கரன்சி மழையை பொழிந்த திமுக!

தொழிற்சங்க தேர்தல்: புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்ட கம்யூனிஸ்ட்; கரன்சி மழையை பொழிந்த திமுக!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் உருக்காலையில் நடந்ததொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில்,மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின்சிஐடியூ தொழிற்சங்கம், அதிமுக, பா.ம.க.,ஆதரவுடன் களமிறங்கிய விவகாரம்,வரும் சட்டப்பேரவைத் தேர்தலில்அதிமுக கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,தாவப்போவதாக பரபரப்புபேச்சு கிளம்பியுள்ளது. பிரசித்தி பெற்ற சேலம் உருக்காலையில்591 நிரந்தர தொழிலாளர்களும்,1000 ஒப்பந்த தொழிலாளர்களும்பணியாற்றுகின்றனர்.ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய்க்கு மேல்வர்த்தகம் செய்து வருகிறது. இந்த உருக்காலையில் உள்ளதொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல்,கடந்த நவ. 22ம் தேதி நடந்தது.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைநடத்தப்படும் இந்தத் தேர்தலில்வெற்றி பெறும் தொழிற்சங்கமே,உருக்காலை நிர்வாகத்துடனானஊதிய ஒப்பந்தம், போனஸ்,தொழிலாளர் நலன்கள் குறித்தபேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுடன்,அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்களில்கையெழுத்திட முடியும். காலை 6 மணிக்குத் தொடங்க...
அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
''கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்!'' ஆகிய இரண்டுமே அனுபவித்து, ஆய்ந்து சொன்ன மொழிகள். இவ்விரண்டு திட்டங்களிலும் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மட்டுமின்றி, உறவுகளை ஒன்றிணைப்பதும் முக்கியமாகிறது. எப்போது, எது கைகூடும்? எது உடையும்? எப்போது இத்திட்டங்கள் நிறைவேறும்? என்று கடைசித் தருணம் வரை திக்… திக்… நிமிடங்களாகவே கடந்து போக வேண்டியதிருக்கிறது. இரண்டுமே உணர்வுப்பூர்வமானது. என்றாலும்கூட, கல்யாண வைபவம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்பதால் மனதிற்கு நெருக்கமானதாகிறது. ஒரு காலத்தில் மணமகள் அல்லது மணமகன் வீட்டிலேயே தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு, திருமண விழாக்களும், விருந்து உபசரிப்பும் களைகட்டின. நாகரிக மாற்றத்தால் இப்போது அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபம் பிடிக்கின்றனர். மண்டபத்தை உறுதி செய்த பிறகு அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து தொடங்குகிறது கல்யாண வ...
தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீதான, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று (நவ. 22) 116ஆவது சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரேம்குமார். பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். துடிப்பான இளைஞரான இவர், மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் இடையே அறுபட்டு இருந்த தொடர்பை மீண்டும் புத்துயிரூட்டினார். மாணவர்கள் அன்றாடம் நூலகத்தைப் பயன்படுத்துவதை நடைமுறைப் படுத்தியதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தி வந்தார். மாணவர்கள் சிலருக்கு தேர்வுக்கட்டணம் கூட செலுத்தி இருக்கிறார். பல்கலையில் நடக்கும் விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வந்ததை துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட நிர்வாக முக்கியஸ்தர்கள்...
ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

ராசிபுரம் பஸ் நிலைய விவகாரம்: திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்!

நாமக்கல், முக்கிய செய்திகள்
ராசிபுரம் பேருந்து நிலைய இடமாற்றத் திட்டத்தின் பின்னணியில் பல்வேறு தகிடுதத்தங்கள் இருப்பதாக திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகீர் புகார்களைக் கிளப்பி இருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் நகரம், நெய் மற்றும் ஜவுளி உற்பத்திக்கு பெயர் பெற்றது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் என மொத்தம் 120 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நகரத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை, ராசிபுரத்தில் இருந்து 8.50 கி.மீ. தொலைவில் 1200 பேர் மட்டுமே வசிக்கும் அணைப்பாளையம் என்ற குக்கிராமத்திற்குக் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அணைப்பாளையத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான மின்னணு ஏலம் விட்டு, பணி ஆணை வழங்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில்தான், ரியல...
நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

நாமக்கல்: திமுக நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல்; உச்சத்தில் உள்கட்சி பூசல்!

அரசியல், நாமக்கல், முக்கிய செய்திகள்
  குமாரபாளையம் நகர திமுக செயலாளருக்கு சொந்தக் கட்சியினரே 'நாகரிகமாக' கொலை மிரட்டல் விடுத்து, அறிவாலயத்திற்கு அனுப்பியுள்ள மர்ம கடிதம், நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் உஷ்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வடக்கு நகர திமுக செயலாளராகவும், நகர மன்றத் தலைவராகவும் இருப்பவர் விஜய்கண்ணன். இவர் மீது திமுக மேலிடத்திற்கு அண்மையில் ஒரு பரபரப்பு புகார் கடிதத்தை கழக உடன்பிறப்புகள், பெயர் குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில், ''விஜய்கண்ணன், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து ஏற்கனவே இருந்த நகர பொறுப்பாளர் செல்வத்தை தூக்கச் செய்துவிட்டு, அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார். பதவிக்கு வந்த பிறகு மூத்த நிர்வாகிகளை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார். தன்னை மட்டும் ஃபோகஸ் செய்து கொள்கிறார். கட்சியினரின் தனிப்பட...
பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

பயந்துட்டீங்களா சீமான்? விஜய் மீதான விமர்சனத்தின் பின்னணி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி, கொடி அறிமுகம், கொள்கை விளக்க மாநாடு என்று நின்று நிதானமாக, டெஸ்ட் கிரிக்கெட் போல ஆடத் தொடங்கி இருக்கிறார்.  கடந்த அக். 27ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்த, த.வெ.க., மாநாட்டில், கட்சியின் கொள்கை விளக்கம் குறித்து பேசினார், விஜய். அந்த மாநாட்டில், ''தந்தை பெரியார், அண்ணா பெயரைச் சொல்லிக்கொண்டு, திராவிட மாடல் என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சுரண்டி கொள்ளையடிக்கிறது ஒரு குடும்பம். அந்த சுயநலக் கூட்டம்தான் நமது அரசியல் எதிரி,'' என திமுகவின் பெயரைச் சொல்லாமலேயே சம்மட்டி அடி கொடுத்தார் விஜய். அதேபோல, ''சாதி, மதத்தின் பெயராலே பெரும்பான்மை, சிறுபான்மை பயத்தைக் காட்டும் பிளவுவாத அரசியல் செய்பவர்கள்தான் நமது கொள்கை எதிரி,'' என்று பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்களின் மண்டையிலும் 'பொளேர்' என ஒரு போடு போட்டார...
விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
''தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி வைப்போருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,'' என்று அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில் பெரும் சூட்டைக் கிளப்பி இருக்கிறது. தமிழ்த்திரை உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கியபோதே அவரின் அரசியல் வருகை தொடர்பான பேச்சும் தொடங்கி விட்டது. இன்றைய தேதியில், இந்தியாவில் 200 கோடி ரூபாய் சம்பளம் பெறும் வெகுசில நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அதிகபட்ச சம்பளம், புகழின் உச்சத்தில் இருக்கும் ஒருவர் முழுநேர அரசியல்வாதியாக களம் காண வருகிறார் என்றபோதே பலரின் புருவங்களும் உயர்ந்தன. கட்சி தொடங்கியபோதே, நமது இலக்கு 2026 சட்டப...
பெரியார் பல்கலை ஆட்சிக்குழுவில் ‘காலாவதி’ உறுப்பினர்கள்; ஆசிரியர்கள் அதிருப்தி

பெரியார் பல்கலை ஆட்சிக்குழுவில் ‘காலாவதி’ உறுப்பினர்கள்; ஆசிரியர்கள் அதிருப்தி

கல்வி, சேலம், தமிழ்நாடு
சேலம் பெரியார் பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர்களாக உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்ற பிறகும், அதே பதவியில் தொடர்வதற்கு பல்கலை ஆசிரியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வரும் பெரியசாமி, வேதியியல் துறைத்தலைவர் ராஜ் ஆகியோர் தற்போது ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றனர். இவர்கள் பேராசிரியர் பிரிவில் இருந்து இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் அக். 9ம் தேதியுடன் மூத்த பேராசிரியர் ஆக பதவி உயர்வு பெற்று விட்டனர். பல்கலை சாசன விதிப்படி, ஒருவர் எந்த பிரிவில் இருந்து ஆட்சிக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அவர் அந்த நிலையில் இருந்து பதவி உயர்வு பெற்றுவிடும் பட்சத்தில், முந்தைய வகைப்பாட்டிலேயே ஆட்சிக்குழு உறுப்பினராக தொடர முடியாது. அதன்படி, மூத்த பேராசிரியராக ப...