Sunday, October 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!

ஊரடங்கில் தளர்வு; சேலத்தில் இன்று முதல் தேநீர், தள்ளுவண்டி கடைகளுக்கும் அனுமதி!

தமிழ்நாடு
கொரோனா பரவல் காரணமாக ஒன்றரை மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் இன்று முதல் (மே 11) சாலையோர தள்ளுவண்டிக் கடைகள் உள்பட பல்வேறு தனிநபர் கடைகளுக்கும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் பின்வரும் கடைகளை இன்றுமுதல் (மே 11) குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதன் விவரம்:   1. தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) 2. பேக்கரி கடைகள் (பார்சல் மட்டும்) 3. உணவகங்கள் (பார்சல் மட்டும்) 4. பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் 5. கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகள் 6. சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள் 7. மின்சாதனப் பொருள்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் 8. மொபைல் போன...
எங்கே போயினர் கடவுளர்கள்?

எங்கே போயினர் கடவுளர்கள்?

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
வெறும் கண்களுக்குப் புலனாகாத கொரோனா வைரஸ், நமக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கிறதோ இல்லையோ... யார் கடவுள்? எதுவெல்லாம் கடவுள் தன்மை? என்பதை நன்றாகவே அடையாளம் காட்டியிருக்கிறது. கொடுத்த விலை சற்றே அதிகமெனினும், மானுட குலம் வாழும் வரை நெஞ்சில் பதிய வைத்திருக்கிறது இந்த வைரஸ். மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் அடிக்கடி சொல்வார்: இந்த பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் அருகி வருகிறது. விரைவில் சந்திரனிலோ, செவ்வாயிலோ அல்லது வேறு கிரகங்களிலோ மனிதர்கள் வாழும் சூழல் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்பார். அறிவியல் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் தோன்றிய இடமும் தெரியவில்லை; பரவிய தடமும் கண்டறியப்படவில்லை. மே 8 வரை உலகம் முழுவதும் 2.73 லட்சம் பேரை பலி வாங்கியிருக்கிறது கொரோனா.   நோய்த்தொற்றைத் தடுக்க இதுவரை யாதொரு தடுப்பு மருந்துகளு...
சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!

சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை புதன்கிழமை (மே 6) முதல் இயக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.   சேலம் மாவட்ட குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் சங்க பிரநிதிகள், இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று (மே 4) நடந்தது. ஆட்சியர் ராமன் கூறியதாவது:   கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்வு விதிகளுக்கு உட்பட்டு நாளை (மே 6ம் தேதி) முதல் தொழில் நிறுவனங்கள் இயங்க சில தளர்வுகள் அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.   பெரு நிறுவனங்கள், தங்கள் ஆலைகளை இயக்கிட சேலம் மாவட்ட ஆட்சியருக்கு slmdic@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். &...
20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

20 லட்ச ரூபாய்க்கு இலவச காய்கறிகள்! மக்களை தேடித்தேடி சென்று வழங்கிய செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன்! தனி ஒருவன் #1

சிறப்பு கட்டுரைகள், நாமக்கல், முக்கிய செய்திகள்
வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்னல்களும், சவால்களும்தான் உலகுக்கு நிஜ நாயகர்களை அடையாளம் காட்டுகின்றன. அப்படி, ஒரு காலத்தில் பண்ணை அடிமையாக இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுடைய கிராம மக்களுக்கு தேடித்தேடிச் சென்று 20 லட்சம் ரூபாய்க்கு காய்கறிகளை இலவசமாக வழங்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.   நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள அவினாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (49). மனைவி தமிழ்ச்செல்வி. மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் 1வது ரிசர்வ் வார்டு கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் தமிழ்ச்செல்வி. அதற்கு முன்பு, அவினாசிப்பட்டி ஊரா...
கொரோனா: முழு ஊரடங்கு காலத்தில் சேலத்தில் எது எதற்கு அனுமதி?

கொரோனா: முழு ஊரடங்கு காலத்தில் சேலத்தில் எது எதற்கு அனுமதி?

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் மாநகர பகுதிகளில் மட்டும் இன்று (ஏப். 26) முதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் விளக்கமாக வெளியிட்டுள்ளது.   ஆரம்பத்தில் சளி, இருமல், தொண்டையில் வலி, மூச்சுத்திணறல் போன்றவை கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளாக இருந்து வந்த நிலையில், அண்மைய முடிவுகளில் இந்த அறிகுறிகள் இல்லாதோருக்கும் நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறி வருகிறதோ என்ற மருத்துவத்துறையினரின் அய்யம் காரணமாகவே, ஊரடங்கை மேலும் கடுமையாக்கி பரவலாக முழு ஊரடங்காக அமல்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.   சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏப். 25, 26 ஆகிய இரு நாள்கள் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு நடை...
சேலத்தில் நாளை முதல் இரு நாள்கள் முழு ஊரடங்கு! வெளியே நடமாடினால் கொரோனா பரிசோதனை!!

சேலத்தில் நாளை முதல் இரு நாள்கள் முழு ஊரடங்கு! வெளியே நடமாடினால் கொரோனா பரிசோதனை!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தொற்று சமூக பரவலாக மாறும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை (ஏப். 25), மற்றும் நாளை மறுநாள் (ஏப். 26) ஆகிய இரு நாள்களும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.   கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு, அரசு அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 14 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.   இதற்கிடையே, சேலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (ஏப். 23) உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நோய்த்தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் வகையில் ஏப். 25 மற்றும் 26 ஆகிய ...
சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் நடமாடுவோர் கண்டிப்பாக முகக்கவசம் (மாஸ்க்) அணியவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே 500 ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு, வியாழன் (ஏப். 16) முதல் அமலுக்கு வருகிறது.   கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்தாலும், இப்போதைக்கு தனிமைப்படுத்தலும், சமூக விலகல் மூலம் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காகவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 14 மாலை வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது மே 3ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டத...
ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

ஊரடங்கு: கடும் உளவியல் சிக்கலில் பெண்கள்!

உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ், உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த வைரஸ் எங்கிருந்து, எதிலிருந்து பரவியது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளும் ஆராய்ச்சி அளவிலேயே இருக்கின்றன.   இன்றைய நிலையில், 211 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். 2020 ஏப்ரல் 7ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 12 லட்சத்து 14466 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 67 ஆயிரத்து 767 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. கொரோனா தாக்குதலில் இந்தியாவும் தப்பவில்லை. இங்கும் ஏப். 7ம் தேதி வரை 4281 பேருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, கொரோனாவால்...
கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

கொரோனா: வங்கிகள் கடன் வசூலிக்க தடை!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மறு உத்தரவு வரும் வரை வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக்குழு நிறுவனங்கள் உறுப்பினர்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் அசல், வட்டி வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   கோரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. இதற்கென பொது மக்களின் நன்மை கருதி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் படி, ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்த உத்தரவுகளை அனைத்து மாவட்டங்களிலும் முறையாக நடைமுறைப்படுத்திட உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் ஆகிய...
கொரோனா அச்சம்! தேனிலவு ஜோடிக்கு வந்த சோதனை!!

கொரோனா அச்சம்! தேனிலவு ஜோடிக்கு வந்த சோதனை!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஒட்டுமொத்த சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டுள்ளது. இதுவரை கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலக்கல் மட்டுமே ஆகச்சிறந்த தடுப்பு அரண் என்கிறது மக்கள் நல்வாழ்த்துறை. மார்ச் 24ம் தேதி மாலை முதல் தொடர்ந்து 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு நாடெங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வெளிநாடு சென்று ஊர் திரும்பியவர்கள் மூலமாக கோவிட்-19 தொற்று பரவ கூடுதல் வாய்ப்பு உள்ளதால், அவர்களைப் பற்றிய தகவல்களை உடனடியாக தெரிவிக்கும்படி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார். மூன்றாம் நபர் சொல்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நபர்களே இதுகுறித்த தகவல்களை தெரிவித்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால...