Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!

சேலத்தில் தொழில்
நிறுவனங்கள், வணிக
கடைகளை புதன்கிழமை
(மே 6) முதல் இயக்க
அனுமதி வழங்கி மாவட்ட
ஆட்சியர் ராமன்
உத்தரவிட்டுள்ளார்.

 

சேலம் மாவட்ட
குறு, சிறு, நடுத்தர
தொழிற்சாலைகள்
சங்க பிரநிதிகள்,
இந்திய தொழில் கூட்டமைப்பு
நிர்வாகிகள் உடனான
ஆலோசனைக் கூட்டம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக
கூட்டரங்கில் திங்களன்று
(மே 4) நடந்தது.
ஆட்சியர் ராமன் கூறியதாவது:

 

கொரோனா நோய்த்தொற்று
பரவலைத் தடுக்கும் வகையில்
தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு தளர்வு விதிகளுக்கு
உட்பட்டு நாளை
(மே 6ம் தேதி) முதல்
தொழில் நிறுவனங்கள்
இயங்க சில தளர்வுகள்
அளித்து உத்தரவிடப்பட்டு
உள்ளது.

 

பெரு நிறுவனங்கள்,
தங்கள் ஆலைகளை இயக்கிட
சேலம் மாவட்ட
ஆட்சியருக்கு
slmdic@gmail.com
என்ற மின்னஞ்சல் மூலம்
உரிய ஆவணங்களுடன்
விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு
அனுமதிக்கப்படும்
பெரு நிறுவனங்கள்
தங்களது தொழிலாளர்களுக்கான
வாகன அனுமதி சீட்டு பெற
https:\\tnepass.tnega.org
என்ற இணையதள முகவரியில்
விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
அவ்வாறு அனுமதி பெற்று
இயக்கப்படும் தொழில்
நிறுவனங்களில் சேலம்
மாவட்டத்திற்கு உட்பட்ட
பகுதிகளில் உள்ள
பணியாளர்கள் மட்டுமே
பணிபுரிய அனுமதிக்க
வேண்டும். எக்காரணம்
கொண்டும் பிற மாவட்டப்
பணியாளர்களை
பணியமர்த்தக் கூடாது.

 

தொழில் நிறுவனங்கள், வணிகக் கடைகள், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புக்கான தடை செய்யப்பட்ட பகுதிகள் நீங்கலாக பிற இடங்களில் மே 6ம் தேதி முதல் அனுமதி பெற்று, விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பணியிடங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். அதிக பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது.

 

நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் கச்சா பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள், தயாரிக்கப்பட்ட பொருள்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் குறித்த விவரங்கள், ஓட்டுநர் விவரங்களை சார் ஆட்சியர் மற்றும் அந்தந்த பகுதிகளின் வருவாய் கோட்டாட்சியர்களிடம் வழங்க வேண்டும்.

 

ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களுக்கு உரிய தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த நிறுவனத்தினரே செய்து தர வேண்டும்.

 

இவ்வாறு ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.