Wednesday, July 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: 8 lane road

எங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம்! சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்!!

எங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம்! சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் இந்த மண்ணும், மனிதர்களும் அழிந்துபோவார்கள் என்பதால், இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்தாவது இந்த திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று விவசாயிகள் சபதம் எடுத்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலைத்திட்டம் எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு, மாநில அரசுக்கானது. மொத்தம் 277.3 கி.மீ. தூரம் அமைக்கப்பட உள்ள இந்த சாலைக்காக 2343 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி, சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இ
விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

விவசாயிகள் என்ன பயங்கரவாதிகளா?; இபிஎஸ் அரசின் தலைகீழ் விகிதங்கள்!!

காஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழும் விவசாயிகளிடம் திட்டத்தின் நோக்கம் குறித்து வெளிப்படையாக பேச மறுக்கும் அரசு, வெடிகுண்டு தடுப்புப்பிரிவு, கியூ பிரிவுகள் மூலம் உளவியல் ரீதியில் ஒடுக்குவதன் மூலம், அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கிறதோ என்ற அய்யம் எழுந்துள்ளது. சேலம் முதல் சென்னை வரையில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இத்திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் கையகப்படுத்தப்பட உள்ள தனியார் நிலங்களில் பெரும் பகுதி இருபோகம் விளைச்சலைத் தரக்கூடிய விளைநிலங்கள் ஆகும்.   இதனால் ஆரம்பத்தில் இருந்தே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மேற்சொன்ன ஐந்து மாவட்டங்களிலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மரக்கன்று நட தடை! சேலம் போலீசார் துக்ளக் தர்பார்!! #EightLaneRoad

மரக்கன்று நட தடை! சேலம் போலீசார் துக்ளக் தர்பார்!! #EightLaneRoad

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்காக அளவீடு செய்யப்பட்ட நிலத்தில் புதிதாக மரக்கன்று நட போலீசார் தடை விதித்ததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.   எட்டு வழிச்சாலை சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் வரும் இந்த சாலை மொத்தம் 277.3 கி.மீ. நீளத்துக்கு அமைகிறது.   இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் துரித கதியில் நடந்து வந்தன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலங்கள், ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமானதாகும்.   சமநிலை பாதிக்கப்படும் பசுமைவழிச்சாலை திட்டத்தால் மரங்களும், விளைநிலங்களும் அழிக்க
இன்னொரு வன்முறையை கட்டவிழ்க்க தயாராகிறது தமிழக அரசு!; மாவோயிஸ்ட் விவேக் ‘திடுக்’ தகவல்

இன்னொரு வன்முறையை கட்டவிழ்க்க தயாராகிறது தமிழக அரசு!; மாவோயிஸ்ட் விவேக் ‘திடுக்’ தகவல்

அரசியல், இந்தியா, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் முன்னணி தளகர்த்தர்களில் ஒருவரான விவேக் மாவோயிஸ்ட், கடந்த ஜூன் 27ம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்தார். எப்போதும் காவல்துறை உளவுப்பிரிவின் நெருக்கமான கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கும் அவரை நேரில் சந்தித்தோம். அவருடனான உரையாடலில் இருந்து... புதிய அகராதி: பிரதமர் மோடியை கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளி வந்தனவே?   விவேக்: பிரதமர் மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி செய்ததாக, மஹாராஷ்டிரா மாநில உளவுத்துறை ஒரு கடிதத்தை வெளியிட்டது. இது எவ்வளவு பெரிய கேலி கூத்து என்றால், அப்படி கடிதம் எழுதியதாகச் சொல்லப்படும் நபர், ஜேஎன்யூ பல்கலையில் மாணவர் தலைவராக இருந்தவர்.   சிறையில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்வத
நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம்?; நிலமற்ற கூலிகள் குமுறல்!!

நிலத்தை பறித்துக்கொண்டால் நாங்கள் எங்கே போவோம்?; நிலமற்ற கூலிகள் குமுறல்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விவசாயம்
எட்டு வழிச்சாலை என்றதுமே, நிலத்தை பறிகொடுத்து நேரடியாக பாதிக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்களான விவசாயிகளைப் பற்றி மட்டுமே பேசும் நாம், அதிகம் கவனப்படுத்தப்படாத மற்றொரு பெருங்கூட்டமும் இதனால் பாதிக்கப்படுகிறது என்பதை மறந்தே போனோம்.   காலங்காலமாக நில உடைமையாளர்களிடம் கூலி வேலை செய்யும் விவசாய தொழிலாளர்கள் என்ற பெரும் சமூகமே இந்த எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். 2009களில் உலகமே பொருளாதார மந்தநிலையால் சுருண்டு கிடந்தபோது, இந்திய பொருளாதாரம் கம்பீரமாக நின்றது. அதற்கு சாமானியனின் சேமிப்பும், கிராமப் பொருளாதாரமும் முக்கிய காரணிகளாக இருந்தன.   அத்தகைய வலிமையான கிராமப் பொருளாதாரத்தைத் தக்க வைத்துக் கொண்டதில், நிலமற்ற கூலித்தொழிலாளர்களின் உழைப்பு அளப்பரியது. எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளருக்கு, வழிகாட்டி மதிப்பில் இருந்து இரண
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?; திருமாவளவன் அதிர்ச்சி தகவல்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடிதான் உத்தரவிட்டார் என்று சேலத்தில் திருமாவளவன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.     எட்டு வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஜூலை 20, 2018) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது அக்கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது:   எட்டு வழிச்சாலைத் திட்டம் அமையவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு தரவில்லை. அப்படியிருந்தும், அரசு இந்த சாலைத் திட்டத்திற்காக துணிச்சலாக நிலங்களை கையகப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இந்த சாலைத் திட்டத்தால் அடுத்த 50 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி பெருகும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?     முதலில் கிராமச்சாலைகளை மாநில நெடுஞ்சாலைக
சீமானுக்கு நிபந்தனை ஜாமின்!

சீமானுக்கு நிபந்தனை ஜாமின்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலை, விமான நிலையம் விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியதோடு, மக்களிடம் கலகத்தைத் தூண்டியதாக ஏற்கனவே ஒரு வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.   அந்த வழக்கில் தினமும் காலையில் ஓமலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று ஓமலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியிருந்தது.   இந்நிலையில், நேற்று சேலத்தை அடுத்த பூலாவாரி அருகே உள்ள கூமாங்காடு கிராமத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து சீமான் கருத்து கேட்டார். இது நீதிமன்ற நிபந்தனைகளை மீறிய செயல் எனக்கூறி, மல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். சீமான் மட்டுமின்றி அவருடைய கட்சியைச் சேர்ந்த யுவராஜ்குமார், தேவி, ஜெகதீசன், ஜானகி, தமிழ்ச்செல்வம், சிவக்குமார், தமிழரசன், மண
எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

எட்டு வழிச்சாலைக்கு 90 சதவீத விவசாயிகள் ஆதரவாம்… – எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொய்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு சில விவசாயிகள் தவிர, பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் பொய்யான தகவலை இன்று (ஜூலை 19, 2018) தெரிவித்துள்ளார்.     டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.   ''கடந்த ஆட்சியின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்துணவு முட்டைக்கான டெண்டர் நடைபெறும். அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து, அதில் முறைகேடுகள் நடந்து வந்தன. அதனால்தான் மாநில அளவில் முட்டை டெண்டர் விடும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில்தான் டெண்டர் விடப்படுகிறது. இதற்கென ஒரு கமிட்டி அமைத்து, எவ்வித முறைகேடுக்கும் இடமின்றி டெண
சேலத்தில் ‘மினி எமர்ஜென்ஸி!’  விவசாயிகளை நெருங்கினாலே கைது…  சீமான் உள்பட 22 பேருக்கு காப்பு!!

சேலத்தில் ‘மினி எமர்ஜென்ஸி!’ விவசாயிகளை நெருங்கினாலே கைது… சீமான் உள்பட 22 பேருக்கு காப்பு!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்து கேட்கவோ, ஆறுதல் சொல்லவோகூட செல்லக்கூடாது என காவல்துறை மூலம் தமிழக அரசு 'மினி எமர்ஜென்ஸி' உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையும் மீறி விவசாயிகளை சந்திக்கச் சென்ற சீமான் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட 22 பேரை காவல்துறையினர் இன்று (ஜூலை 18, 2018) கைது செய்து, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.   சேலம் - சென்னை இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை எனப்படும் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு சேலம் மாவட்ட விவசாயிகள், பொதுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்படும் மக்களிடம் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி நிர்வாகிகளுடன் இன்று காலை, சேலம் அருகே உள்ள பாரப்பட்டி கூமாங்காடு கிராமத்தில
படிக்காத விவசாயிக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்குமா?; போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி   

படிக்காத விவசாயிக்கு அரசு வேலையில் முன்னுரிமை கிடைக்குமா?; போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி  

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் எனக்கூறும் அதிகாரிகள், படிக்காத விவசாயிக்கு எந்த அடிப்படையில் முன்னுரிமை கொடுப்பார்கள்? என பொதுமக்கள் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர்.   சேலம் மாவட்டத்தில், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை அமைய உள்ள இடங்கள், ஏற்கனவே அளக்கப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டு உள்ளன. அந்தப் பகுதிகளில் தற்போது துல்லிய அளவீடு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. குள்ளம்பட்டி பகுதியில் இன்று (ஜூலை 16, 2018) துல்லிய அளவீடு நடந்தது. இதற்காக தாசில்தார் அன்புக்கரசி தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள், சர்வேயர்கள் இன்று காலை குள்ளம்பட்டி கிராமத்திற்கு வந்தனர். வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி சூரியமூர்த்தி தலைமையில் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு உள்பட முப்பதுக்கும் ம