Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

புற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே!

முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் தீர்வு கண்டபாடில்லை. மரணம் நிச்சயம். இப்படித்தான் மருத்துவ உலகம் சொல்லி வருகின்றன. புற்றுநோய் குறித்து இதுவரை ஆகி வந்த மரபுகளை எல்லாம் ஷிமோகாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியர் முறியடித்திருக்கிறார்.

நாம் சொல்லப்போகும் இந்த தகவல் சிலர் / பலர் அறிந்திருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் சொல்லும்போது அதை ஊருக்கும் சொல்வதுதானே நலம்.

சுப்பையா நாராயணமூர்த்தி

 

”அம்மாவுக்கு லிம்போமா (LYMPHOMA) எனும் ஒரு வகை ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அதுவும் நாலாவது ஸ்டேஜ். அபாய கட்டத்தில் இருப்பதாகவும், குணப்படுத்துவதற்கு 30 சதவீதம்தான் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் ஒன்றும் சாதாரண மருத்துவர்கள் அல்ல. புற்றுநோய்க்கென சிகிச்சை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்கள்.

நம்பிக்கையிழந்து, வீட்டில் கலங்கிப்போய் உட்கார்ந்து இருந்தபோதுதான், வீடு அருகே வசிக்கும் உள்ள கண்ணன் என்பவர் மூலம் கேள்விப்பட்டு ஷிமோகாவுக்குச் சென்றேன். அங்குள்ள வைத்தியர் கொடுத்த மருந்தை எடுத்துக் கொண்டதால்தான் இன்று என் அம்மாவுக்கு இருந்த புற்று நோய், கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை குணமாகி விட்டது,” என நம்பிக்கையுடன் சொல்கிறார் ரமேஷ் என்கிற கிருஷ்ணமூர்த்தி. இவர், ஓசூரில் சிம்சன் நிறுவன தொழிலாளர்.

ரமேஷ் என்கிற கிருஷ்ணமூர்த்தி

கண்ணன், அசோக் லேலன்ட் நிறுவன தொழிலாளர். அவருடைய தாயாருக்கு இருந்த புற்றுநோய் ஷிமோகா (Shimoga alias Shivamogga) வைத்தியரின் மருந்தினால் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும் சொன்னார் ரமேஷ். கண்ணன், ஆரம்பம் முதலே அலோபதி மருந்தை தவிர்த்து விட்டாராம்.

ஸ்கேன், பயாப்சி பரிசோதனை, கீமோதெரபி என சில, பல லட்சங்களை செலவு செய்த பின்னரே, ஷிமோகா சென்ற ரமேஷ், இப்போது அலோபதி மருத்துவத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு, ஷிமோகா வைத்தியரின் மருந்தை மட்டுமே தன் தாயாருக்கு கொடுத்து வருகிறார். இவரிடம் ஆலோசனை பெற்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் இப்போது ஷிமோகாவுக்கு சென்று வருகின்றனர்.

ஷிமோகாவில் தரப்படும் மருந்து பொட்டலம்

கர்நாடகா மாநிலம் சாகர் மாவட்டம்
செல்லும் வழியில் அனந்தபுரா
என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து
வைத்தியர் வீட்டுக்கு வழி கேட்டால்,
மக்களே அழைத்துச் சென்று விடுவார்கள்.
அந்தளவுக்கு அவர் மீது அவ்வூர்
மக்கள் மரியாதை வைத்திருக்கின்றனர்.
அந்த வைத்தியர், சுப்பையா நாராயணமூர்த்தி.

கிட்டத்தட்ட ஒரு கி.மீ. தொலைவுக்கு மேல்
வைத்தியசாலைக்குச் செல்லும் மக்கள்
கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது.
வாரத்தில் வியாழன், ஞாயிறு ஆகிய
கிழமைகளில் மட்டுமே மருந்து
கொடுக்கப்படுகிறது.
அந்த நாள்களில் ஆயிரக்கணக்கானோர்
வரிசை கட்டி நிற்கின்றனர்.
பல மாநிலங்கள் மட்டுமல்ல;
வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக
மருந்து வாங்க அவர்களுடைய
உறவினர்கள் குவிகின்றனர்.

மருந்து வாங்க காத்திருக்கும் கூட்டம்

”மூன்று வகையான மரப்பட்டைகளில்
இருந்து பொடி செய்து தயாரிக்கப்பட்ட
மருந்துகளை ஒன்றாக கலந்து
தலா 100 கிராம் வீதம் மூன்று
பொட்டலத்தில் தருகின்றனர்.
புற்றுநோயின் தன்மைக்கு ஏற்ப
இந்த மருந்து கலவையின்
விகிதம் மாறுபடுகிறது.
ஆனால் எல்லா வகையான
புற்றுநோய்க்கும் இதே மருந்துதான்.
புற்றுநோய் மட்டுமின்றி
முழங்கால் வலி, சிறுநீரக பிரச்னை,
இருதய நோய்கள், நீரிழிவு நோயால்
பாதிக்கப்பட்டவர்களும்கூட வருகின்றனர்.
அவர்களுக்கும் இதே மருந்துதான்
தருகின்றனர்.

எனினும், புற்றுநோய் பாதிப்புக்காக
வருபவர்கள் அதிகம். இங்கு
கொடுக்கப்படும் மருந்தால்
100 சதவீதம் புற்று நோய்
குணமாகியதாக பலரும் சொல்லக்
கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது
என் அம்மாவுக்கும் வெகுவாக
குணமாகி வருகிறது.
ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்துவிட்டு,
‘இந்த மாதிரி இருக்க
வாய்ப்பே இல்லை. ‘மிராக்கிள்’
ஆக இருக்கிறது,’ என்று
மருத்துவர் ஆச்சர்யத்துடன்
சொன்னார்,” என்கிறார் ரமேஷ்.

இதன் பிறகே ரமேஷ், தன் தாயாருக்கு வழங்கி வந்த கீமோதெரபி சிகிச்சையை நிறுத்திவிட்டு, ஷிமோகா மருந்தை மட்டுமே பின்பற்ற முடிவு செய்தார். திருப்பதியில்கூட வெங்கடாஜலபதியை தரிசித்து விடலாம். ஆனால், நரசிபுரா வைத்தியரிடம் 10 வினாடிகளுக்கு மேல் பேச முடியாது. அந்தளவுக்கு கூட்டம் அதிகம் என்கிறார் அவர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒருபோதும் இங்கு நேரடியாக அழைத்துச் செல்ல வேண்டியதில்லை. அவர்களின் பாதிப்பை அறிந்த ஒருவர் சென்றாலே மருந்து கொடுத்து அனுப்புகின்றனர். என்ன வகையான புற்றுநோய்?, அதன் தற்போதைய தன்மை என்ன? என்பது குறித்து சொன்னாலே போதும். மருத்துவ அறிக்கை, ஸ்கேன் அறிக்கையைக் காட்டத் தேவையில்லை.

வைத்தியர் சுப்பையா நாராயணமூர்த்தி, ஆரம்பத்தில் மருந்தை மரப்பட்டைகளாகத்தான் கொடுத்து வந்திருக்கிறார். பின்னர், அவரே அதை பொடியாக்கி தர ஆரம்பித்திருக்கிறார். அதேபோல் முன்பு, இந்த மருந்துகளை இலவசமாக தந்துள்ளார். பின்னர் ரூ.100, 150 என ஆரம்பித்து, இப்போது ரூ.300க்கு தருகிறார். ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு உண்டான மருந்து மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த மருந்தை எப்படி உட்கொள்வது?:

இரண்டு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம் ஆகிய இரண்டையும் அம்மியில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை, 5 லிட்டர் தண்ணீரில் போடவும். இத்துடன், வைத்தியர் கொடுத்த மருந்தின் ஒரு பாக்கெட்டை பிரித்து கொட்ட வேண்டும். பின்னர் அந்த கலவை கலந்த தண்ணீரை இரண்டரை லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலை அடங்கி ஆறியபின், ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

தினமும் சாப்பிட்ட பின்பு காலை, மதியம், இரவு மூன்று வேளையிலும் அந்த மருந்தை குடிக்க வேண்டும். மூன்று வேளைகளுக்கும் சேர்த்து தினமும் அரை டம்ளர் (உத்தேசமாக 100 மி.லி.) வீதம் குடிக்க வேண்டும். இப்படி ஒன்பது நாள்களுக்கு ஒரு பொட்டலாம் வீதம் 27 நாள்களுக்கு 3 பொட்டல மருந்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மருந்து தீர்ந்த உடன், மீண்டும் ஷிமோகா சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த மருந்து அதிக கசப்புத்தன்மை கொண்டது.

கேன்சர் மருந்து கஷாயம்

ஓசூர் சிம்சன் நிறுவனத்தில் பணியாற்றும் செல்வராஜ் என்பவரின் தாயார் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் நோய் தீவிரம் அடைந்து அவர் சிறுநீர் கழிக்கும்போது கர்ப்பப்பையின் ஒரு பகுதி வெளியே தொங்கியதாகவும், அதிக ரத்தப்போக்கு இருந்ததாகவும் கூறினார். பின்னர், அவரும் ஷிமோகா வைத்தியரிடம் மருந்து வாங்கிச்சென்று தன் தாயாருக்கு கொடுத்த வர, இப்போது அவர் ஓரளவு நலமடைந்து உள்ளதாகவும் கூறினார்.

மருந்து வாங்கச் செல்லும் ஒவ்வொருவருக்கும் மருந்து தயாரிப்பு முறை, பயன்படுத்தும் முறை குறித்து பல மொழிகளில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்புகின்றனர். எனினும், அந்த மருந்து எந்த மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. வைத்தியர் கொடுக்கும் மருந்தைப் பற்றிய அறிவியல்பூர்வ ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை. ஆனால், நோய் குணமாகிறது. அதுதானே முக்கியம்!

கேன்சர் மருந்து பொடி

இந்த மருந்தை உட்கொள்பவர்கள் கண்டிப்பாக தேநீர், வாழைப்பழங்கள், பச்சை மிளகாய், முட்டைக்கோஸ், எண்ணெய் சார்ந்த உணவுகள், அசைவ உணவுகள், மதுபான வகைகளை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

அலோபதி மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோய்களுக்கு ஷிமோகா நாராயணமூர்த்தியின் ஆயுர்வேத மருந்து தீர்வு அளிக்கிறது. இருப்பினும், இதுபற்றி ஏன் தமிழ் பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் பட்டவர்த்தனமாக வெளியுலகுக்குச் சொல்லவில்லை எனத் தெரியவில்லை. வீடியோ இணைப்பு.

வைத்தியரை தொடர்பு கொள்ள: 08183 – 258033.

(குறிப்பு: இது விளம்பர நோக்கமற்று, மக்கள் நலன் கருதி பதிவிடப்படுகிறது. பயனாளிகள் விசாரித்து, அதன்பேரில் செயல்படுவது நல்லது).

 

– நாடோடி.

Leave a Reply