நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது! எம்பிபிஎஸ்., மாணவர் சேர்க்கை விரைவில் ஆரம்பம்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட
இளநிலை மருத்துவப் படிப்புகளில்
சேர்வதற்கான நீட் எனப்படும்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு,
கடந்த செப். 12ம் தேதி நாடு
முழுவதும் நடந்தது. இத்தேர்வை,
இந்தியா முழுவதும் 16 லட்சம்
மாணவர்கள் எழுதினர்.
தமிழ்நாட்டில் சுமார்
1.10 லட்சம் பேர் எழுதினர்.
இதன் தற்காலிக விடைகள்
(ஆன்சர் கீ), அக். 15ம் தேதி
வெளியிடப்பட்டது.
இயற்பியல் பாடப்பகுதியில் இருந்து
கேட்கப்பட்ட வினாக்கள்
சற்று கடினமாக இருந்ததாக
தேர்வர்கள் கூறினர்.
வழக்கமாக நீட் தேர்வு
நடத்தப்பட்ட நாளில் இருந்து
30 நாள்களுக்குள் முடிவுகள்
வெளியிடப்படும். ஆனால்
இந்த ஆண்டு, நாக்பூரில் உள்ள
ஒரு பயிற்சி மையத்தைச் சேர்ந்த
25 மாணவர்கள், நீட் தேர்வில்
முறைகேட்டில் ஈடுபட்டதாக
புகார் எழுந்தது. இதனால்
குறிப்பிட்ட காலத்திற்குள்
முடிவுகளை வெளியிடுவதில்
தாமதம் ஏற்பட்டது.
&nb...