மூதாட்டி சின்னபிள்ளை ‘ஓரிங்’ கண்டுபிடித்தாரா? அமைச்சர் கீர்த்தனாவின் பச்சைப்பொய்!
தவெக கட்சியையும், இந்த அரசையும் 'ரீல்ஸ் கட்சி', 'ரீல்ஸ் அரசாங்கம்' என விமர்சனங்கள் கிளம்பி வரும் நிலையில், 'ரீல்ஸ் புகழ்' அமைச்சர் கீர்த்தனா, சட்டப்பேரவையில் குறிப்பிட்டுப் பேசிய ஒரு தகவல், பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் ஆக. 25ஆம் தேதி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானியக்கோரிக்கைகள் தொடர்பாக அத்துறை அமைச்சர் கீர்த்தனா, அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் தனது பேச்சை நிறைவு செய்வதற்கு முன்னதாக ஒரு தகவலைக் கூறினார். அதாவது…
''சின்னபிள்ளைன்ற மதுரை மாவட்டத்தில் ஒருத்தவங்க இருந்தாங்க. அவங்க வந்து ஓரிங்… ஹைட்ரோகுளோரிக் சிஸ்டத்த வந்து ஆயில் லீக் ஆகாம இருக்கறதுக்கு அந்த ஒரு இத வந்து கண்டுபிடிச்சாங்க. எம்எஸ்எம்இ&இல் இருக்கற… ஒரு எஸ்.ஹெச்.ஜி.யில் மதுரையில் இருக்கற ஒரு பெண்மணி அதை பண்ணிட்டு இருந்தாங்க. அப்பவே வந்து வாஜ்ப...









