Wednesday, September 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Vijay

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

இந்தியா, சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'மெர்சல்'. நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, 'யோகி' பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ. படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இ...
மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சண்டையில கிழியாத சட்டை எங்கிட்டு இருக்கு?' என்ற 'கைப்புள்ள' வடிவேலு காமெடி போல, 'சர்ச்சையில் சிக்காமல் விஜய் படம் எப்போது ரிலீஸ் ஆகியிருக்கு?' என்று சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் நடித்த படங்கள் ரிலீசுக்கு முன்னரோ அல்லது வெளியான பின்னரோ ஏதோ ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கி வருகிறது. 'தலைவா' படம் ரிலீசுக்கு முன்பே பிரச்னைகளை சந்தித்தது. அந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழ், 'பார்ன் டு லீட்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவினர், அந்த வார்த்தைகளுக்கு அதிருப்தி தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. கத்தி, துப்பாக்கி போன்ற படங்களும் நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்த பின்னரே திரைக்கு வந்தன. இந்நிலையில், சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள மெர்சல் படமும் தற்போது நீதிமன்ற வழக்கில் சிக்கி இருக்கிறது. மெர...
இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ், மணிரத்னம் போனற பிரபல இயக்குநர்கள் தங்கள் படத்தின் கதை திரைக்கு வரும் வரை எள்ளளவு கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதேபோல், படமாக்கும் காட்சிகள்கூட வெளியாகக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் உள்பட ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தவும் தடை விதிப்பார்கள். இப்போது ஏறக்குறைய எல்லா இயக்குநர்களுமே இதேபோன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஜயின் மெர்சல் படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜயின் 61வது படமாக பிரம்மாண்ட பொருட்செயலரில் தயாராகி இருக்கிறது மெர்சல். முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய் மூன்று பாத்திரங்களில் நடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். வடிவேலுவும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை...
ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

ரஜினியின் ‘வாய்ஸ்’ எங்கே?: நெட்டிஸன்கள் கேள்வி

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நதிகள் இணைப்புக்காக வீடியோவில் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நீட் தேர்வு, நெடுவாசல் பிரச்னைகளுக்கு ஏன் குரல் கொடுப்பதில்லை? என்று சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். தமிழக அரசியல் களத்தை ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்குப் பின் என்று இரண்டு காலக்கட்டங்களாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். மக்களிடம் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கிய எம்ஜிஆர் மறைந்தபோதுகூட, அடுத்தது யார்? என்பதில் நீண்ட குழப்பங்கள் ஏற்படவில்லை. வி.என்.ஜானகியை ஆதரித்தவர்கள்கூட விரைவிலேயே ஜெயலலிதா அணியில் இணைந்து கொண்டனர். இப்போதைய நிலை அப்படி இல்லை. அடுத்து யாரெல்லாம் அரசியல் களத்திற்கு வரலாம் என்ற பட்டியல் போட்டால் அதிலும் சினிமாக்காரர்களே முதல் வரிசையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். ரஜினி, கமல், விஜய், விஷால், சூர்யா இப்படி நீள்கிறது பட்டியல். 100 படங்களைக் கடந்த முன்னணி...
ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி! – விஜயகாந்த்

ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளி! – விஜயகாந்த்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், 'ரஜினி, ஒரு பயந்தாங்கொள்ளி' என்றும், 'விஸ்வரூபம்' படத்த வெளியிட கமல்ஹாஸன் ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகவும் விமர்சனம் செய்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் வருகை, அதிமுக, திமுக, பாஜக செயல்பாடுகள் குறித்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விஜயகாந்த், தனக்கே உரிய உடல்மொழியில் பதில் அளித்தார். உடல்நலம் தேறி வந்திருக்கும் விஜயகாந்தின் குரல், சில இடங்களில் குளறுவதுபோல் இருந்தது. நடிகர் கமல்ஹாஸன், அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறாரே என்று கேட்டபோது, ''அவர் சொல்வதில் என்ன தப்பு இருக்கு...? அவர் உண்மையைத்தான் சொல்கிறார்,'' என்று பதில் அளித்தார். கமல் அரசியலுக்கு வருவது குறித்து கேட்டதற்கு, ''விஸ்வரூபம் படம் சர்ச்சையில் சிக்கியபோதே அவர் அரசியலுக்கு வந்திருக்க வே...