Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Minister

சட்டப்பேரவைக்குள் டிடிவி தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’!; அமைச்சருடன் மோதல்!!

சட்டப்பேரவைக்குள் டிடிவி தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’!; அமைச்சருடன் மோதல்!!

அரசியல், ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பதிலில் திருப்தி இல்லை என்று ஆளுங்கட்சி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கடுமையாக ஆட்சேபித்தது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அதிமுக ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் ஊடகங்களுக்கு தன்னிச்சையாக பேட்டி அளிக்கக்கூட மாட்டார்கள். பிரதான எதிர்க்கட்சியான திமுகவைச் சேர்ந்தவர்களுடன் கட்சிகளைக் கடந்து நட்பு பாராட்டினாலோ, தொழில் ரீதியிலான தொடர்பு வைத்திருப்பது தெரிய வந்தாலோ உடனடியாக அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விடுவர். இத்தகைய ராணுவக் கட்டுப்பாடு எல்லாமே ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை மட்டுமே. அவர் மறைவுக்குப் பின்னர் அக்கட்சி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் எல்லோருமே ஊடகங்களிடம் தனித்து பேசத்தொடங்கிவிட்டனர். காலையில் ஓர் எம்எல்ஏ பேசியதை மாலைய
கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். தமிழகத்தின் குக்கிராமங்களில் ஒன்றாக கீழடியை நாம் கடந்து போய்விட முடியாது. அங்கேதான், பழந்தமிழரின் அரிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து கீழடி கிராமத்தில் மைய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 110 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியது. இரண்டு கட்ட ஆய்வு நடந்த நிலையில், திடீரென்று தொல்லியல் துறையினர் பாதியிலேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப, வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சியினரிடம் இருந்து அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒருவழியாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஒரு கட்ட அகழாய்வு என்பது ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 10 மாதங்களாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறே மாதத்தில் திடீரென்று ஆய்வுப்பணிகள் முடிந்ததாகக்கூறி
பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

பாஜகவின் மிகப்பெரும் பண மோசடி; அருண்ஷோரி தாக்கு!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு என்பது பாஜக அரசு செய்த மிகப்பெரும் பண மோசடி என்று முன்னாள் பாஜக மத்திய அமைச்சர் அருண் ஷோரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பொருளாதார வீழ்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடுமையான விமர்சனம் செய்து வரும் நிலையில், இப்போது அருண்ஷோரியும் அத்தகைய விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பங்கு விலக்கல் துறை அமைச்சராக இருந்தவர் அருண்ஷோரி. அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது: கடந்த ஆண்டு பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்த ரூபாய் நோட்டு வாபசே பொருளாதார சரிவிற்கு காரணம். அது முழுக்க முழுக்க அரசால் நடத்தப்பட்ட மிகப் பெரிய பண மோசடி. இது ஒரு முட்டாள் தனமான யோசனை. இதனால் கருப்பு பணம் வைத்திருந்த ஒவ்வொருவரும் அதை வெள்ளையாக மாற்றி விட்டனர். பழைய ரூபாய் ந
அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!

அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!

அரியலூர், கல்வி, தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் தோல்வி, கலைந்து போன மருத்துவப் படிப்பு என விரக்தியின் உச்சத்தில் இன்று (செப்.1) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவே, நீட் அரக்கனுக்கு கடைசி பலியாக இருக்க வேண்டும். தரகு அரசியலில் கரைந்து போன இளம் மாணவியின் மரணம், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அனிதா. 17 வயதே ஆன இளம் மாணவி. மனசு முழுக்க மருத்துவக் கனவுகளைச் சுமந்து கொண்டு இருந்தார். படிப்பு ஒன்று மட்டும்தான் தன்னையும், குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் நம்பிக்கையாக இருந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து எதிர்காலத்தில் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய திறமையான மருத்துவர் இன்று உயிருடன் இல்லை. தற்கொலை, மன அழுத்தம், இருதய துடிப்பு நின்றது என பிரேத பரிசோதனை அறிக்கை என்ற பதத்தில் சொன்னாலும், அனிதாவின் பலிக்கு முதல் குற்றவாளி தரகர் ஆட்சி