Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Lok Sabha

நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

நரேந்திர மோடி சொன்ன ‘அச்சா தின்’ எப்போது வரும்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோதுகூட இந்தியாவின் பொருளாதாரம் சீர்குலையாமல் கட்டுக்குள் இருந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியில் இந்தியா கடுமையான பொருளாதார சரிவை மட்டுமல்ல, உற்பத்தி, வேலைவாய்ப்புகளையும் பறிகொடுத்து, கூட்டத்தில் தொலைந்த குழந்தைபோல தடுமாறிக் கொண்டிருக்கிறது. அச்சா தின்: கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பாக ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 'நான் பிரதமரானால் இந்தியாவுக்கு 'அச்சா தின்' (நல்ல நாள்) பிறந்து விடும்' என்றார். ஜன்தன், ஆதார், மேக் இன் இந்தியா, பணமதிப்பிழப்பு, புல்லட் ரயில், சவுபாக்கியா என ஒவ்வொரு திட்டம் அறிவிக்கும்போதும் புதிய இந்தியா பிறந்து விட்டதாக பிரதமர் மோடி அகன்ற மார்பை திறந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். அவருக்கும், அவரை இயக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கும் வேண்டுமானால் அந்த நாள்கள், நல்ல நாள்களாக இருக்கல...
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: கட்சித்தாவல் தடை சட்டப்படி சரியானதா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: கட்சித்தாவல் தடை சட்டப்படி சரியானதா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 அதிமுக எம்எல்ஏக்கள், இன்று (செப். 18) அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கை, கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி சரிதானா? என்பது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசல்களைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளடக்கிய 12 எம்எல்ஏக்கள் ஓரணியாகவும், மற்ற எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னி¦ர்செல்வம் அணியினர் எதிர்த்து வாக்களித்தனர். பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரின் தலையீட்டால் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி, ஓரணியாக இணைந்தன. இந்த இணைப்பில் உடன...
ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

ஜெயலலிதா மரணம்: சொன்னீர்களே! செய்வீர்களா?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்பு முடிந்து ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் பேச்சு செயல்வடிவம் பெறுமா? என்பதில் தொண்டர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அதன்பிறகு, ஒன்றரை கோடி தொண்டர்கள் பலமிக்க அதிமுகவை கைப்பற்ற 'சசிகலா அன்டு கோ' கடும் முஸ்தீபுகளில் இறங்கியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதெல்லாம் தற்காலிக முதல்வராக ருசி கண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அந்த அரியணையை நிரந்தரமாக்கிக் கொள்ள உள்ளூர ஆசை இருந்து கொண்டே இருந்தது. இதை மோப்பம் பிடித்துவிட்ட மன்னார்குடி தரப்பு, அவர் வாயாலேயே சசிகலாவை முதல்வர் பதவியேற்க அழைக்கும்படி ஆளுநரிடம் சொல்ல வைத்தது. ஆனால், ஆசை யாரை விட்டு வைத்தது?. சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி கும்பலுடன் மோத முட...
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (செப். 12) நடந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டங்களின்போது மேடையில் ஜெயலலிதா, அவைத்தலைவர் ஆகியோருக்கு மட்டுமே நாற்காலி போடப்பட்டு இருக்கும். இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இருவருடைய முக்கிய ஆதரவாளர்களுக்கும் மேடையை ஆக்கிரமித்து இருந்தனர்.   பொதுக்குழு நடந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கட்&அவுட், பேனர்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் புகைப்படங்கள் இருந்தன. முன்பு, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் மட்டுமே பேனர்களில் இருக்கும். இன்றைய பொதுக்குழுவில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியனம் ரத்த...
எஸ்மா: மீண்டும் திரும்புகிறது 2003?

எஸ்மா: மீண்டும் திரும்புகிறது 2003?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை, எஸ்மா / டெஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ எனப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அமைச்சுப்பணி ஊழியர்களின்றி முடங்கிக் கிடக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும், திங்கள் கிழமைகளில் பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலக...
தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?

தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?

அரசியல், தமிழ்நாடு
தமிழகத்தில் ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு ஆளுநர் மட்டுமே இருந்து வரும் நிலையில், விரைவில் புதிதாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அரியணையேறிய கையோடு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்டு இருந்த ஆளுநர்களை கட்டாய ஓய்வில் செல்லும்படி வற்புறுத்தியது. பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டனர். ஆனாலும், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோசய்யா, தொடர்ந்து பதவியில் இருந்து வந்தார். அவர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்ததாலும், நரேந்திர மோடியுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த பரஸ்பர நட்பின் காரணமாகவும் ரோசய்யா பதவிக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. அவர் தனது முழு பதவிக்காலத்தையும்...
மத்திய அமைச்சரவையில் அதிமுக?

மத்திய அமைச்சரவையில் அதிமுக?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆபரேஷன் தமிழ்நாட்டின் அடுத்த நகர்வாக, அதிமுகவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் படலம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அதிமுகவை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கால் பதிப்பதுதான் பாஜகவின் ஆகப்பெரிய சாதனையாக இருக்க முடியும். இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளின் கோட்டையாகப் பார்க்கப்படும் கேரளாவில்கூட பரவலாக காவி நிறம் தென்படத் தொடங்கிவிட்டது. கர்நாடகாவிலோ காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவ அரசியல் இருந்து வருகிறது. ஆந்திராவில் காலூன்ற வசதியாக, அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்டது. தென்னிந்தியாவில் பாஜகவினர் நுழைய முடியாத எஃகு கோட்டை என்றால் இன்னமும் அது, தமிழ்நாடு மட்டும்தான். இப்போது தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழ...