டி-20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா! தீபக் சஹார் ‘ஹாட்ரிக்’ சாதனை!!
வங்கதேச அணியுடனான
ட்வெண்டி-20 கிரிக்கெட் தொடரை,
2 - 1 கணக்கில் இந்திய அணி
வென்றது. இந்தியாவின்
தீபக் சஹார், 'ஹாட்ரிக்'
விக்கெட்டுகளை வீழ்த்தி
வெற்றிக்கு வித்திட்டார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ட்வெண்டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தது. முதல் போட்டியில் வங்கதேசமும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்று 1-1 என சமநிலையில் இருந்தன. இந்நிலையில், கோப்பையைக் கைப்பற்றப்போகும் அணி எது? என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி, நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10, 2019) இரவு நடந்தது.
இந்திய அணியில், ஆல் ரவுண்டர் குருணால் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு மாற்றாக மனீஷ்பாண்டே சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மஹமதுல்லா, முதலில் பந்து வீச்சை தேர்வ...