கடைசி டி20: இந்தியா போராடி வெற்றி; இலங்கை ‘வாஷ் அவுட்’
இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்திலும் வென்று, இலங்கை அணியை இந்தியா 'வாஷ் அவுட்' செய்தது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (டிசம்பர் 24, 2017) நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில் இன்றைய வெற்றி, தோல்வி இந்திய அணியை பாதிக்காது.
எனினும், இலங்கை அணியை, 'வாஷ் அவுட்' செய்யும் முனைப்பில் இந்தியா களமிறங்கியது. ஒரு வெற்றியாவது பெற்று விடமாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் இலங்கை அணியும் களம் கண்டது. இந்திய அணியில் பந்து வீச்சாளர்கள் சாஹல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளி க்கப்பட்டு, சிராஜ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தமிழ...