Sunday, May 31மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Assembly election

மூக்குடைந்த விஜய்; அடித்து ஆடிய உதயநிதி!

மூக்குடைந்த விஜய்; அடித்து ஆடிய உதயநிதி!

அரசியல், முக்கிய செய்திகள்
சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு பெரும்பான்மை கிடைத்த அதேநாளில், அரசின் முதல் பணி நியமனமே ரத்து செய்யப்பட்ட விவகாரம், முதல்வர் விஜய்க்கு பக்கா 'நோஸ்கட்' என்கிற விமர்சனமும் கிளம்பியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் கிடைக்கவில்லை. திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் தனித்து வெற்றி பெற்றன. தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளன. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தங்கள் வசமுள்ள 5 எம்எல்ஏக்களுடன் தவெக கூட்டணியில் இணைந்ததோடு, ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியது. யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம். எஸ்.பி.வேலுமணி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆக...
சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அந்த நிமிடத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ., சிபிஎம்., மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட 25 கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. அதிமுக தலைமையில் பாஜக., அமமுக, தமாகா., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த இரு கூட்டணிகள் தவிர, நாம் தமிழர் கட்சி, புதிய வரவான நடிகர் விஜய்யின் தவெக., ஆகிய கட்சிகளும் தேர்தல் களம் கண்டன. மாநிலம் முழுவதும் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. குறிப்பிட்ட தொகுதிகளில் வி.கே.சசிகலாவின் அஇபுதமமுக கட்சியும், டாக்டர் ராமதாஸின் அணி கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி...
நாமக்கல் மாவட்டம்: தேர்தல் களத்தில் முந்துவது யார்?

நாமக்கல் மாவட்டம்: தேர்தல் களத்தில் முந்துவது யார்?

அரசியல், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரங்களை விசாரித்தோம். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாதக, தவெக கட்சிகள் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. நாமக்கல்: திமுக தரப்பில் மகளிர் தொண்டரணி நிர்வாகி ராணி, அதிமுகவில் தொழில் அதிபர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் நேரடியாக மோதுகின்றனர். முன்னாள் மா.செ.க்கள் காந்திசெல்வன், 'பார்' இளங்கோவன் ஆகியோருக்கு வேறு தொகுதிகளில் தேர்தல் பணிகள் வழங்கப்பட்டதால் அவர்களுடைய ஆதரவாளர்களும், சிட்டிங் எம்எல்ஏ ராமலிங்கமும் வேட்பாளர் ராணிக்கு ஆதரவாக பரப்புரைக்குச் செல்லவில்லை என்...
சேலம்: 11 தொகுதிகளின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரம்!

சேலம்: 11 தொகுதிகளின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரம்!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளையும் வாரிச் சுருட்டும் நோக்கில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் உச்சக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. நா.த.க., த.வெ.க., கட்சிகளும் களத்தில் இருக்கின்றன. வெற்றி நிலவரம் குறித்து களத்தில் விசாரித்தோம். கெங்கவல்லி (தனி): இத்தொகுதியில், திமுக தரப்பில் மாஜி எம்எல்ஏ சின்னதுரை களமிறங்கியுள்ளார். தொகுதியில் நன்கு அறிமுகம் ஆனவர். மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் பெரிய அளவில் பெண்களிடம் 'ரீச்' ஆகியிருப்பது இவருக்கு பலம். அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., நல்லதம்பி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை. எனினும், மக்களிடம் இவர் மீது அதிருப்தியும் இல்லை. தம்மம்பட்டி பேரூர், உலிபுரம், நாகியம்பட்டி, ஜக்கமசமுத்திரம் பகுதி வரை திமுகவுக்கும், கெங்கவல்...
ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

ஏப்ரல் 23ல் தமிழக சட்டமன்ற தேர்தல்; வேட்புமனு தாக்கல் 30ம் தேதி தொடக்கம்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில், வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஞானேஷ்குமார், மார்ச் 15ம் தேதி மாலையில் வெளியிட்டார். தமிழகத்தில் நடப்பு சட்டமன்றத்தின் ஆயுள் காலம் மே 10ம் தேதியும், புதுச்சேரி சட்டமன்றத்தின் ஆயுள் ஜூன் 15ம் தேதியும் முடிவுக்கு வருகின்றன. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மட்டுமின்றி அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத...
சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

சட்டப்பேரவை தேர்தல்: மாங்கனி மாவட்டத்தில் திமுக மண்ணை கவ்வியது ஏன்?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக, கோட்டையில் கொடி நாட்டினாலும், மாங்கனி மாவட்டமான சேலத்தில் மட்டும் தொடர்ச்சியாக மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக கோட்டை விட்டிருப்பது உடன்பிறப்புகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   அதேநேரம், சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி, மீண்டும் இந்த மண்ணை அதிமுகவின் கோட்டை என நிரூபித்திருக்கிறார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. உள்ளடி வேலைகள், கோஷ்டி பூசல்களால் திமுகவால் இங்கு ஒரு தொகுதிக்கு மேல் கைப்பற்ற முடியாத சோகம் தொடர்கிறது. கடந்த 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2016 தேர்தலில் அதிமுக தனித்து 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், சேலம் வடக்கில் மட்டும் சூரியன் உதித்து இருந்தது. ...
சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

அரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.   மாவட்டம் முழுவதும் 15 லட்சத்து 246 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 15 ஆயிரத்து 19 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 204 பேர் என மொத்தம் 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 வாக்காளர்கள் உள்ளனர்.   கடந்த ஏப். 6ம் தேதி நடந்த தேர்தலில் 23 லட்சத்து 86 ஆயிரத்து 950 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 11 தொகுதிகளிலும் சராசரியாக 79.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 4280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நாம் மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுக்கும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இ...
போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #2

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம், வழக்கம்போல கனல் கக்குகிறது. இதுவரையிலான தமிழக தேர்தல் வரலாற்றில், இந்த தேர்தலானது அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். மக்களும் கூட, தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வழக்கத்தை விடவும் கூடுதல் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.   நாளை (ஏப். 6) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள இந்த கடைசி நிமிடத்தில், திருவாளர் பொதுஜனங்களின் சிந்தனைக்காக சில சங்கதிகளை பேச விழைகிறேன். சற்றே நீளமான பதிவுதான். இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக கொஞ்சம் பொறுமை காத்து செவிசாய்க்க வேண்டுகிறேன்.   களத்தில் எத்தனை முனை போட்டி நிலவினாலும், நீங்கள் திமுக அல்லது அதிமுக கூட்டணி ஆகியவற்றில் ஒன்றைத்தான் தேர்வு செய்யப் போகிறீர்கள். எவற்றையெல்லாம் முன்வைத்து இங்கே ஒரு கூட்டணியை புறக்கண...
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்; ஏப். 6ல் வாக்குப்பதிவு; மே 2ல் வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
தமிழகம், புதுவையில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவும், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016ம் ஆண்டு ஏப். மாதம் தேர்தல் நடந்தது. நடப்பு சட்டப்பேரவையின் ஆயுள் காலம் வரும் மே 24, 2021ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்தல் பரப்புரைகளை தொடங்கி விட்டன.   தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கடந்த சில நாள்களாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை (பிப். 26) மாலை டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.   தமிழகம், ப...
மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

மாங்கனி மாவட்ட திமுகவில் யாருக்கு சீட்? விருப்ப மனுக்கள் பெறுவதில் உடன்பிறப்புகள் ஆர்வம்!

தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அதன் மீது இயல்பாகவே எழும் அதிருப்தி, ஜெயலலிதா என்ற மிகப்பெரும் ஆளுமை இல்லாத நிலை ஆகியவற்றால் எப்படியும் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அதீத எதிர்பார்ப்பு திமுக தரப்பில் நிலவுகிறது. இதனாலேயே வரும் தேர்தலில் வேட்பாளர் சீட் கேட்டு, திமுகவில் 'பசையுள்ள' விஐபிகள் பலரும் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவாலயத்துக்கு படையெடுத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், சேலம் வடக்கில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. 1996, 2006 தேர்தல்களில் அதிமுக மீதான கடும் அதிருப்தி நிலவிய காலக்கட்டத்தில் மட்டுமே சேலம் மாவட்டத்தில் திமுக கணிசமான இடங்களை கைப்பற்றி இருக்கிறது. மற்ற காலங்களில், ம...