Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பணியிடை நீக்கம்.

”லஞ்சம், ஊழலை அம்பலப்படுத்துவது குற்றமல்ல!” தகவல் ஆணையம் அதிரடி!!

”லஞ்சம், ஊழலை அம்பலப்படுத்துவது குற்றமல்ல!” தகவல் ஆணையம் அதிரடி!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பணியிடங்களில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல் குறித்து காவல்துறைக்கு புகார் அளிப்பது குற்றம் ஆகாது என்றும், அதற்காக புகார் அளித்தவரை தண்டிப்பது கூடாது என்றும் தமிழ்நாடு தகவல் ஆணையம் தடாலடியாக தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் சித்தனூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் (54). பெரியார் பல்கலையில் பொருளாதார துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு இப்பல்கலையின் துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உதவி பேராசிரியர் / பேராசிரியர் பணியிடங்கள் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை கூவி கூவி விற்பனை செய்தார் என்பதும், பதவி உயர்வு வழங்குவதற்காக 23 உதவி பேராசிரியர்களிடம் தலா 3 லட்சம் வசூலித்தார் என்பதும் அவர் மீதான புகார்களில் முக்கியமானவை.   போலி அனுபவ சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள், முழு கல்வித்தகுதியை எட்டாதவ
சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!

சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சங்ககிரி அருகே, அரசுப்பள்ளியில் குடிபோதையில் வகுப்பறையில் தூங்கிய ஆசிரியர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.   அரசுப்பள்ளிகளில் தரமற்ற கற்பித்தல் முறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் ஏற்கனவே மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், ஒழுக்கக்கேடான ஆசிரியர்களால் மேலும் சீர்குலைந்து வருகின்றன. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும் மொத்தமே 20க்கும் குறைவான குழந்தைகளே படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இருதயராஜ் என்பவர் தலைமை ஆசிரியராகவும், அறிவழகன் என்பவர் இடைநிலை ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.   மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆச
இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து: உடுமலை கவுசல்யா பணியிடை நீக்கம்!

தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேட்டி அளித்ததாக உடுமலை கவுசல்யாவை பணியிடைநீக்கம் செய்து வெலிங்டன் கண்டோன்மென்ட் உத்தரவிட்டுள்ளது.   திருப்பூர் அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் கவுசல்யா. தேவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர், கூலிப்படையை ஏவி பட்டப்பகலில் சங்கரை ஆணவப்படுகொலை செய்தனர். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கவுசல்யா சமூகநீதி அறக்கட்டளை என்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வந்தார். முற்போக்கு அமைப்புகள் பெயரில் இயங்கி வரும் சில அமைப்புகள் அவரை புதிய போராளியாக முன்னிறுத்தின.   சங்கர் படுகொலைக்குப் பிறகு, அ
துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

குற்றம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணி நியமனத்திற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். அவரை அந்தப் பணியில் நியமனம் செய்வதற்காக பல்கலை துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் கேட்டுள்ளார்.   கடந்த 3ம் தேதி சுரேஷ் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி துணை வேந்தரிடம் லஞ்சப்பணத்தைக் கொடுப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றார். லஞ்சம் வாங்கிய துணை வேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கணபதியின் லஞ்ச பேரத்திற்கு உடந்தையாக இருந்ததாக பாரதியார் பல்கலை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் கைது செய்தனர். கணபதி, சிறையில் அடைக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு மேலாகியும் அவர் பணியிடை நீக்கம் செய
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 சிறுமிகள் பலி: அலட்சியத்தால் இரையான அவலம்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இரண்டு சிறுமிகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியாயினர். சிறுமிகள் பலி: சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகரைச் சேர்ந்த பாவனா (11), யுவஸ்ரீ (10) ஆகியோர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தனர். வடகிழக்கு பருவமழை காரணாக அப்பகுதியில் பள்ளிக்கு இன்று (நவம்பர் 1, 2017) விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இரண்டு சிறுமிகளும் இன்று மதியம் வீடு அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். தெருவோரம் இருந்த மின்பெட்டியில் (Electricity Piller Box) இருந்து ஒரு மின்சார கம்பி அறுந்து மண் தரையில் நீண்டு கிடந்தது. அதை அறியாமல் மதித்த சிறுமிகள், மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாயினர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு சிறுமி மின்சாரம் பாய்ந்ததில் பலத்த கா