Tuesday, July 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அரசியல்

பொய் செய்தி விவகாரம்: பணிந்தார்  நரேந்திர மோடி!; ஸ்மிருதிக்கு மூக்குடைப்பு!!

பொய் செய்தி விவகாரம்: பணிந்தார் நரேந்திர மோடி!; ஸ்மிருதிக்கு மூக்குடைப்பு!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பொய் செய்திகள் வெளியிடும் ஊடகத்தினரின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற நடுவண் அமைச்சர் ஸ்மிருதி இராணியின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு, அந்த உத்தரவுக்கு அதிரடியாக தடை விதித்தார். நடுவண் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரான ஸ்மிருதி இராணி, பொய் செய்திகள் வெளியிடும் பத்திரிகை, செய்தி தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடக செய்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று (ஏப்ரல் 2, 2018) திடீரென்று ஓர் உத்தரவை பிறப்பித்தார். போலி செய்திகள் வழங்கிய குற்றம் முதல்முறையாக நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட செய்தியாளரின் தேசிய அங்கீகாரம் (National Accreditation) 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும், இரண்டாவது முறையாக அதே குற்றம் நடந்திருப்பது தெரிய வந்தால் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும் என்றும் உத்தரவிட...
காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

காவிரி விவகாரம்: கொலை வாளினை எடடா!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து மற்றுமொரு மெரீனா புரட்சிக்கு தமிழக இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். துவக்க நிலையிலேயே கைது நடவடிக்கை மூலம் கடுமை காட்டும் தமிழக அரசை முற்றாக வீட்டுக்கு அனுப்பும் புதிய அத்தியாயத்தை இந்தப் போராட்டம் முன்னெடுக்கும் எனத்தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான முழு காலக்கெடுவையும் தின்று தீர்த்த நடுவண் பாஜக அரசு, தமிழக நலனுக்கு எதிராக மிகத்தந்திரமான நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது. சட்ட ரீதியாக தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரையும் கிடைக்க விடாதபடி, பாஜகவும் காங்கிரஸ் கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. மக்கள் நலன் பாராத காட்டுமிராண்டித்தன போக்கிற்கு வாக்கு அரசியல் மட்டுமே காரணம். கர்நாடகாவில் விரைவில் வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மையப்படுத்தியே பாஜக, இத்தகைய மாற்றாந்தாய் மனப்போக்கி...
பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

பாஜகவின் பச்சை துரோகம்!; கிளர்ச்சிக்குத் தயாராகும் தமிழகம்!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவின் நீதிபரிபாலனத்தையும், மாநிலங்களின் கூட்டாட்சித் தத்துவத்தையும் தொடர்ந்து சிதைத்து வரும் பாஜக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து மீறியிருப்பதன் மூலம், தமிழகத்திற்கு பச்சை துரோகத்தை இழைத்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் உறங்கும் எரிமலையாக இருந்த தமிழகம், வெடித்துக் கிளம்பும் எனத் தெரிகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கடந்த 16.2.2018ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பில், கர்நாடகா மாநிலம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை ஆறு வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் நடுவண் அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டிஎம்சி தண்...
”அமித்ஷா உளறல்கள்!” – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

”அமித்ஷா உளறல்கள்!” – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
கடந்த சில நாள்களாக பழமொழியை மாற்றிப் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்து வந்த ட்விட்டர் புலிகள், 'எடியூரப்பா அரசுதான் ஊழலில் நம்பர்-1' என்று பகிரங்கமாக தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் உளறல்களை இந்தியாவுக்கே இன்று பந்தி வைத்துவிட்டனர். கர்நாடகா மாநிலத்தில், வரும் மே மாதம் 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே பாஜக தொழில்நுட்பப் பிரிவுத்தலைவர் அமித் மால்வியா, ட்விட்டரில் தேர்தல் தேதியை வெளியிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் பாஜக தேசிய...
ஒரு பழமொழி… ஓஹோனு டிரெண்டிங்!; இந்திய அளவில் முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்!#ஸ்டாலின்_பழமொழி

ஒரு பழமொழி… ஓஹோனு டிரெண்டிங்!; இந்திய அளவில் முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்!#ஸ்டாலின்_பழமொழி

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொது நிகழ்ச்சியில் ஒரே ஒரு பழமொழியைக் கூறியதன் மூலம் இன்று (மார்ச் 23, 2018) இந்திய அளவில் ட்விட்டர் சமூக ஊடகத்தில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.     பொதுக்கூட்டமோ, பொதுநிகழ்ச்சிகளோ அரசியல்வாதிகள் குறிப்பு எழுதி வைத்துக்கொண்டு பேசுவது என்பது உலகளவில் நடைமுறையில் இருந்து வருவதுதான். தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை, திமுக தலைவர் கருணாநிதி மேடைகளில் பேசும்போது எழுதி வைத்துக்கொண்டு பேசுவதில்லை. எத்தனை ஆண்டுகால வரலாறாக இருந்தாலும், அவர் மூளைக் கிடங்கில் இருந்து துல்லியமான தகவல்கள் சுரந்து கொண்டே இருக்கும்.     கருணாநிதிக்கு நேர் எதிரானவர் ஜெயலலிதா. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கையின்றி அவர் மேடையேறுவதே இல்லை. ஆனால் ஒரு பிரபலத்தின் வாரிசாக இருப்பதில் நிறையவே சங்கடங்கள் நிறைந்தது. பெற்றோர் பயணித்த அதே ...
”பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி!”: பாஜக மூத்த தலைவர் பேச்சு

”பணமதிப்பு நீக்கம் முற்றிலும் தோல்வி!”: பாஜக மூத்த தலைவர் பேச்சு

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பணமதிப்பு நீக்கத்தின்போது பிரமதர் நரேந்திர மோடி சொன்ன ஊழல், கருப்புப் பணம் ஒழிப்பு, பயங்கரவாதம் தடுப்பு ஆகிய அனைத்து நோக்கங்களும் முற்றிலும் தோல்வி அடைந்திருக்கிறது என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நடுவண் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். பொருளாதார பேராசிரியர் அருண்குமார் எழுதிய 'பணமதிப்பு நீக்கமும் கருப்புப் பொருளாதாரமும்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா அண்மையில் டெல்லியில் நடந்தது. பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் நடுவண் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் தன்னை, 'ஆளும் கட்சிக்குள் இருக்கும் எதிர்க்குரல்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பேசியது: நடுவண் அரசின் அனைத்து முடிவெடுக்கும் அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்தில் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி என்ற ஒரே ஒரு கொள்கை வகுப்பாளரை மட்டுமே இந்த அரசு கொண...
சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்; தலைவர்கள் அஞ்சலி

சசிகலாவின் கணவர் நடராஜன் காலமானார்; தலைவர்கள் அஞ்சலி

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும், 'புதிய பார்வை' பத்திரிகை ஆசிரியருமான நடராஜன் சிகிச்சை பலனின்றி இன்று (மார்ச் 20, 2018) இரவு 1.35 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரே நேரத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். நடராஜன் மரணம்: இந்நிலையில், நெஞ்சக பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த 15ம் தேதி சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், அவருடைய உடல் கவலைக்கிடமாக மாறியது. சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகமும் அதிகாரப்பூர்வமாக அறிக்...
ரத யாத்திரை சர்ச்சை: வேல்முருகன் திடீர் கைது!

ரத யாத்திரை சர்ச்சை: வேல்முருகன் திடீர் கைது!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் வரும் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன் உள்பட 25 பேரை செங்கல்பட்டு காவல்துறையினர் இன்று (மார்ச் 19, 2018) இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென்று கைது செய்தனர். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ராம ராஜ்ய ரத யாத்திரை என்ற பெயரில் சில மாநிலங்களில் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் ஏற்கனவே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐந்து மாநிலங்களைக் கடந்து, ரத யாத்திரை நாளை (மார்ச் 20, 2018) திருநெல்வேலி மாவட்டம் புளியரை வந்து சேர்கிறது. அங்கு ரத யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.   ரத யாத்திரைக்கு தமி-ழகத்தில் தடை விதிக்கக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்...
அமமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்; பின்னணி என்ன?

அமமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்; பின்னணி என்ன?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதன் பின்னணியில் கட்சிப் பெயர் மீதான அதிருப்தி மட்டுமின்றி, மேலும் சில காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக டிடிவி தினகரன் கம்பு சுழற்றத் தொடங்கியது முதலே, அவருக்காக மேடைதோறும் முழங்கியவர் நாஞ்சில் சம்பத். தினகரன் அணியில் கொள்கை பரப்புத் துணைச்செயலாளராகவும் இருந்து வந்தார். மதிமுகவில் இருந்து பிரிந்த அவர், கடந்த 2012ல் அதிமுகவில் ஐக்கியமானார். அப்போது ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட அதே பதவியில்தான் டிடிவி தினகரனும் அமர்த்தி இருந்தார். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அவர் கேட்டிருக்கும் கட்சிப் பெயர்களில் ஒன்றை வழங்கலாம் என்றும் தீர்ப்பு அளித்தது. இதை வரவேற்ற நாஞ்...
ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

ஆந்திரா: பாஜகவின் மோடி மஸ்தான் விளையாட்டு ஆரம்பம்!#NoConfidenceMotion

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
ஆந்திரா மாநிலத்தில் தெலுங்குதேசம் கட்சிக்கு நாலாபுறமும் முட்டுக்கட்டைகள் பெருகி வருவதை மிக தாமதமாக உணர்ந்து கொண்ட பிறகே, சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் வெளியேறியிருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவின் புதிய பங்காளியாக இணைந்து கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, இன்று மத்திய பாஜகவுடன் உடனான உறவை முறித்துக் கொண்டுள்ளது. அரசியல் சதுரங்கத்தில் ஒவ்வொரு காய் நகர்த்தலின் பின்னணியிலும் வாக்கு வங்கி, சுயலாபமே மேலோங்கி இருக்கும். மக்கள் நலன், மாநில சுயாட்சி என்பதெல்லாம் அதற்கான சப்பைக்கட்டு வாதமே. மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியதற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறது தெலுங்கு தேசம். ஒன்று, ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாதது; இன்னொன்று,...