Friday, January 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சிறப்பு கட்டுரைகள்

தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

தெருவிளக்கு இல்லாததால் ஊரை விட்டு ஓடும் கிராம மக்கள்! சேலம் அருகே அவலம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, இரண்டு ஆண்டுக்கும் மேலாக தெருவிளக்கு வசதி இல்லாததால் ஒரு கிராமமே வெளிச்சத்தை நோக்கி நகரப்பகுதிக்கு படையெடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   குள்ளம்பட்டி கிராமம் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குள்ளம்பட்டி குக்கிராமம். நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயக்கூலிகளும், கட்டடத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர்.   சேலம் மாநகரில் பல இடங்களில், பல நேரங்களில் காலை 10 மணி ஆனாலும் அணைக்கப்படாமல் காட்சி அளிக்கும் தெருவிளக்குகள் இருக்கும் நிலையில், குள்ளம்பட்டி கிராமமோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.   தெருவிளக்கு வசதி செய்து தரும்படி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அந்த கிராம மக்கள் படையெடுக்காத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும்...
பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப, பெரியார் பல்கலையில் ஆசிரியர்கள் நியமனத்தில் தொடங்கிய ஊழல் முறைகேடுகள், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் தொடர்கிறது. இதனால், 22 உதவி / இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.   முட்டுக்கட்டை:   முன்னத்தி ஏர்போல, முன்மாதிரி சமூகமாக விளங்க வேண்டிய சேலம் பெரியார் பல்கலைக்கழகமே, ஊழல் புரையோடிக் கிடப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனும், முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவும் சிண்டிகேட் அமைத்து ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் சுருட்டினர்.   ஊழல் குட்டுகள் வெளிப்படத் தொடங்கிய பின்னர், ஒருவரை ஒருவர் காலை வாரிவிடத் தயாரானபோதுதான், அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளின் விளைவாக, இப்போதும் பல உதவி, இணை பேராசிரியர்கள் பதவி உய...
பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று திடீரென்று தமிழின் மீது பாசமழை பொழிந்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் சமூக ஊடகங்களில் அண்மைய விவாதங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.   மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நரேந்திர மோடி, வானொலியில் 'மனதில் இருந்து பேசுகிறேன்' (மன் கீ பாத்) உரையாற்றி வருகிறார். கடந்த 25.8.2018ம் தேதி நடந்த ஓர் உரையாடலில்தான் தமிழை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.     இப்படி அவர் உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் புகழ்வது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் டெல்லி டால்கோட்ராவில் நடந்த ஒரு விவாதத்தின்போதும்கூட, 'சமஸ்கிருதத்தைவிட அழகான தமிழ்மொழியை கற்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது,' என்று கூறியிருக்கிறார்.     மேடைகளில் தமிழில் சில வாக...
சேலம்: பள்ளி சீருடை கூலியில் பல கோடி ரூபாய் சுருட்டல்! #Scam #SocialWelfare

சேலம்: பள்ளி சீருடை கூலியில் பல கோடி ரூபாய் சுருட்டல்! #Scam #SocialWelfare

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சி-ற-ப்-பு-  க-ட்-டு-ரை-   பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை தைத்துக் கொடுத்த ஏழை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல கோடி ரூபாய் கூலித்தொகையை சத்தமே இல்லாமல் ஏப்பம் விட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு. தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1445 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு செட் விலையில்லா சீருடைகளை தமிழக அரசு வழங்குகிறது.   தொழில் கூட்டுறவு சங்கம்:   ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் டிரவுசரும் சட்டையும் சீருடையாக வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்குசட்டையும் ஸ்கர்ட்டும் வழங்கப்படுகிறது. 6ம் வகுப்பு மேல் பயிலும் மாணவர்களுக்கு பேன்ட், சட்டையும், மாணவிகளுக்கு சுடிதார், டாப்ஸ், பேன்ட் ஆகியவையும்...
தட்டச்சு தெரியாவிட்டால் டிஸ்மிஸ்! துக்ளக் தர்பார் நடத்தும் பெரியார் பல்கலை.!! #PeriyarUniversity

தட்டச்சு தெரியாவிட்டால் டிஸ்மிஸ்! துக்ளக் தர்பார் நடத்தும் பெரியார் பல்கலை.!! #PeriyarUniversity

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் அனைத்து தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களும் தட்டச்சு (டைப்ரைட்டிங்) தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்று திடீரென்று உத்தரவிடப்பட்டு உள்ளது, பல்கலை வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் பெரியார் பல்கலையின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 101 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள் இணைவு பெற்று, செயல்பட்டு வருகின்றன. பல்கலை மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் தேர்வுகளுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்வது, பல்கலை வரவு, செலவு கணக்குகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் 478 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 282 பணியாளர்கள் தொகுப்பூதியத்திலும், மற்றவர்கள் தினக்கூலி ஒப்பந்தத்தின் பேரிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள...
சேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல்! மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன?

சேலம் ஜி.ஹெச்.: டாக்டர்களுக்குள் மோதல்! மர்ம நபர் மூலம் அறுவை சிகிச்சை; ஏழை நோயாளிகள் கதி என்ன?

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு கட்டுரை -   சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், இருதய சிகிச்சை டாக்டர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் அந்த துறையையே இழுத்து மூடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.   சேலம் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள இருதய நோய் சிகிச்சைத்துறையில், டாக்டர் கண்ணன் துறைத்தலைவராக உள்ளார். இவர் உள்பட டாக்டர்கள் குணசேகரன், முனுசாமி, தங்கராஜ், பச்சையப்பன், ஞானவேல், சுரேஷ்பிரபு ஆகிய ஏழு பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் டாக்டர் முனுசாமி மீது துறைத்தலைவர் கண்ணன் உள்பட ஆறு டாக்டர்களும் மருத்துவமனை டீன், மாவட்ட கலெக்டர், மருத்துவக்கல்வி இயக்குநர், சுகாதாரத்துறை செயலர் வரை புகார் மேல் புகார் தட்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றனர்.   ஒருகட்டத்தில், கைகலப்பு வரையிலும் சென்றதாக கூறும் பிற துறை மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் இப்போது கார்டியாலஜி டாக...
40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் சாலை விபத்தில் பலியாகின்றனர்!

40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகளவில் சாலை விபத்தில் பலியாகின்றனர்!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சாலை விபத்துகளில் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகளவில் பலியாகின்றனர் என்பது போக்குவரத்துத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.   தமிழகத்தில் சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் ஒருபுறம் கவனம் செலுத்தப்பட்டு வந்தாலும், வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவது போக்குவரத்துத்துறைக்கு கடும் சவாலாக விளங்குகிறது. சாலை விபத்துகளில், இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுவது பெரும் சவாலாக உள்ளது. இதையடுத்து, சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதில் போக்குவரத்துத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு ஆய்வுகளில் இறங்கியுள்ளனர்.   கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் நடந்த சாலை விபத்துகளில் 16157 பேர் பலியாகியுள்ளனர். தொடர் விழிப...
போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

போலிகள் கூடாரமான சேலம் பெரியார் பல்கலை.!; மவுனம் கலைவாரா துணைவேந்தர்? #PeriyarUniversity

கல்வி, கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
-சிறப்பு செய்தி-   சுங்குவார் சத்திரத்தில் சுக்கு காபி விற்ற அனுபவம் இருந்தாலே போதும், வணிகவியல் துறை பேராசிரியர் ஆகிவிடலாம் என்பதை நிரூபித்து இருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். பீடிகை போடாமல் நேராக விஷயத்துக்கு வருவோம்.   பெரியார் பல்கலையில் கடந்த 2015-2016ம் ஆண்டின் வரவு, செலவினங்கள் தணிக்கை செய்யப்பட்டது. உள்ளாட்சித் தணிக்கை ஆய்வாளர் ரவி தலைமையிலான குழுவினர், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை தணிக்கைப் பணிகளை நடத்தி முடித்தனர்.   தணிக்கை நடத்திய காலக்கட்டம் வரை கடந்த 20 ஆண்டுகளில் பெரியார் பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் கிட்டத்தட்ட ரூ.47 கோடிக்கு உரிய செலவின ஆவணங்களை தணிக்கைக்கு உட்படுத்தவில்லை என்பது, தணிக்கை அறிக்கையின் ஹைலைட் பாயிண்ட்.   அந்த அறிக்கையில், மேலும் பல முறைகேடுகள் சுட்டிக்காட்டப...
”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

”ஈழத்தைப் பற்றி பேச இங்கே நான் ஒருவன்தான் இருக்கிறேன்!” – வெடிக்கும் சீமான்!! #Seeman

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  - சிறப்பு நேர்காணல் -   சேலம் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் மக்களிடம் நேரில் கருத்து கேட்கச் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, ஜூலை 18ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்ததில், 'இந்த கைதே சட்ட விரோதமானது,' என்று கண்டித்த சேலம் மாவட்ட நீதிமன்றம், மறுநாள் மாலையில் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூலை 20ம் தேதி காலையில், சேலம் மத்திய சிறையில் இருந்து சீமான் வெளியே வந்தார்.   அன்று இரவு, சேலத்தில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலில் அவரை சந்தித்தோம். நாம் சென்ற நோக்கம் குறித்து, ஹோட்டல் லாபியில் உள்ள இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தோம்.   அவருடைய வழக்கறிஞரின் ஆலோசனையின்பேரில் நம்மை சந்தித்தார் சீமான். நேர்காணலின் துவக்கம் முதல் இறுதிவரை கொஞ்சமும் அவரிடம் எனர்ஜி குறையவில்லை. வார்த்தைகள் ஒவ்வ...