Tuesday, January 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது?: டிஆர்பி அறிவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது?: டிஆர்பி அறிவிப்பு

கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர் தகுதி தேர்வு, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், கல்லூரி ஆசிரியர் தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (மார்ச் 1, 2018) வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு (Teacher Eligibility Test - TET), அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய இரு நாள்கள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board - TRB) இன்று அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எத்தனை என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 57 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும். ...
ஸ்ரீதேவியின் உடல் தகனம்; திரையுலகினர் அஞ்சலி

ஸ்ரீதேவியின் உடல் தகனம்; திரையுலகினர் அஞ்சலி

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்
இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் இன்று (பிப்ரவரி 28, 2018) தகனம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் திரண்டு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் பிறந்தவர் ஸ்ரீதேவி (55). 4 வயதில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடிக்கச் சென்றவர் அங்கும் தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்தார். அதன் பிறகு பாலிவுட் திரையுலகில் நுழைந்தவர் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அவர் தனது உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றி...
யாருக்கான ஊடகங்கள்?: சிரியா யுத்தமும் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கும்!

யாருக்கான ஊடகங்கள்?: சிரியா யுத்தமும் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கும்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஒட்டுமொத்த இந்திய காட்சி ஊடகங்களும் ஸ்ரீதேவி துக்கத்தில் இருந்து இன்று (பிப்ரவரி 28, 2018) முதல் மெதுவாக விடுபட்டு விடும் என நம்பலாம். பத்திரிகைகளை விடவும் இந்தக் காட்சி ஊடகங்களின் செயல்பாடுகள் ஏன் எப்போதும் வர்க்க நலன் சார்ந்தே இருக்கின்றன என்பது தான் எனக்குப் புரியவில்லை. அரசாங்கங்களை இயக்குவது ஊடகமா? அல்லது ஊடகத்திற்குத் தீனி போடுவது அரசாங்கமா? என்பது புரிந்து விடக்கூடாத அளவில் இரண்டும் திரைமறைவில் கைகோத்து செயல்படுகின்றன. ஒகி புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்களை அனுப்பாத இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான், துபாயில் இருந்து ஸ்ரீதேவியின் சடலத்தைக் கொண்டு வர அம்பானிக்குச் சொந்தமான தனி விமானத்தை ஏற்பாடு செய்து தருகிறார். இந்த அரசியலைப் பற்றியெல்லாம் எந்த ஓர் அச்சு அல்லது மின்னணு ஊடகமும் கண்டுகொள்ளவில்லை. மாறாக, ஸ்ரீதேவியின்...
நீட் தேர்வு:  பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை;  சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

நீட் தேர்வு: பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை; சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகப்பட்ச வயது வரம்புக்கு இடைக்காலத் தடை விதித்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28, 2018) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவும் சிபிஎஸ்இ-க்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 6ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மார்ச் 9ம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. நீட் தேர்வை, பட்டியல் இனப்பிரிவினர் 30 வயது வரை எழுதலாம் என்றும், பொதுப்பிரிவினர்...
அதிகார வெறி கும்பலின் பலிகடா சிரியா!; செத்து மடியும் குழந்தைகள்!!

அதிகார வெறி கும்பலின் பலிகடா சிரியா!; செத்து மடியும் குழந்தைகள்!!

அரசியல், உலகம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
அதிகார வெறி கொண்டு அலையும் நாடுகளின் கையில் சிக்கிய பூமாலையாக கந்தல் கந்தலாகி வருகிறது சிரியா. தொடரும் உள்நாட்டு யுத்தத்தால் கடந்த நான்கு நாள்களில் மட்டும் 150 குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்திருக்கிறது. நீண்ட காலமாக அந்நாட்டு அரசுக்கும், குர்து இன மக்களுக்கும் இடையே சண்டை இருந்து வருக்கிறது. தவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குடைச்சலும் உண்டு. கொத்துக் கொத்தாக செத்து விழும் அப்பாவி மக்கள், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளை தூக்கி வரும் காட்சிகள், குண்டு துளைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள், ஒதுங்க இடமின்றி தவிக்கும் ஏதுமறியா மக்கள் என தொடர்ந்து இணையங்களில் உலா வரும் துயரமான படங்கள், மனித மனங்களை உலுக்கி எடுத்த வண்ணம்...
பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்!

பாலியல் அத்துமீறல்: குழந்தைகள் மீதான தாக்குதலே அதிகம்!

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களில் குழந்தைகள் மீதான தாக்குதல் நிகழ்வுகளே அதிகளவில் காவல்துறையில் பதிவாகி இருப்பது அண்மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலங்கள் பலர், சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர். இதற்காக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, பாலியல் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது வெள்ளை மாளிகையில் மோனிகா லெவின்ஸ்கி என்பவர் பணிப்பெண்ணாக இருந்தார். அவருடன் கிளிண்டன் பாலியல் ரீதியில் தகாத உறவு வைத்திருந்தார் என்ற புகார் எழுந்தது. அதை ஆரம்பத்தில் மறுத்த கிளிண்டன், பின்னர் மோனிகா ஆதாரமாக ஒரு நீல நிற துணியை காட்டியபோது பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நேர்ந்தது. இதையடுத்து, மோனிகா லெவின்ஸ்...
ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

ஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா?; புதிய தகவல்கள்

இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியல் அறையில் உள்ள தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்ததாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவர் போனி கபூர், மற்றும் இரு மகள்களுடன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி திருமண விழா முடிந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். துபாய் நாட்டு நேரப்படி இரவு 11.30 மணியளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தனியார் மருத்துவமனை ஆய்விலும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துபாயில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் சடலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் நீரில் மூழ்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், மரணம் நிகழ்ந்தபோது அவருடைய குருதி...
ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

ஸ்ரீதேவி: உதிர்ந்தது செந்தூரப்பூ….!; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”

இந்தியா, சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விருதுநகர்
ஸ்ரீதேவி: 13-08-1963 - 24-02-2018 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்த அய்யப்பன் - ராஜேஸ்வரி தம்பதி, தங்கள் மகள், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளையடிப்பாள் என ஒருபோதும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்த தம்பதியின் மகள், ஸ்ரீதேவி.   பட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசி ஒரு கந்தக பூமி. அந்த மண்ணில் இருந்து ஒரு கனவுக்கன்னி, ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இந்திய சினிமாவை ஆட்சி செய்திருக்கிறார் என்பதும்கூட நமக்கான அடையாளம்தான். அவர் மரித்துப்போனார் என்பதைக் கூட நம்ப முடியாத வகையில் கோடிக்கணக்கான மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். பால் மனம் மாறாத வயதிலேயே ஸ்ரீதேவி வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். நான்கு வயதிலேயே, 'துணைவன்' படத்தில் முருகன் வேடம். எல்லா...
ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தி அடையாது!: நடிகர்கள் இரங்கல்

ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தி அடையாது!: நடிகர்கள் இரங்கல்

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீரென்று நேற்று இரவு (பிப்ரவரி 24, 2018) மரணம் அடைந்தது, அவருடைய ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. உடன் நடித்த நடிகர்கள் உள்பட திரையுலகைச் சார்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன்: ''மூன்றாம் பிறை பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை, கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்'' என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தனது இரங்கல் செய்தியை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''கடந்த மாதம்கூட ஸ்ரீதேவியை நான் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னை வாஞ்சையுடன் பார்த்ததை கண்களில் கண்டேன். என் க...
நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்;  துபாயில் உயிர் பிரிந்தது

நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்; துபாயில் உயிர் பிரிந்தது

இந்தியா, சினிமா, முக்கிய செய்திகள்
பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது மாரடைப்பால் திடீரென்று காலமானார். அவருக்கு வயது 55. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1963ம் ஆண்டு பிறந்தார் ஸ்ரீதேவி. நான்கு வயதாக இருக்கும்போதே தமிழில் வெளியான 'துணைவன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை தொடங்கினார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தவர், தனது பதினான்காவது வயதில் கே.பாலசந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்து, ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீதேவி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் தடம் பதித்த அவர், இந்தியாவின் கனவுக்கன்னியாக உருவெடுத்தார். அதன்பிறகு பாலிவுட் சினிமா தயாரிப்ப...