Saturday, November 1மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 5000 லஞ்சம்; கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கைது!

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 5000 லஞ்சம்; கொளத்தூர் இன்ஸ்பெக்டர் கைது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  மேட்டூர் அருகே, சேவல் சண்டையை வேடிக்கை பார்த்தவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று (ஆகஸ்ட் 10, 2018) கைது செய்தனர்.   சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள சின்ன தண்டா பகுதியில் ஆகஸ்ட் 3ம் தேதியன்று, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சேவல்கட்டு பந்தயம் நடந்தது. காவல்துறை அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கொளத்தூர் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர்.   காவல்துறையினர் வருவதைப் பார்த்ததும் சேவல்கட்டு நடத்திய போட்டியாளர்கள், பார்வையாளர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களைக்கூட போட்டுவிட்டு தெறித்து ஓடினர். காவல்துறையினர் அங்கிருந்த மோட்டார் சைக்கிள்களை மீட்டு, கொளத்தூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். வாகனத்தைக் கேட்டு சின்ன தண்டாவைச் சேர்ந்த செந்தில் என...
1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

1199 குரூப்-2 பணியிடங்களுக்கு ஆளெடுப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு; பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

சேலம், தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொகுதி-2 பிரிவின் கீழ் வரக்கூடிய 1199 பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப உத்தேசித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று (ஆகஸ்ட் 10, 2018) வெளியிட்டுள்ளது.   அதிகபட்சமாக கூட்டுறவுத்துறையில் 599 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், வேளாண்மைத் துறையில் 118 மேற்பார்வையாளர் / இளநிலை கண்காணிப்பாளர் பணியிடங்களும், உள்ளாட்சித் தணிக்கைத்துறையில் 97 உதவி ஆய்வாளர் பணியிடங்களும், பால் வளத்துறையில் 48 முதுநிலை ஆய்வாளர் பணியிடங்களும், தொழிலக கூட்டுறவு சங்கங்களில் 30 கூட்டுறவு அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.   பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்), நேர்காணல் ஆகிய மூன்று படிநிலைகள் மூலம் இப்ப...
பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?

பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலையில் புதிதாக தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான நியமன வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த முறையாவது வெளிப்படைத்தன்மையுடன் இப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பேராசிரியர்கள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.   சேலம் பெரியார் பல்கலைக்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் அத்தனை நெருங்கிய தொடர்போ என்னவோ.... நிர்வாகம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையிலும் வில்லங்கமும் சேர்ந்தே இணைந்து கொள்கிறது. அண்மைக்காலமாக ஊழலுடன் சாதிய பற்றும் சேர்ந்து கொண்டுள்ளது.   தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான அறிவிப்புதான் லேட்டஸ்ட் வில்லங்கம். இந்தப் பல்கலையில் தேர்வாணையராக பணியாற்றி வந்த பேராசிரியர் லீலா, 2018, பிப்ரவரி மாதம் பணி நிறைவு பெற்றார். அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்கள் முன்பே அதாவது கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே, புதிய தேர்வாணையரை...
கருணாநிதி: சந்தன பேழைக்குள் துயில் கொண்ட சூரியன்!

கருணாநிதி: சந்தன பேழைக்குள் துயில் கொண்ட சூரியன்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக தலைவர் கருணாநிதி விரும்பியபடியே, மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவருடைய உடல் இன்று (ஆகஸ்ட் 8, 2018) மாலை 6.50 மணியளவில் சந்தனப் பேழைக்குள் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்கு அவ்வப்போது மருத்துவமனையிலும், வீட்டிலும் மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.   இந்த நிலையில்தான் கடந்த 11 நாள்களாக காவேரி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வர், தொடர்ச்சியாக 13 முறை சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியே காணாத எம்எல்ஏ என ஓய்வின்றி மக்களுக்கு உழைத்த கருணாநிதியின் நினைவுகள் தப்பின. சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் இறந்தார். தான் மறைந்த பிறகு, மெ...
கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் கலைஞர் தொடாத எல்லைகளே இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என இறுதி மூச்சு வரை பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்தவர். சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் சொல்ல வந்த சேதியை சமயோசிதமாக நகைச்சுவையுடன் சொல்லி, எல்லோரின் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துவிடும் பாங்கு கலைஞருக்கு மட்டுமே உரித்தானது. அரசியல் தளத்தில் அவரை எதிர்ப்போர் கூட அவரின் நகைச்சுவையை விரும்பி ரசிப்பார்கள். கவிஞர் தெய்வச்சிலை, 'கலைஞரின் நகைச்சுவை நயம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவை, விழாக்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டங்களில் கலைஞர் நகைச்சுவையாக சொன்ன 200 தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். 'நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்' இந்த நூலை வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்பில் இருந்து....   * கடவுள் இருக்கிறாரா? இல்லையா?   கடந்த 2006ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் டிவியில் ஒ...
காலமானார் கலைஞர் கருணாநிதி!

காலமானார் கலைஞர் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94.   திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்று வந்தார். உணவுக்குழாயில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டது. இந்நிலையில், திடீரென்று அவருடைய உடல்நலம் மேலும் குன்றியதை அடுத்து, கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவருடைய உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாயின. திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல ஊர்களில் இருந்தும் காவேரி மருத்துவமனை முன்பு விடிய விடிய திரண்டு நின்று, 'எழுந்து வா தலைவா எழுந்து வா தலைவா...' என்று முழக்கமிட்டபடியே இருந்தனர...
எங்களுக்கு குடும்பத்தோடு சமாதி கட்டிவிடுங்கள்!; எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் குமுறல்!!

எங்களுக்கு குடும்பத்தோடு சமாதி கட்டிவிடுங்கள்!; எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் மீண்டும் குமுறல்!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்காக விவசாய நிலத்தை எடுத்துக்கொண்டு அரசு தருவதாகச் சொல்லும் வீட்டு மனைப்பட்டா நிலத்தில் விவசாயிகளுக்கு குடும்பத்துடன் சமாதி கட்டிவிடச் சொல்லுங்கள் என்று வருவாய்த்துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினர்.   எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வீட்டுமனைப் பட்டா நிலத்தில், விவசாயிகளை குடும்பத்தோடு வைத்து சமாதி கட்டிவிடுங்கள் என்று அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையின்போது விவசாயிகள் மீண்டும் குமுறலை வெளிப்படுத்தினர். சேலத்தை அடுத்த குள்ளம்பட்டி கிராமத்தில் நேற்று காலை இருபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள், சேலம் - சென்னை இடையில் அமையவுள்ள எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கினர்.   வாழப்பாடி ...
எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!

எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் நோன்பு இருக்கவும் போலீசார் தடை! 15 விவசாயிகள் திடீர் கைது!!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயிலில் உண்ணாநோன்பு இருக்க முயன்ற 15 விவசாயிகளை போலீசார் இன்று (ஆகஸ்ட் 5, 2018) கைது செய்தனர்.   சேலம் - சென்னை இடையே அமையவுள்ள எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைக்கு எதிராக சேலம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கறவை மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டியும், அம்மனுக்கு பொங்கலிட்டு கோரிக்கை மனு கொடுத்தும் பண்பாட்டுத் தளத்தில் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குள்ளம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயில் வளாகத்தில் இன்று காலை 10.15 மணியளவில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடினர். எட்டு வழிச்சாலையை வரவிடாமல் தடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என்று...
ஜெராக்ஸ் கடைகள் மூலம் லஞ்சம் வசூலித்த சேலம் ஆர்டிஓ அதிகாரிகள்!; விஜிலன்ஸ் சோதனையில் சிக்கினர்

ஜெராக்ஸ் கடைகள் மூலம் லஞ்சம் வசூலித்த சேலம் ஆர்டிஓ அதிகாரிகள்!; விஜிலன்ஸ் சோதனையில் சிக்கினர்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, விஜிலன்ஸ் போலீசில் சிக்கி விடாமல் இருப்பதற்காக லஞ்சப் பணத்தை ஜெராக்ஸ் கடைகள் மூலம் நூதனமுறையில் வசூலித்த ஆர்டிஓ அதிகாரி, பிரேக் இன்ஸ்பெக்டர்கள் வசமாக சிக்கினர்.   சேலத்தை அடுத்த உடையாப்பட்டியில் சேலம் கிழக்கு வட்டாரப் போக்குவரத்து (ஆர்டிஓ) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்தல், உரிமம் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல், பர்மிட் வழங்குதல், தகுதிசான்று வழங்குதல் ஆகிய சேவைகளுக்காக அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து சேலம் மண்டல லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று காலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நேற்று மாலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி சந்திரமவுலி தலைமையிலான போலீசார் கிழக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.   இந்த சோதனையில் மேஜை டிராயர்கள், கோப்புகளின் உள்ப...