Thursday, July 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

டெங்கு அலட்சியம்:  சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

டெங்கு அலட்சியம்: சேலம் சண்முகா மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, டெங்கு வைரஸை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணிகளில் மு டுக்கிவிடப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டத்திலும் ஆட்சியர் ரோகிணி தலைமையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் நடந்து வருகிறது. சேலம் மாநகராட்சிப் பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், உரல், வீசியெறியப்படும் பிளாஸ்டிக் குவளைகள் போன்றவைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீரை...
மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

மெர்சல்: கட் + காப்பி + பேஸ்ட் = அட்லீ

சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்திருக்கும் மெர்சல் திரைப்படம் தமிழ், ஆங்கிலம் உள்பட ஏழெட்டு திரைப்படங்களின் கூட்டுக் கலவையாக வெளிவந்திருப்பதாக எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. மலையாளம், வங்கமொழிப் படங்களைப்போல தமிழ் படங்களில் கதையின் அடர்த்தி வலுவாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ரொம்ப காலமாகவே சொல்லப்படுவது உண்டு. அண்மைக்காலமாக தெலுங்கில் கூட நிறைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழில் இன்னும் அத்தகைய போக்கு வேகமெடுக்கவில்லை. ஆனால், பரீட்சார்த்த முயற்சிகள் அரிதாக முன்னெடுக்கப்படாமலும் இல்லை. இளம் இயக்குநர்களின் 'ஆரண்ய காண்டம்', 'அழகர்சாமியின் குதிரை', 'காக்காமுட்டை', 'குற்றமே தண்டனை', 'குற்றம் கடிதல்', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'குரங்குபொம்மை' போன்ற வித்தியாசமான முயற்சிகள் பரவலாக கவனம் பெற்றன. இந்தப்படங்களில் சில, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றன. ...
ஓபிஎஸ்: தர்ம யுத்தம் ‘2.0’!

ஓபிஎஸ்: தர்ம யுத்தம் ‘2.0’!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மீது உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் தர்ம யுத்தத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என்ற ஊசலாட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, ஜானகி அணி என உடைந்த கட்சி, பிறகு ஜெயலலிதா தலைமையில் வீறு கொண்டு எழுந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று அணிகளாக உடைந்து இருக்கிறது. டெல்லி ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்போது அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. ஆறு மாத காலம் தர்ம யுத்தம் நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியைப் பெற்றுக்கொண்டு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார். துணை முதல்வர் பதவி என்றபோது அவருக்குள் ஒரு சிந்தனை ஓடியிருக்க வேண்டும். ''ஜெயலலிதா 'உள்ளே' சென்றபோதெல்லாம் நாம்தான் நம்பர்-1 ஆக இருந...
மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பற்றிய வசனத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து 'மீம்ஸ்'கள் மூலமாக 'கிழி கிழி' என்று கிழித்து தொங்கவிட்டுள்ளனர். விஜய் நடிப்பில் உருவான 'மெர்சல்' படம், கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏற்கனவே 'ராஜாராணி', 'தெறி' மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீயின் இந்தப்படமும் வெற்றி பெற்றுள்ளது. முன்பு இயக்கிய இரு படங்களிலும் பழைய தமிழ் சினிமாக்களின் கதை, காட்சிகளின் சாயல்கள் இருப்பதுபோல் 'மெர்சல்' படத்திலும் 'அபூர்வ சகோதரர்கள்', 'மூன்று முகம்', 'சிவாஜி', 'ரமணா' ஆகிய படங்களின் சாயல்களும் இருக்கவே செய்கின்றன. படத்தில் இடம்பெற்றுள்ள புறா காட்சிகள், ராஜநாகம் காட்சிகள் குறித்த சந்தேகங்களால் இப்படத்துக்கு தணிக்கை வாரிய சான்றிதழ், விலங்குகள் நலவாரியத்திடம்...
ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!' என்று கரகரப்பான குரலில் ஒலிக்கும் இந்த சொற்களுக்கு மயங்காத திமுக தொண்டர்களே இருக்க முடியாது. இப்படி திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டங்களில் சொல்லும்போது, கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள். தொண்டர்களின் விசில் ஒலியும், கரவொலியும் அடங்க வெகுநேரம் ஆகும். திமுகவினர் சோர்வடையும் போதெல்லாம் அவர்களை உசுப்பிவிடுவது 'என் இனிய உடன்பிறப்புகளே'தான். திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும், கருணாநிதியின் 'டிரெண்டி'யான இந்த பேச்சைக் கேட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. தற்போது, 94 வயதாகும் மு.கருணாநிதி, உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதமாக அவருடைய உடல்நலம் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறத...
உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வானியல் இயற்பியலில் முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற தமிழரான சுப்ரமணியன் சந்திரசேகரின் 107வது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக, கூகுள் நிறுவனம் இன்று (அக். 19, 2017) 'டூடுல்' (Doodle) வெளியிட்டு அசத்தியுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்திருந்த காலக்கட்டத்தில் (பிரிட்டன் இந்தியா) லாகூரில் 19.10.1910ம் தேதி பிறந்தவர் சுப்ரமணியன் சந்திரசேகர். லாகூரில் ஐந்து ஆண்டுகள், பின்னர் லக்னோ நகரில் 2 ஆண்டுகள் வசித்த அவருடைய பெற்றோர், சென்னைக்கு புலம்பெயர்ந்தனர். சந்திரசேகரின் பெற்றோர், சுப்ரமணியன் அய்யர் - சீதாலட்சுமி. 6 சகோதரிகள், 3 சகோதரர்களுடன் பிறந்தவர்தான் சந்திரசேகர். இப்போது இரண்டு வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அப்போது ஓரளவு வசதி படைத்தவர்களுக்கு ஆரம்பக்கல்வி, அவர்களின் வீட்டிலேயே கற்றுக்கொடுக்கப்படும். அப்படித்தான் சந்திரசேகருக்கும். ஆரம்பக்கல்வி வீட்டிலேயே பயிற்று...
கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நிலவேம்பு குடிநீர், டெங்கு காய்ச்சலை தடுக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் இல்லாததால், அதை விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இணையவாசிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் தாக்கம் இருந்து வருகிறது. சுமார் 12000 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல், இன்ன பிற இனம் காண முடியாத காய்ச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், டெங்கு காரணமாக 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுளது. இதற்கிடையே, நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ரத்தத்தில் பிளேட்டிலெட் செல்கள் அதிகரிப்பதாகவ...
‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

‘மெர்சல்’ – படம் எப்படி இருக்கு?

இந்தியா, சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் இன்று (அக். 18, 2017) 3200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது 'மெர்சல்'. நடிப்பு: விஜய், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யராஜ், சத்யன், கோவை சரளா, 'யோகி' பாபு. இசை: ஏ.ஆர்.ரஹ்மான்; ஒளிப்பதிவு: விஷ்ணு; தயாரிப்பு; ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ்; இயக்கம்: அட்லீ. படத்தின் துவக்கத்தில் சென்னையில் அடையாறு, திருவல்லிக்கேணி, போட் கிளப் ஆகிய இடங்களில் மருத்துவத்துறை தொடர்பான ஆட்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் கடத்திக் கொல்லப்படுகின்றனர். இதற்கிடைய பிரான்ஸ் நாட்டிற்குச் செல்லும் விஜய், அங்கு ஒரு மேஜிக் நிகழ்ச்சியை நடத்துகிறார். அந்த அரங்கிலும் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதைத் தொடர்ந்து சத்யராஜ், இந்த கொலைகளுக்குக் காரணம் விஜய்தான் என்ற சந்தேகத்தின்பேரில் அவரை கைது செய்கிறார். உண்மையில் இ...
இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மீது திருப்தி இருந்தாலும், ராணுவ ஆட்சி வந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதிர்ச்சிகரமான எண்ணங்களை இந்தியர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 'பியூ ரிசர்ச்', 38 நாடுகளில் 41955 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. இதில், இந்தியர்களின் மனவோட்டம் பற்றிய சில அதிர்ச்சிகரமான, அதேநேரம் ஆச்சர்யகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில், கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சராசரியாக 6.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்றும் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஆதார் ...
ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன் படம் அச்சிட்டப்பட்டதற்கே தேச விரோத வழக்கு பாயுமெனில், அந்த பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்த எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரும் தேச விரோதிகளா? என நமது எம்ஜிஆர் நாளேடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஈடு இணையற்ற தலைவர்களா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களை சந்திக்குக் கொண்டு வருவதில் இருதரப்புமே சளைத்தவர்கள் அல்ல என்பதைத்தான் அவர்களின் அரசியல் விமர்சனங்கள் உணர்த்துகிறது. தேரை இழுத்து தெருவில் விடுவது என்பார்களே, அப்படி. சேலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியது தொடர்பாக டிவிடி தினகரன் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 36 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்ப...