Monday, October 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டிகள் வாங்கியதிலும் கொள்ளை! போலி கம்பெனிக்கு டெண்டர்!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
குப்பைகளை அள்ளிச் செல்வதற்காக கொள்முதல் செய்யப்பட்ட பேட்டரி வண்டிகளிலும் பல லட்சங்களை ஓசையின்றி வாரிச்சுருட்டி இருக்கிறது சேலம் மாநகராட்சி.  சேலத்தை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவதற்காக கடந்த 2016ம் ஆண்டில் மத்திய அரசு முதல்கட்டமாக 111 கோடி ரூபாய் வழங்கியது. ஆனால், இந்த நிதியை செலவிடாமல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை அடை காத்து வந்தது மாநகராட்சி. மத்திய அரசு ரிவிட் அடித்த பிறகே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதற்கான கன்சல்டன்சியை நியமித்தது.   இத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிப்பதற்காக பேட்டரிகளால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களை கொள்முதல் செய்தது சேலம் மாநகராட்சி. பெரிய பெரிய இரும்பு கலன்களில் உள்ள குப்பைகளை தூக்கி லாரிகளில் கொட்ட ரொம்பவே சிரமப்பட்டு வந்த துப்புரவு தொழிலாளர்கள...
அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்த ஒத்த செருப்பு! – சினிமா விமர்சனம்!

அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்த ஒத்த செருப்பு! – சினிமா விமர்சனம்!

சினிமா, முக்கிய செய்திகள்
தான் செய்த கொலை குற்றங்களில் இருந்து, செய்யாத ஒரு கொலையைச் சொல்லி புத்திசாலித்தனமாக தன்னை காவல்துறையின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் ஒப்புதல் வாக்குமூலம்தான், 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே. பார்த்திபன் பாணியில் சொல்ல வேண்டுமானால், ஒரு நீலப்படத்தில் நடிக்க சன்னி லியோன் போன்ற ஒரே ஒருவர் போதும். ஆனால், ஒத்த செருப்பு போன்ற ஒரு முழு நீளப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பது இந்தியாவில் முதல் முயற்சி.   அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றத்தில் இருக்கும் பார்த்திபனை மட்டுமே, பாப்கார்ன்கூட கொறிக்க விடாமல் திரையில் இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? உண்மையில், ரசிகர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் அவர்களை இருக்கையில் கட்டிப்போட்டு சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன். தமிழ...
சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

சேலம் மாநகராட்சி ஊழியர் ரூ.88 லட்சம் சுருட்டல்! பரபரப்பு தகவல்கள் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஒருவர், போலி காசோலைகள் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டியிருக்கும் பகீர் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.   சேலம் கருங்கல்பட்டி கலைஞர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். இவருடைய மகன் வெங்கடேஷ் (38). சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில், கடந்த 2000ம் ஆண்டு முதல் துப்புரவு ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். கொண்டலாம்பட்டி மண்டலத்தில் முதல்நிலை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், குப்பை வண்டி ஓட்டுநர்கள் என 1500 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்காக மாதம் 3 கோடி ரூபாய் வரை சம்பள செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மண்டல ஊழியர...
சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!

சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்கும் விதமாக அடுத்தடுத்து மேலும் சில அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற தகவலால் ஒரு கிராமமே திகிலடைந்து கிடக்கிறது.   சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி வசந்தி. கூலித்தொழிலாளிகளான இவர்களின் ஒரே மகன் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இறுதியாண்டு படித்து வந்தார். செப்., 5ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன் நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து 20 அடி தூரம் நடந்து சென்ற அவரை வழிமறித்த ஒரு கும்பல் கொடூரமாக குத்திக் கொன்றிருக்கிறது. மகனை யாரோ சிலர் மிரட்டியபடியே, 'அவன இங்கேயே போட்டுத்தள்ளுங்கடா...' என்றுகூற, வீட்டில் இருந்து...
மேட்டூர் அணை நிரம்பியது! 43வது முறையாக 120 அடியை தொட்டது!

மேட்டூர் அணை நிரம்பியது! 43வது முறையாக 120 அடியை தொட்டது!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மேட்டூர் அணை இன்று (செப். 7) மதியம் 1.09 மணியளவில் முழு கொள்ளளவை எட்டியது. 43வது முறையாக அணை முழுவதும் நிரம்பியுள்ளது விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை, தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இந்த அணை நிரம்பினால், காவிரி படுகையையொட்டி உள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். எனினும் இந்த அணையின் நீர் இருப்பு என்பது, கர்நாடகாவின் கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர் கொள்ளளவைப் பொருத்தும், அந்த மாநிலத்தில் பெய்யும் மழையின் அளவைப் பொருத்தும் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி நிலவரப்படி, மேட்டூர் அணை 100 அடியை எட்டியது. அதையடுத்து, டெல்டா பாசனத்திற்காக அணையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ...
நிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது?

நிலவில் இறங்கியாச்சு…மலக்குழிக்குள் இருந்து மனிதர்களை மீட்பது எப்போது?

இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
சந்திரயான் விண்கலம் நிலவில் கால் பதித்ததை கொண்டாடும் அதே இந்திய ஒன்றியத்தில்தான், இன்னும் மலக்குழிகளில் மனிதர்களை இறக்கி விடப்படும் அவலங்களும் தொடர்கின்றன என்ற கூக்குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன.   இந்தியாவில், நடப்பு ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சாக்கடைக் குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் 50 பேர் விஷ வாயு தாக்கி பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப், குஜராத், மஹராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த உயிர்பலிகள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது, தேசிய துப்புரவு தொழிலாளர்கள் ஆணையம் (National Commission of Safai Karamcharis - NCSK). உண்மையில், பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.   ஏனெனில், கழிவுந...
நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!

நீங்கள் யாரையாவது பழிவாங்கணுமா? சாஹோ படத்திற்கு டிக்கெட் வாங்கி கொடுங்க!

சினிமா, முக்கிய செய்திகள்
சர்வதேச நிழல் உலக தாதா ஒருவர் திடீரென்று எதிரிகளால் கொல்லப்படுகிறார். அவருக்குப் பிறகு நிழல் உலகை ஆளப்போவது யார்? என்பதுதான் சாஹோ படத்தின் ஒரு வரி கதை. ஒரு கமர்ஷியல் படத்திற்கு இந்தக் கதையே போதுமானதுதான். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் பெற்ற பெரு வெற்றி காரணமாக பிரபாஸ் மீது ரொம்பவே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதற்காக வலுவான கதையோ, திரைக்கதையோ இல்லாமல் வெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே கட்டி எழுப்பி படத்தைக் கட்டமைக்க முடியுமா? பிரபாஸ் இருந்தாலே போதும், போட்ட பணத்தை கல்லா கட்டிவிட முடியும் என நம்பி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் சுஜீத்.   கதைப்படி (கதை என்று ஒன்று இல்லை. ஆனாலும் 'ஒரு ஊர்ல...' என்று சொன்னால்தானே கதை வரும்? அதுபோலதான் 'கதைப்படி' என்பதும்), பிரபாஸ் அண்டர் கவர் ஆபரேஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரி. நமக்கு தெர...
டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

டிகிரி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் உதவித்தொகை!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
(தகவல்)   'பிச்சை புகினும் கற்கை நன்றே' என்பதுதான் அவ்வை வாக்கு. பொருளாதார நெருக்கடிகள் கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு எந்த விதத்திலும் தடைக்கல்லாக இருந்து விடக்கூடாது என்பதற்காகவே, மத்திய அரசு உதவித்தொகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மத்திய அரசின் பல உதவித்தொகைத் திட்டங்கள் மாணவர்களுக்கு தெரிவதில்லை அல்லது கல்வி நிலையங்கள் அதுபற்றி பெரிதாக அக்கறை காட்டுவதில்லை.   அது என்ன திட்டம்? பிளஸ்-2 முடித்துவிட்டு, நடப்புக் கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்.   தகுதிகள் என்னென்ன?:   1. பிளஸ்-2வில் 80 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்   2. பிளஸ்-2வை பள்ளியில் சேர்ந்து பயின்றிருக்க வேண்டும். தனித்தேர்வராகவோ, தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலமோ படித்திர...
உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!

உலகக்கோப்பை ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை!

உலகம், கடலூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விளையாட்டு
பிரேசிலில் நடந்த துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைஃபிள்) போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் கடலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவன். அவருக்கு உலகம் முழுவதும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.   பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில், தற்போது மூத்தோர்களுக்கான உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் (ஏர் ரைஃபிள்) போட்டி நடந்து வருகிறது. உலகம் முழுவதும் 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.   நேற்று (ஆகஸ்ட் 28, 2019) நடந்த இறுதிப்போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன், 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இரண்டாம் இடத்தை, பிரிட்டனை சேர்ந்த வீராங்கனை சியோனட் மின்டோஸ் பெற்றார். அவர் 250.6 புள்ளிகள் எடுத்தார்....
8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

8 லட்சம் கடனுக்கு 6 கோடி ரூபாய் சொத்தை வளைத்துப்போட்ட சங்ககிரி தொழில் அதிபர்கள் கைது! சிபிசிஐடி போலீசார் அதிரடி!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
FOLLOW-UP   சங்ககிரியில், எட்டு லட்சம் ரூபாய் கடனுக்கு 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சட்ட விரோதமாக கிரயம் செய்துகொண்ட பிரபல தொழில் அதிபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.   சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள காவடிக்காரனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). விவசாயி. மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவர், சங்ககிரியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர்களான சண்முகம், அவருடைய தம்பி மணி ஆகியோரிடம் கடந்த 1998ம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். புதிதாக டிப்பர் லாரிகள் வாங்குவதற்காக கடன் பெற்றிருந்தார். 3 ரூபாய் வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர்.   இதற்காக அவரிடம் இருந்து சண்முகமும், மணியும் 23 ஏக்கர் நிலத்தை 'பவர்' பத்திரம் எழுதி பெற்றுக்கொண்டனர். மேலும், வெங்கடேசன் தனித்தனியாக மூன்று வெற்றுக் காசோலைகளிலும், ஒரு வெற்று பாண்டு பத்திரத்தில...