Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: DMK leader

கருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா?

கருணாநிதி திருட்டு ரயிலேறிதான் சென்னைக்கு வந்தாரா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்திய அளவில் இன்றைக்கு தமிழகம் கல்வி, தொழில்துறை, விவசாயம் என பல துறைகளிலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பரவலான, நீடித்த வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அதில் திமுகவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. சமூகநீதி முதல் இன்றைக்கு காவி அரசாங்கம் அமல்படுத்தியுள்ள மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட திட்டங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி.   எப்போதும் முன்னோக்கிச் சிந்திக்கக் கூடிய அபார ஆற்றல் வாய்ந்தவர். என்னதான் தமிழ் மொழி, தமிழர்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டாலும் திமுக மீதும், கருணாநிதி மீதும் சர்க்காரியா கமிஷன், திருட்டு ரயிலேறி வந்தவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் வரையிலான ஊழல் புகார்கள் அன்று முதல் இன்று வரை சூழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர் வாங்கி வந்த வரம் (?!) அப்படி. திமுக மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை. என்றாலும், எதிர்க்கட்சிகளால் திமுகவுக்
தமிழை கொலை செய்யும் ஊடகங்கள்! நாஞ்சில் சம்பத் ‘நறநற!!’

தமிழை கொலை செய்யும் ஊடகங்கள்! நாஞ்சில் சம்பத் ‘நறநற!!’

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழ்நாட்டில் உள்ள எல்லா காட்சி ஊடகங்களும் திட்டமிட்டு தமிழ்க்கொலை செய்வதாகவும், அதனாலேயே ஊடக விவாதங்களில் பங்கேற்க விரும்புவதில்லை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.   இலக்கிய மேடை, அரசியல் மேடை என இரட்டை குதிரையில் சவாரி செய்து வந்த தரமான சொற்பொழிவாளர்களுள் ஒருவரான நாஞ்சில் சம்பத், அரசியல் களத்தை விட்டு வெறியேறி விட்டதாக கடந்த ஆண்டு கூறினார். மதிமுக தலைவர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அக்கட்சியில் இருந்து வெளியேறி, சில காலம் ஒதுங்கி இருந்தார். பின்னர் ஜெயலலிதாவின் அழைப்பை ஏற்று அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர் கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே துணை கொள்கைபரப்பு செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. சுற்றுப்பயணம் மேற்கொள்ள வசதியாக அவருக்கு ஜெ., புதிதாக இன்னோவா கார் ஒன்றும் பரிசாக வழங்கினார். இன்னோவா காருக்காக அதிமுகவ
கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கட்சியின் தலைமைப் பதவிக்கு கொல்லைப்புறமாக வந்தவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுக்கு சேலத்தில் இன்று (செப். 25, 2018) நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.   கண்டன பொதுக்கூட்டம்   திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் இன்று மாலை அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது:   ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் போர் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மூன்றரை மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். அதை நம்பி ஈழத்தில் பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் வெளியே வந்தனர். அவர்கள் மீது ராஜபக்சே குண்டுமழை பொழிந்து லட்சக்கணக
ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

ஸ்டாலின் அடித்த சிக்ஸர்!; கன்னி உரையில் கனல் கக்கிய ‘தலைவர்’!! #DMK #MKStalin

அரசியல், சென்னை, தமிழ்நாடு, திண்ணை, முக்கிய செய்திகள்
  திமுக தலைவராக பதவியேற்ற பின்னர் நிகழ்த்திய முதல் உரையிலேயே, 'பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறதா திமுக?' என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களைக்காக்க தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்து, முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் இன்று ஈர்த்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (ஆகஸ்ட் 28, 2018) அக்கட்சியின் தலைவராக மகுடம் சூடினார். சென்னை அறிவாலயத்தில் இன்று நடந்த பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்தார். இதுவரை ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு, தலைமை நிலையச் செயலாளரான துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   கருணாநிதி மறைந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ம
கருணாநிதி: சந்தன பேழைக்குள் துயில் கொண்ட சூரியன்!

கருணாநிதி: சந்தன பேழைக்குள் துயில் கொண்ட சூரியன்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  திமுக தலைவர் கருணாநிதி விரும்பியபடியே, மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அவருடைய உடல் இன்று (ஆகஸ்ட் 8, 2018) மாலை 6.50 மணியளவில் சந்தனப் பேழைக்குள் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குன்றியதால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவருக்கு அவ்வப்போது மருத்துவமனையிலும், வீட்டிலும் மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.   இந்த நிலையில்தான் கடந்த 11 நாள்களாக காவேரி மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வர், தொடர்ச்சியாக 13 முறை சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியே காணாத எம்எல்ஏ என ஓய்வின்றி மக்களுக்கு உழைத்த கருணாநிதியின் நினைவுகள் தப்பின. சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் இறந்தார். தான் மறைந்த பிறகு, மெ
கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

கருணாநிதி: நகைச்சுவையிலும் சக்கரவர்த்திதான்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
திமுக தலைவர் கலைஞர் தொடாத எல்லைகளே இல்லை. கலை, இலக்கியம், அரசியல் என இறுதி மூச்சு வரை பல தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்தவர். சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் சொல்ல வந்த சேதியை சமயோசிதமாக நகைச்சுவையுடன் சொல்லி, எல்லோரின் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்துவிடும் பாங்கு கலைஞருக்கு மட்டுமே உரித்தானது. அரசியல் தளத்தில் அவரை எதிர்ப்போர் கூட அவரின் நகைச்சுவையை விரும்பி ரசிப்பார்கள். கவிஞர் தெய்வச்சிலை, 'கலைஞரின் நகைச்சுவை நயம்' என்ற தலைப்பில் சட்டப்பேரவை, விழாக்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, கட்சிக் கூட்டங்களில் கலைஞர் நகைச்சுவையாக சொன்ன 200 தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட்டு இருக்கிறார். 'நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்' இந்த நூலை வெளியிட்டுள்ளது. அந்த தொகுப்பில் இருந்து....   * கடவுள் இருக்கிறாரா? இல்லையா?   கடந்த 2006ம் ஆண்டு, அக்டோபர் மாதம் சன் டிவியில் ஒ
காலமானார் கலைஞர் கருணாநிதி!

காலமானார் கலைஞர் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று (ஆகஸ்ட் 7, 2018) மாலை 6.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 94.   திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாகவே உடல்நலம் குன்றி, சிகிச்சை பெற்று வந்தார். உணவுக்குழாயில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டது. இந்நிலையில், திடீரென்று அவருடைய உடல்நலம் மேலும் குன்றியதை அடுத்து, கடந்த 11 நாள்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு அவருடைய உடல்நலம் மேலும் மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாயின. திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், முக்கிய தளகர்த்தர்கள் அனைவரும் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல ஊர்களில் இருந்தும் காவேரி மருத்துவமனை முன்பு விடிய விடிய திரண்டு நின்று, 'எழுந்து வா தலைவா எழுந்து வா தலைவா...' என்று முழக்கமிட்டபடியே இருந்தனர
ஒரு பழமொழி… ஓஹோனு டிரெண்டிங்!; இந்திய அளவில் முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்!#ஸ்டாலின்_பழமொழி

ஒரு பழமொழி… ஓஹோனு டிரெண்டிங்!; இந்திய அளவில் முதலிடம் பிடித்தார் மு.க.ஸ்டாலின்!#ஸ்டாலின்_பழமொழி

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொது நிகழ்ச்சியில் ஒரே ஒரு பழமொழியைக் கூறியதன் மூலம் இன்று (மார்ச் 23, 2018) இந்திய அளவில் ட்விட்டர் சமூக ஊடகத்தில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.     பொதுக்கூட்டமோ, பொதுநிகழ்ச்சிகளோ அரசியல்வாதிகள் குறிப்பு எழுதி வைத்துக்கொண்டு பேசுவது என்பது உலகளவில் நடைமுறையில் இருந்து வருவதுதான். தமிழ்நாட்டு அரசியலைப் பொருத்தவரை, திமுக தலைவர் கருணாநிதி மேடைகளில் பேசும்போது எழுதி வைத்துக்கொண்டு பேசுவதில்லை. எத்தனை ஆண்டுகால வரலாறாக இருந்தாலும், அவர் மூளைக் கிடங்கில் இருந்து துல்லியமான தகவல்கள் சுரந்து கொண்டே இருக்கும்.     கருணாநிதிக்கு நேர் எதிரானவர் ஜெயலலிதா. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கையின்றி அவர் மேடையேறுவதே இல்லை. ஆனால் ஒரு பிரபலத்தின் வாரிசாக இருப்பதில் நிறையவே சங்கடங்கள் நிறைந்தது. பெற்றோர் பயணித்த அதே
2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த  நீதிபதி ஓ.பி.சைனி யார்?;  “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”!!

2ஜி வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஓ.பி.சைனி யார்?; “ஊழலுக்கு எதிரான கறார் கந்தசாமியாம்”!!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, ஊழலுக்கு எதிராக ரொம்பவே கறார் காட்டக்கூடிய நீதிபதி என்றும், காவல்துறையில் உதவி ஆய்வாளராக இருந்து நீதித்துறைக்கு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை சமர்ப்பித்தது. இது தொடர்பாக அப்போது கூட்டணியில் இருந்த திமுக அமைச்சர் ஆ.ராஜா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வந்தது. மத்திய கணக்குத் தணிக்கைத்துறை ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறியிருந்தாலும், சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்
அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு, நிலைகுலைந்த அதிமுக அரசாங்கம் போன்ற சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை இன்று (நவம்பர் 6, 2017) கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்குள் எந்த வகையிலாவது நுழைந்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 சதவீத பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்ட பாஜகவுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு கடுமையான சவால்களை கொடுத்து வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது பெருங்கனவு; இப்போதைக்கு ஒன்றிரண்டு பேரையாவது எம்எல்ஏ ஆக்குவோம் என்பதுதான் அ க்கட்சியின் திட்டம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியில் இருந்தே இன்னும் எவ்வளவு நாள்தான் கூவிக்கொண்டிருக்க முடியும்?. பாஜகவின் திட்டங்களை செயல்படுத்த