Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம்
மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
புதிய முதல்வராக இருதயவியல் துறை
மருத்துவர் திருமால்பாபு (55)
இன்று (ஜனவரி 29, 2019)
பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம்
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
முதல்வராக பணியாற்றி வந்த கனகராஜ்,
கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, ஜூலை 5, 2018ம் தேதி,
பிளாஸ்டிக் சர்ஜரி துறை மூத்த மருத்துவர்
எம்.கே.ராஜேந்திரன் தற்காலிக
முதல்வராக பொறுப்பேற்றார்.

 

சேலம் மட்டுமின்றி, முதல்வர் பணியிடம்
காலியாக இருந்த தஞ்சாவூர், தேனி,
தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய
ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனைகளுக்கும் புதிதாக
முழுநேர முதல்வர்களை நியமித்து,
தமிழக அரசு கடந்த ஆண்டு
செப். 12ம் தேதி உத்தரவிட்டது.

அப்போது, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை முதல்வராக வேலூர்
அரசு மருத்துவமனையில் இருதயவியல்
துறைத்தலைவராக பணியாற்றிக்
கொண்டிருந்த மருத்துவர் திருமால்பாபு
நியமிக்கப்பட்டார். சேலம் தவிர மற்ற
இடங்களில் புதிய முதல்வர்கள்
உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சொந்த அலுவல்கள் காரணமாக
திருமால்பாபு, முதல்வர் பணியில்
சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.

 

அதேநேரம், வேலூர் அரசு
மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம்
சிகிச்சைக்குத் தேவையான ‘கேத்லேப்’
அமைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
அப்பணிகளையும் வெற்றிகரமாக
முடித்துவிட்ட திருமால்பாபு,
சேலம் அரசு மருத்துவமனையின்
புதிய முதல்வராக இன்று காலை
பொறுப்பேற்றுக் கொண்டார்.
சக மருத்துவர்கள், ஊழியர்கள்
அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

நோயாளிகளுக்கு காலதாமதமின்றி
சிறப்பான சிகிச்சை அளிக்கவும்,
மருத்துவமனையை மேம்படுத்தவும்
எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம்
என்று அவர் கூறினார்.

 

புதிய முதல்வரைப் பற்றி…

 

பெயர்: திருமால்பாபு

வயது: 55

சொந்த ஊர்: பேர்ணாம்பட்டு கிராமம், வேலூர் மாவட்டம்.

மனைவி: ஜெயஸ்ரீ, அரசு மகப்பேறு மருத்துவர்.

குழந்தைகள்: ஒரு மகன், ஒரு மகள். இருவரும் பெங்களூரில் மருத்துவம் படிக்கின்றனர்.

மொத்த அரசுப் பணி அனுபவம்: 29 ஆண்டுகள்.

இருதயவியலில் அனுபவம்: 23 ஆண்டுகள்.

நிர்வாக அனுபவம்: ஏஆர்எம்ஓ, டிஎஸ் பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.

 

– பேனாக்காரன்.